HAI FRIENDS PLEASE CLICK THE ADD.

Monday, 18 June 2012

அப்துல்கலாமை குடியரசுத் தலைவர் வேட்பாளராக நிறுத்துவது .......மம்தா பிடிவாதம்....


                       முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாமை குடியரசுத் தலைவர் வேட்பாளராக, தனது சார்பில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி இன்று முறைப்படி அறிவிக்க இருப்பதாக தெரிகிறது. 


                 அதிகாரப்பூர்வமாக பிரணாப்பை வேட்பாளராக அறிவித்ததற்கு மம்தா கடுமையான எதிர்ப்பு தெரிவித்தார். அவருக்கு ஆதரவாக இருந்த முலாயமும் கட்சி மாறியதையடுத்து, கலாமை தான் குடியரசு வேட்பாளராக நிறுத்த வேண்டும் என்று திட்டவட்டமாக இருக்கிறார் மம்தா. 
                       இந்நிலையில், இன்று மாலை நடைபெற உள்ள திரிணாமுல் காங்கிரசின் முக்கிய ஆலோசனைக் கூட்டத்தில் அப்துல்கலாமை குடியரசுத் தலைவர் வேட்பாளராக நிறுத்துவது பற்றி விவாதிக்கப்பட்டு கூட்டத்தின் முடிவில் முறைப்படி அறிவிக்கப்பட உள்ளது. 


             மேலும் கலாமுக்கு மட்டுமே திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.பிக்கள் வாக்களிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டள்ளது. 


             மேலும், குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று அப்துல் கலாமுக்கு திரிணமூல் காங்கிரஸ் நெருக்கடி கொடுத்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

No comments:

Post a Comment