இதில் சிம்புவின் வேட்டை மன்னன் படத்துக்கு ஹாலிவுட் ஆக்ஷன் இயக்குனர்கள் பணியாற்றுகிறார்கள். சில காட்சிகளுக்கு பானா விஷன் கேமரா பயன்படுத்த இருக்கிறார்கள். இந்தப் படத்தில் கூலிக்கு கொலைசெய்யும் சர்வதேசக் கொலைகாரணாக சிம்பு நடிக்கிறார். நண்பனை கொலைசெய்யும் கூலிப்படையை போட்டுத்தள்ளும் சிம்பு, பிறகு சர்வதேச மாபியாகவாக எப்படி மாறினான் என்பதுதான் கதை. இதில் சிம்புவின் நண்பர்களாக ஜெய், சந்தானம் நடிக்கிறார்கள்.
முழுநீள ஆக்ஷன் படமாக உருவாகும் இந்தப் படத்தில் இரண்டு ஹீரோயின்கள். தெலுங்கு பட நாயகி தீக்ஷா சேத் முதல் நாயகியாகவும், இரண்டாவது ஹீரோயினாக ஹன்ஷிகா மொத்வானியும் ஒப்பந்தம் செய்யப்பட்டிருகிறார்கள். இந்தப் படத்தில் ஹன்ஷிகா கவர்ச்சி நாயகியாக நடிக்கிறாராம்.
No comments:
Post a Comment