HAI FRIENDS PLEASE CLICK THE ADD.
Showing posts with label த்ரிஷா.. Show all posts
Showing posts with label த்ரிஷா.. Show all posts

Monday, 25 June 2012

அப்படிப்போடு போடு போடு’. இந்த ட்யூன் இந்திக்குப் போகிறது.






                                   விஜய், த்ரிஷா நடித்த ‘கில்லி’ படத்தில் இடம்பெற்ற பாடல், ‘அப்படிப்போடு போடு போடு’. இந்த ட்யூன் இந்திக்குப் போகிறது. 


                                சமீபத்தில் சல்மான் கான், அசின் நடித்து ஹிட்டான படம் ‘ரெடி’. தெலுங்கு ‘ஆர்யா’ படத்தில் ஹிட்டான, ‘ரிங்க ரிங்கா’ பாடல் டியூன் இந்தப் படத்துக்கு பயன்படுத்தப்பட்டு ஹிட்டானது.


                            






                  இதையடுத்து, இந்தி வில்லன் நடிகர் சோனு சூட், ‘கில்லி’ படத்தில் ஹிட்டான, ‘அப்படிப் போடு போடு போடு’ பாடல் ட்யூனை வாங்கியுள்ளார். சோனு சூட், ‘அருந்ததி’ படத்தில் வில்லனாக நடித்தவர். தற்போது ‘ஒஸ்தி’ படத்தில் வில்லனாக நடித்துள்ளார். 

                             




                       சோனு, ‘லக்கி அன்லக்கி’ என்ற இந்திப் படத்தை தயாரித்து வருகிறார். இதில் ‘அப்படிப்போடு போடு போடு’ ட்யூன் இடம்பெறுகிறது. 


                            




                                      மல்லிகா ஷெராவத்துடன் சோனு ஆடுகிறார். ‘‘இந்த ட்யூனுக்கான உரிமையை இசை அமைப்பாளர் வித்யாசாகரிடமிருந்து வாங்கியுள்ளேன். இந்திக்காக சில மாற்றங்களை செய்து தர இருக்கிறார் அவர்’’ என்றார் சோனு.

Tuesday, 29 May 2012

நான் சென்னை பொண்ணு, எனது ஆதரவு எப்போதும் சென்னை

                                         சென்னையில் நடந்த ஐ.பி.எல்., சீசன்-5 போட்டியின் இறுதி ஆட்டத்தில், கோல்கட்டா அணி பிரமுகர்களுடன் நடிகை த்ரிஷா அமர்ந்து இருந்ததால் அவருக்கு எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது.                    


                                       கடந்த ஒன்றரை மாத காலமாக இந்தியா முழுக்க பரவிக்கிடந்த ஐ.பி.எல்., ஜூரம் இருதினங்களுக்கு முன்னர் தான் முடிவுக்கு வந்தது. இறுதி‌ப்போட்டியில் சென்னை அணியும் - கோல்கட்டா அணியும் மோதினர். 


                                   சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த இப்போட்டியின் இறுதிஆட்டத்தில் கோல்கட்டா அணி கோப்பையை வென்று முதன்முறையாக ஐ.பி.எல்., சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றது. இப்போட்டியை காண பாலிவுட் முதல் கோலிவுட் வரை ஏகப்பட்ட திர‌ை நட்சத்திரங்கள் வந்திருந்தனர். 


                                   இப்போட்டியை த்ரிஷாவும் காண வந்திருந்தார். இதனால் த்ரிஷாவுக்கு ஒரு புதிய சிக்கல் உருவாகியுள்ளது. அதாவது போட்டியின் போது அவர் கோல்கட்டா அணியை ஆதரிக்கும் பிரமுகர்கள் அருகில் உட்கார்ந்து இருந்தார். இதனால் த்ரிஷாவுக்கு ஏராளமான ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் சென்னை அணி போட்டியில் தோற்றதும் அவர் மீதான கோபம் இன்னும் அதிகரிக்க அவரை வசைப்பாடி இணையதளங்களில் ஏராளமான பேர் கருத்து தெரிவித்துள்ளனர். 

                         இந்தவிஷயம் பற்றி கேள்விப்பட்ட த்ரிஷா தடாலடியாக விளக்கம் கொடுத்து இருக்கிறார். அதில் நான் சென்னை பொண்ணு, எனது ஆதரவு எப்போதும் சென்னை அணிக்கு தான். அன்றைய தினம் என்னுடைய நெருங்கிய தோழி சபீனாகான் போட்டியை காண வந்திருந்தார். அதனால் அவர் பக்கத்தில் அமர வேண்டிய சூழ்நிலை. இதை ரசிகர்கள் பெரிதாக்க வேண்டாம் என்று கூறியுள்ளார். 

Thursday, 27 October 2011

10 வருஷம் தாக்கு பிடிப்பதென்றால் சும்மாவா? நடிகை த்ரிஷா

   .             சினிமாவில் வெற்றிபெற திறமை இருந்தால் போதும் எனவும் கூறியிருக்கிறார்.


மேலும் அவர் கூறுகையில், என் படத்தை ரசிகர்கள் தொடர்ந்து ரசிக்கிறார்கள். என்னுடைய திறமையை நம்பித்தான் சினிமாவிற்கு வந்தேன். சினிமாவில் 10 வருடங்களுக்கு மேலாக இருக்கிறேன். இத்தனை வருடங்கள் சினாமாவில் தாக்குப் பிடிக்கிறேன் என்றால் சும்மாவா என்று சொல்கிறார் த்ரிஷா.