HAI FRIENDS PLEASE CLICK THE ADD.
Showing posts with label மம்தா பானர்ஜி. Show all posts
Showing posts with label மம்தா பானர்ஜி. Show all posts

Monday, 18 June 2012

அப்துல்கலாமை குடியரசுத் தலைவர் வேட்பாளராக நிறுத்துவது .......மம்தா பிடிவாதம்....


                       முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாமை குடியரசுத் தலைவர் வேட்பாளராக, தனது சார்பில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி இன்று முறைப்படி அறிவிக்க இருப்பதாக தெரிகிறது. 


                 அதிகாரப்பூர்வமாக பிரணாப்பை வேட்பாளராக அறிவித்ததற்கு மம்தா கடுமையான எதிர்ப்பு தெரிவித்தார். அவருக்கு ஆதரவாக இருந்த முலாயமும் கட்சி மாறியதையடுத்து, கலாமை தான் குடியரசு வேட்பாளராக நிறுத்த வேண்டும் என்று திட்டவட்டமாக இருக்கிறார் மம்தா. 
                       இந்நிலையில், இன்று மாலை நடைபெற உள்ள திரிணாமுல் காங்கிரசின் முக்கிய ஆலோசனைக் கூட்டத்தில் அப்துல்கலாமை குடியரசுத் தலைவர் வேட்பாளராக நிறுத்துவது பற்றி விவாதிக்கப்பட்டு கூட்டத்தின் முடிவில் முறைப்படி அறிவிக்கப்பட உள்ளது. 


             மேலும் கலாமுக்கு மட்டுமே திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.பிக்கள் வாக்களிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டள்ளது. 


             மேலும், குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று அப்துல் கலாமுக்கு திரிணமூல் காங்கிரஸ் நெருக்கடி கொடுத்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Saturday, 16 June 2012

அப்துல் கலாமை ஆதரிக்குமாறு வேண்டுகோள்....மம்தா

                காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியாகாந்தி ஜனாதிபதி தேர்தல் வேட்பாளராக பிரணாப் முகர்ஜியை அறிவித்துள்ளார். இதை தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சிகள் பிரணாப் முகர்ஜிக்கு ஆதரிப்பதாக அறிவித்துள்ளனர். 

             இந்தநிலையில் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகிக்கும் திரிமுணால் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி அப்துல் கலாம் தான் வேட்பாளர் என திட்டவட்டமாக கூறினார். 

         
   தற்போது மம்தா தனது பேஸ் புக்கில் அப்துல் கலாமை ஆதரிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் தனது கட்சி மிக சிறியது மற்ற கட்சிகளின் ஆதரவை பெறுவதுடன் மக்களின் ஆதரவை பெறவும் விரும்புவதாக குறிப்பிட்டுள்ளார். 

          c தான் உண்மை மற்றும் நேர்மையின் பக்கம் இருந்து உலக அரங்கில் இந்தியாவை தலைநிமிர வைத்தவ மனிதர். அவரை அனைத்து மாநில மக்களும், முதல்வர்களும் ஆதரிக்க வேண்டும் என வேண்டுகொள் விடுத்துள்ளா

Thursday, 27 October 2011

எந்த பரிசுப் பொருள்களை வாங்காத...முதலமைச்சர்?

மேற்கு வங்க மாநில முதலமைச்சராக இருக்கும் திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி எப்போதும் யாரிடத்தும் எந்தவிதப் பரிசுப் பொருள்களையும் பெறுவதே இல்லை.

அரசியலில் நுழைந்தது முதல் கடந்த 30 ஆண்டுகளாகவே இந்தப் பழக்கத்தை அவர் விரதமாகவே கடைப்பிடிக்கிறார்.
காளி பூஜை, தீபாவளிப் பண்டிகை ஆகியவற்றையொட்டி தன்னிடம் அளிக்க பரிசுப் பொருள்களுடன் யார் வந்தாலும் அனுமதிக்க வேண்டாம், அவற்றை வாங்கவும் வேண்டாம் என்று வீட்டின் கீழ்தளத்தில் காவலுக்கு நிற்கும் போலீஸôருக்கு கண்டிப்பான உத்தரவை அவர் பிறப்பித்துவிட்டார்.
விலை உயர்ந்த பிஸ்கோத்துகள், வெளிநாட்டுச் சாக்லேட்டுகள், விலைமதிப்பற்ற பேனாக்கள், கலைத்திறன் மிக்க கைவினைப் பொருள்கள் என்று பல்வேறு பரிசுகளைக் கொண்டுவந்து குவிப்பதே பணக்காரர்களின் வழக்கம்.
திருமணமே செய்துகொள்ளாமல் பொதுவாழ்வில் சேவை செய்துவரும் மம்தா தன்னுடைய சகோதரர்கள், தாயாருடன் சாதாரண வீட்டிலேயே கூட்டுக் குடும்பத்தில் வசிக்கிறார். எளிய நடுத்தரக் குடும்பப் பெண்கள் அணியும் கைத்தறிச் சேலையைத்தான் உடுத்துகிறார். காலுக்கு அணியும் செருப்புகூட மிகவும் விலை குறைந்ததுதான்.
தலைமைச் செயலகத்தில் முதல்வருடைய அறையைத் தன்னுடைய வசதிக்கு ஏற்ப புதுப்பித்தபோது அந்தச் செலவைக் கூட தன்னுடைய சம்பளத்திலிருந்து கொடுத்தவர் மம்தா.