பிரகாஷ்ராஜ், தனது டூயட் மூவிஸ் நிறுவனத்தின் மூலம் தயாரிக்கும் புதிய படம் 'கெளரவம்'. இப்படத்தை ராதாமோகன் இயக்குகிறார்.
பிரகாஷ்ராஜ் தயாரிப்பில் 'அழகிய தீயே', 'மொழி', 'பயணம்', 'அபியும் நானும்' ஆகியப் படங்களை இயக்கிய ராதாமோகன், ஐந்தாவதாக இயக்கும் படம் 'கெளரவம்'. தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் இப்படத்தில் தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியின் தங்கை மகனும், தெலுங்கு முன்னணி நடிகர் அல்லு அர்ஜூனின் தம்பியுமான அல்லு சிரிஷ், ஹீரோவாக அறிமுகமாகிறார்.
எஸ்.எஸ்.தமன் இசைமைக்கும் இப்படத்திற்கு விஜி வசனம் எழுதுகிறார். ப்ரித்தா ஒளிப்பதிவு செய்கிறார். கே.கதிர் கலை இயக்குநராக பணியாற்றுகிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஜூன் மாதம் 18ஆம் தேதியன்று மைசூரில் துவங்குகிறது. (டிஎன்எஸ்)
No comments:
Post a Comment