
கடந்த ஒன்றரை மாத காலமாக இந்தியா முழுக்க பரவிக்கிடந்த ஐ.பி.எல்., ஜூரம் இருதினங்களுக்கு முன்னர் தான் முடிவுக்கு வந்தது. இறுதிப்போட்டியில் சென்னை அணியும் - கோல்கட்டா அணியும் மோதினர்.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த இப்போட்டியின் இறுதிஆட்டத்தில் கோல்கட்டா அணி கோப்பையை வென்று முதன்முறையாக ஐ.பி.எல்., சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றது. இப்போட்டியை காண பாலிவுட் முதல் கோலிவுட் வரை ஏகப்பட்ட திரை நட்சத்திரங்கள் வந்திருந்தனர்.
இந்தவிஷயம் பற்றி கேள்விப்பட்ட த்ரிஷா தடாலடியாக விளக்கம் கொடுத்து இருக்கிறார். அதில் நான் சென்னை பொண்ணு, எனது ஆதரவு எப்போதும் சென்னை அணிக்கு தான். அன்றைய தினம் என்னுடைய நெருங்கிய தோழி சபீனாகான் போட்டியை காண வந்திருந்தார். அதனால் அவர் பக்கத்தில் அமர வேண்டிய சூழ்நிலை. இதை ரசிகர்கள் பெரிதாக்க வேண்டாம் என்று கூறியுள்ளார்.
No comments:
Post a Comment