HAI FRIENDS PLEASE CLICK THE ADD.
Showing posts with label rajakumaran. Show all posts
Showing posts with label rajakumaran. Show all posts

Wednesday, 11 July 2012

திருமண சட்டத்தை மாற்றி புதிதாக எழுத,,,,,நடிகை தேவயானி.



                               சில பல ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ் சினிமாவில் முன்னணி நாயகியாக வலம் வந்தவர் நடிகை தேவயானி. டைரக்டர் ராஜகுமாரனை காதலித்து திருமணம் செய்து கொண்ட பின்னர் சினிமா வாய்ப்புகளை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து கொண்டார். 

                               


                                                           இப்போது முழுநேர சீரியல் நடிகையாக மாறிவிட்ட தேவயானி நீண்ட இடைவேளைக்கு பிறகு மீண்டும் ஒரு படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார். தேவயானியின் கணவர் ராஜகுமாரன் திருமதி தமிழ் என்ற படத்தை இயக்கி, அதில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார். இப்படத்தில் தனது மனைவி தேவயானியையே தனக்கு ஹீரோயினாக்கியுள்ளார்.  

                           



                                    திருமண சட்டத்தை மாற்றி புதிதாக எழுத வேண்டும் என்ற கருவை அடிப்படையாக கொண்ட கதையாகும் திருமதி தமிழ். இப்படத்தில் ராஜகுமாரன், தேவயானியுடன் லிவிங்ஸ்டன், ரமேஷ் கண்ணா, கஞ்சா கருப்பு, சாருஹாசன், பாண்டு, ரோகிணி, கீர்த்தி சாவ்லா உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். எஸ்.ஏ.ராஜ்குமார் இசையமைக்கிறார். 

                          மிக நீண்ட இடைவெளிக்கு பிறகு, தேவயானி ஹீரோயினாக நடிக்கும் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.