HAI FRIENDS PLEASE CLICK THE ADD.

Monday, 18 June 2012

1006 ஜோடிகளுக்கு இலவச திருமணம் முதல்வர் ஜெயலலிதா நடத்தி வைத்தார்

                                                     தமிழக அரசின் இந்து அறநிலையத்துறை சார்பில் 1006 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடத்தி வைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக தமிழ்நாடு முழுவதும் இந்த துறை மூலம் ஏழை- எளிய புதுமண ஜோடிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

                                
     புதுமண ஜோடிகள் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் நேற்று தனி பஸ்களில் சென்னை அழைத்து வரப்பட்டனர். அவர்களுடன் மணமக்களின் தாய்-தந்தை மற்றும் உறவினர்கள் 8 பேரும் வந்தனர். அனைவரும் திருமண மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டனர். இவர்களுக்கான தங்கும் இடம் மற்றும் உணவு உள்பட அனைத்து ஏற்பாடுகளும் இந்து அறநிலையத்துறை சார்பில் செய்யப்பட்டு இருந்தது.

                             சிறப்புமிக்க இந்த திருமண விழா திருவேற்காட்டில் நடந்தது. இதற்காக திருவேற்காடு கருமாரியம்மன் கோவில் அருகே 4 ஏக்கர் நிலத்தில் பிரமாண்டபந்தல் அமைக்கப்பட்டு இருந்தது. 550 அடி அகலம் 30 அடி நீளம் கொண்ட இந்த பந்தலில் 19 ஆயிரம் பேர் அமரும் வகையில் அமைக்கப்பட்டு அதில் திருமண விழாவுக்கு வரும் அனைவருக்கும் நாற்காலிகள் போடப்பட்டிருந்தன. பந்தலில் குடிநீர் வசதி அருகில் சுகாதார வசதிகள் செய்யப்பட்டு இருந்தன.

                   முதல்-அமைச்சர் ஜெயலலிதா விழாவில் பங்கேற்பதற்காக பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டிருந்தது. மேடையின் இடதுபுறத்தில் சீர்வரிசை பொருட்கள் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தன. வலதுபுறத்தில் புரோகிதர்கள் மகுண்டம் வளர்த்து மந்திரம் ஓதினார்கள்.

                   மேடையின் எதிரே மணமக்கள் ஜோடியாக நாற்காலிகளில் அமர வைக்கப்பட்டு இருந்தனர். மணமகள்கள் அவர்களுக்கு வழங்கப்பட்ட பட்டுசேலை ரவிக்கைகளையும் மணமகன்கள் பட்டுசட்டை வேட்டி துண்டு ஆகியவற்றையும் அணிந்து இருந்தனர்.

                 காலை 8 மணி அளவிலேயே மணமக்கள் வரவழைக்கப்பட்டு இருக்கைகளுக்கு வந்துவிட்டனர். உறவினர்களும் திருமணத்தை காண வந்திருந்தவர்களும் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இருக்கைகளில் இருந்தனர்.

             4 கிராம் தங்க தாலியுடன் மங்கல நாண்கள் தயாராக வைக்கப்பட்டு இருந்தன. மேடையும் பந்தலும் மலர்களாலும் தோரணங்களாலும் அலங்கரிக்கப்பட்டு இருந்தன.

                முதல்-அமைச்சர் ஜெயலலிதா சரியாக 9.30 மணிக்கு மணவிழா பந்தலுக்கு வந்தார். அவருக்கு பால்வளத்துறை அமைச்சர் மாதவரம் மூர்த்தி தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

           விழாவுக்கு சபாநாயகர் ஜெயக்குமார் தலைமை தாங்கினார். மிழக அரசு தலைமை செயலாளர் தேபேந்திரநாத் சாரங்கி வரவேற்று பேசினார். இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம். ஆனந்தன் வாழ்த்துரை வழங்கினார்.

                    முதல்-அமைச்சர் ஜெயலலிதா 1006 தாலிகளை தொட்டு வழங்கினார். மணமகன்களிடம் தாலி கொடுக்கப்பட்டன. வேதமந்திரம் ஓத 9.40 மணிக்கு கெட்டிமேளம் நாதசுரம் முழங்க ஒவ்வொரு மணமகனும் தங்கள் மணமகள் கழுத்தில் தாலி கட்டினார்கள். மாலைகளையும் மாற்றிக் கொண்டனர்.

                முதல்-அமைச்சர் ஜெயலலிதா மேடையில் இருந்தபடியே மணமக்களுக்கு அட்சதை தூவி வாழ்த்தினார். மணமக்களுக்கு 21 வகையான சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டன. மணமகள்களுக்கு அணிய வெள்ளி மெட்டிகளும் கொடுக்கப்பட்டன.

No comments:

Post a Comment