HAI FRIENDS PLEASE CLICK THE ADD.

Friday, 30 September 2011

சுசீந்திரன் விறுவிறுப்பாக இயக்குகிறார் : விக்ரம்!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
ஷங்கர் போல் விறுவிறுப்பாக இயக்குகிறார் சுசீந்திரன் : விக்ரம்! 

ராஜபாட்டை படம் பற்றி விக்ரம் கூறியது: இதில் ஜிம் பாயாக வரும் நான் சினிமாவில் வில்லன் ஆக வேண்டும் என்ற குறிக்கோளுடன் இருப்பேன். ஆக்ஷன், கூத்து, லூட்டி என எல்லாம் கலந்த கதை. ‘தெய்வத் திருமகள்' படத்துக்கு பிறகு ‘தூள்', ‘சாமி' பாணியிலான ஆக்ஷன் படத்தில் நடிக்க ஆசையாக இருந்தது. அதற்கு ஏற்ற ஸ்கிரிப்ட்டாக ‘ராஜபாட்டை' அமைந்திருக்கிறது. என்னை பல்வேறு கெட்டப் பில் இதில் காட்டி இருக்கிறார் இயக்குனர் சுசீந்திரன். ‘வெண்ணிலா கபடி குழு', ‘அழகர்சாமியின் குதிரைÕ என யதார்த்தமான படங்களை தந்தவர், இப்படியொரு ஆக்ஷன் ஸ்கிரிப்ட் சொல்லி அசத்தினார். தரணி, ஷங்கர் போல் இப்படத்தை விறுவிறுப்பாக இயக்கி இருக்கிறார். எனக்கு புத்துணர்ச்சி கொடுக்கும் கமர்சியல் படம். மேம்போக்காக சொல்லாமல் நல்ல மெசேஜும் இதில் இருக்கிறது. இதே டீமுனுடன் மற்றொரு படம் செய்ய உள்ளேன். விஜய் இயக்கத்தில் நடிக்கவுள்ள படம் முடிந்தபிறகு அப்படத்தில் நடிப்பேன்.

Thursday, 29 September 2011

விமான விபத்து: 18 பேர் பலி


  இந்தோனேசியா நாட்டின் மேற்கு பகுதியில் இன்று அதிகாலை சிறியரக விமானமொன்று விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 18 பேரும் உயிரிழந்தனர்.

அந்நாட்டின் பகோராக் என்ற கிராமத்தில் விமானம் தரையில் விழுந்து நொறுங்கியுள்ளது.

விமான விபத்து குறித்து பகோராக் கிராம மக்கள் தகவல் கொடுத்த பிறகே அதிகாரிகளுக்கு தெரிய வந்தது. இதனால் மீட்பு பணிகள் மிகவும் தாமதமாக தொடங்கின.

இவ் விபத்துக்கான காரணம் தொடர்பில் பொலிஸார் விசாரனைகளை நடத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்தோனேசியாவில் நேற்று ஏற்பட்ட ஒரு படகு விபத்தில் 20-க்கும் மேற்பட்டவர்கள் பலியாகியமை குறிப்பிடத்தக்கது.

Tuesday, 20 September 2011

எஸ்பிபி.சரண் : சோனாவை கடுமையாக எச்சரித்தேன்.

   மது விருந்தின்போது பாலியல் உணர்வை தூண்டியதால் நடிகை சோனாவை கடுமையாக எச்சரித்தேன். இதனால் சோனா என்மீது பொய்ப் புகார் கொடுத்துள்ளார் என எஸ்பிபி.சரண் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள முன்ஜாமீன் மனுவில் கூறியுள்ளார்.

செப்டம்பர் 14-ம் தேதி நடந்த விருந்து ஒன்றின்போது சரண் தன்னிடம் தவறாக நடந்துகொண்டதாக நடிகை சோனா பாண்டிபஜார் போலீசில் புகார் அளித்திருந்தார்.
இதுதொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு சரண் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
நான் அமெரிக்காவில் பி.பி.ஏ. பட்டம் படித்துள்ளேன். சினிமாவில் பின்னணி பாடகராகவும், தயாரிப்பாளராகவும் இருக்கிறேன். மங்காத்தா படத்தின் வெற்றியைக் கொண்டாட நடிகர் வைபவ் என்னை அழைத்தார். அதனால் அவரது வீட்டிற்கு சென்றேன். என்னைபோல் பலரும் அங்கு வந்திருந்தனர். எல்லாரும் இரவு 11 மணிக்கு மேல் மது அருந்தத் தொடங்கினோம்.
நடிகை சோனாவும் இந்த மது விருந்தில் கலந்து கொண்டார். சினிமாவில் என்னுடைய வெற்றி மற்றும் எனது குடும்ப பின்னணியை மனதில் வைத்துக்கொண்டு என்னிடம் சோனா உள்நோக்கத்துடன் நடந்துகொண்டார். கவர்ச்சியால் மயக்கி, பணத்தை பறித்து தன் கடன் பிரச்சினையை தீர்க்க வேண்டும் என்ற எண்ணம் அவரிடம் இருந்தது. என்னிடம் பாலியல் உணர்வுகளைத் தூண்டும் வகையில் நடந்துகொண்டார். இதனால் அவரை நான் எச்சரித்தேன். அதைத்தொடர்ந்து என்னிடம் மன்னிப்பு கேட்டார். மறுநாள் போலீசில் என் மீது பொய்யான பாலியல் புகாரை கொடுத்துள்ளார்.
இந்த வழக்கில் நான் தவறு எதுவும் செய்யவில்லை. எனவே எனக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும் என சரண் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.


Tags : சோனா ,எஸ்பிபி.சரண்