HAI FRIENDS PLEASE CLICK THE ADD.
Showing posts with label nayanthara. Show all posts
Showing posts with label nayanthara. Show all posts

Tuesday, 15 May 2012

ஆண்களை நம்பி பெண்கள் இல்லை!...................நயன்தாரா!!!

  

                                               ஆண்‌களை நம்பி வாழ வேண்டிய கட்டாயம் பெண்களுக்கு இல்லை என்று கூறியுள்ளார் நடிகை நயன்தாரா. பிரபுதேவாவுடனான காதல் கசந்த பிறகு மீண்டும் சினிமாவில் புத்துணர்ச்சியோடு காணப்படுகிறார் நடிகை நயன்தாரா. 


                                                முன்பை காட்டிலும் ரொம்ப தெளிவாகவும், கவனமாகவும் இருக்கிறார். ஒவ்வொரு படங்களையும் பார்த்து பார்த்து, தேர்வு செய்து நடிக்கிறார். தமிழ், தெலுங்கு தவிர இப்போது கன்னடத்தில் நடிக்க அழைப்பு வந்த வண்ணம் இருக்கிறது.

                                         சொந்தகாலில் நின்று சம்பாதித்து வருகிறேன். அதனால் பணக்கஷ்டமும் கிடையாது. சினிமா எனக்கு நிறைய விஷயங்களை கற்று கொடுத்து இருக்கிறது. நானும் சில தவறுகள் செய்துவிட்டேன். தவறுகளிலிருந்துதானே பாடம் கற்கிறோம். 


                                        அதுவே நம் வாழ்க்கையில் மாற்றங்களை ஏற்படுத்தி முன்னேற்றத்தை ஏற்படுத்தி தருகிறது. முன்பு தான் ஆண்களை நம்பி பெண்கள் வாழ வேண்டிய கட்டாயம் இருந்தது. ஆனால் இப்போது அப்படி இல்லை. காலம் மாறிப்போச்சு. 


                                          இன்றைய காலகட்டத்தில் பெண்களும், ஆண்களுக்கு நிகராக அனைத்து துறைகளிலும் சாதிக்கிறார்கள், பொருளாதாரத்திலும் முன்னேற்றம் கண்டு இருக்கிறார்கள். ஆண்களை நம்பித்தான் வாழவேண்டும் என்று கட்டாயம் இன்றைய பெண்களுக்கு இ‌ல்லை என்று கூறியுள்ளார்.