HAI FRIENDS PLEASE CLICK THE ADD.
Showing posts with label அல்லு சிரிஷ். Show all posts
Showing posts with label அல்லு சிரிஷ். Show all posts

Tuesday, 29 May 2012

டூயட் மூவிஸ் நிறுவனத்தின் மூலம் தயாரிக்கும் புதிய படம் 'கெளரவம்'.



                                                                         பிரகாஷ்ராஜ், தனது டூயட் மூவிஸ் நிறுவனத்தின் மூலம் தயாரிக்கும் புதிய படம் 'கெளரவம்'. இப்படத்தை ராதாமோகன் இயக்குகிறார்.
 பிரகாஷ்ராஜ் தயாரிப்பில், ராதா மோகன் இயக்கும் 'கெளரவம்' 
                                                                      பிரகாஷ்ராஜ் தயாரிப்பில் 'அழகிய தீயே', 'மொழி', 'பயணம்', 'அபியும் நானும்' ஆகியப் படங்களை இயக்கிய ராதாமோகன், ஐந்தாவதாக இயக்கும் படம் 'கெளரவம்'. தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் இப்படத்தில் தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியின் தங்கை மகனும், தெலுங்கு முன்னணி நடிகர் அல்லு அர்ஜூனின் தம்பியுமான அல்லு சிரிஷ், ஹீரோவாக அறிமுகமாகிறார். 



                                                                     இதில் ஹீரோயினாக ஹிந்தியில் சமீபத்தில் வெளியான 'விக்கி டோனர்' படத்தில் நடித்த யாமி கெளதம் நடிக்கிறார். இவர்களுடன் பிரகாஷ்ராஜ், நாசர், குமரவேல், ஸ்ரீ சரண் மற்றும் பல முன்னனி நடிகர்கள் நடிக்கிறார்கள்.

                                                                எஸ்.எஸ்.தமன் இசைமைக்கும் இப்படத்திற்கு விஜி வசனம் எழுதுகிறார். ப்ரித்தா ஒளிப்பதிவு செய்கிறார். கே.கதிர் கலை இயக்குநராக பணியாற்றுகிறார்.

                                                             இப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஜூன் மாதம் 18ஆம் தேதியன்று மைசூரில் துவங்குகிறது. (டிஎன்எஸ்)