HAI FRIENDS PLEASE CLICK THE ADD.
Showing posts with label தெலுங்கு..... Show all posts
Showing posts with label தெலுங்கு..... Show all posts

Thursday, 27 October 2011

வேட்டை மன்னன் படத்தில் கவர்ச்சி நாயகியாக.... ஹன்ஷிகா மோத்வானி

      தசாவதாரம், எந்திரன், ஏழாம் அறிவு, படங்களைத் தொடர்ந்து தற்போது கமல் இயக்கி நடிக்கும் விஸ்வரூபம், மிஷ்கின் இயக்கும் முகமுடி, அறிமுக இயக்குனர் நெல்சன் இயக்கும் வேட்டை மன்னன் ஆகிய படங்கள் தலா 40 கோடி பட்ஜெட்டில் உருவாகின்றன.



இதில் சிம்புவின் வேட்டை மன்னன் படத்துக்கு ஹாலிவுட் ஆக்‌ஷன் இயக்குனர்கள் பணியாற்றுகிறார்கள். சில காட்சிகளுக்கு பானா விஷன் கேமரா பயன்படுத்த இருக்கிறார்கள். இந்தப் படத்தில் கூலிக்கு கொலைசெய்யும் சர்வதேசக் கொலைகாரணாக சிம்பு நடிக்கிறார். நண்பனை கொலைசெய்யும் கூலிப்படையை போட்டுத்தள்ளும் சிம்பு, பிறகு சர்வதேச மாபியாகவாக எப்படி மாறினான் என்பதுதான் கதை. இதில் சிம்புவின் நண்பர்களாக ஜெய், சந்தானம் நடிக்கிறார்கள்.

முழுநீள ஆக்‌ஷன் படமாக உருவாகும் இந்தப் படத்தில் இரண்டு ஹீரோயின்கள். தெலுங்கு பட நாயகி தீக்‌ஷா சேத் முதல் நாயகியாகவும், இரண்டாவது ஹீரோயினாக ஹன்ஷிகா மொத்வானியும் ஒப்பந்தம் செய்யப்பட்டிருகிறார்கள். இந்தப் படத்தில் ஹன்ஷிகா கவர்ச்சி நாயகியாக நடிக்கிறாராம்.