HAI FRIENDS PLEASE CLICK THE ADD.

Monday, 31 October 2011

அத்வானியின் ரத யாத்திரை.... பைப் குண்டு..

பா.ஜ., மூத்த தலைவர் அத்வானியின் ரத யாத்திரைப் பாதையில், பைப் குண்டு வைக்கப்பட்டு இருந்தது பற்றி, போலீசுக்கு தகவல் கொடுத்த அ.தி.மு.க.,வை சேர்ந்த இருவருக்கு, முதல்வர் ஜெயலலிதா 50,000 ரூபாய் பரிசு கொடுத்து பாராட்டு தெரிவித்தார்.இதுகுறித்து, அ.தி.மு.க., தலைமைக் கழகம், நேற்று வெளியிட்ட அறிக்கை:
மதுரை மாவட்டம் திருமங்கலம் ஒன்றியம், ஆலம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த அ.தி.மு.க., ஆரம்ப கால உறுப்பினர் செல்வராஜ் மற்றும் திருமங்கலம் ஊராட்சி ஒன்றியக் குழு, 14வது வார்டு கவுன்சிலர் செல்வம் ஆகியோர், பா.ஜ., மூத்த தலைவர் அத்வானியின் ரத யாத்திரைப் பாதையில், பைப் குண்டு வைக்கப்பட்டிருந்ததை, உரிய நேரத்தில் போலீசுக்கு தெரிவித்து, பெரும் அசம்பாவிதம் ஏற்படுவதைத் தவிர்த்தனர்.இவர்களின் செயலைப் பாராட்டி, இருவரையும் சென்னையில் தனது இல்லத்துக்கு வரவழைத்து, பாராட்டுகளைத் தெரிவித்ததோடு, இருவருக்கும் தலா 50,000 ரூபாய் பரிசையும், முதல்வர் ஜெயலலிதா வழங்கினார்.மேலும், சட்டம்-ஒழுங்கைப் பாதுகாக்க, அவர்கள் இருவரும் உறுதுணையாக இருந்ததற்கு, நன்றியையும் முதல்வர் தெரிவித்துக் கொண்டார்.இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது

Wedding bells ring......


The polio attack in her childhood had delayed her marriage all these years. Last month, she attended a suyamvaram arranged by Chennai-based Geetha Bhavan trust (GBT) and TN handicapped federation and charitable trust (TNHFCT) and found a match. R. Srinivasan, a normal person, was quite happy with Ms Kalyani’s expectations and agreed for the marriage.
Both of them attended a series of counseling by doctors, advocates and disabled rights activists to lead a healthy married life.
Like Ms Kalyani and Mr Srinivasan, over 20 pairs, all differently-abled persons, attended the counseling and their marriages have been fixed for November 8, 2011 in Chennai.

ஜீவாவுக்கும் சிம்புவுக்கும் பனிப்போர்.... நடிகை ரிச்சா...


ஜீவாவுடன் ஜோடி சேரக்கூடாது:  நடிகை ரிச்சாவுக்கு சிம்பு தடைஜீவாவுக்கும் சிம்புவுக்கும் பனிப்போர் நீடிக்கிறது. “கோ” படத்தில் நடிக்க முதலில் சிம்புவுக்குதான் வாய்ப்பு வந்தது. பிறகு அது ஜீவா கைக்கு மாறியது. அப்படம் ஹிட் ஆனதால் அதில் ஏன் நடிக்கவில்லை என சிம்புமேல் பலரும் ஆதங்கப்பட்டனர். இந்த நிலையில் சிம்பு என் நண்பன் இல்லை என்று ஜீவா அறிவித்தது அவர்களின் மோதலை தீவிரமாக்கியது.
 
தற்போது ஜீவாவுடன் நடிகை ரிச்சா ஜோடி சேருவதை சிம்பு தடுத்து விட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. தெலுங்கில் ரிச்சா முன்னணி நடிகையாக உள்ளார். தமிழில் தனுசுடன் “மயக்கம் என்ன”, சிம்புவுடன் “ஒஸ்தி” படங்களில் நடிக்கிறார். சமீபத்தில் இயக்குனர் அகமது, தனது புதுப்படத்தில் ஜீவா ஜோடியாக நடிக்க ரிச்சாவை போனில் தொடர்பு கொண்டு பேசினாராம். இவர் ஏற்கனவே ஜெய் நாயகனாக நடித்த “வாமணன்” படத்தை டைரக்டு செய்தவர். ரிச்சாவும் ஜீவாவுடன் நடிக்க முதலில் சம்மதித்ததாக கூறப்படுகிறது. எத்தனை நாள் கால்ஷீட் தருவேன் என்பதை பிறகு சொல்கிறேன் என்றாராம்.

யோஹன் அத்தியாயம் ஒன்று'...விஜய்


விஜய்யின் 3 படங்கள்`கேரளாவிலும்`வேலாயுதம்'  படம் சக்கை போடு போடுகிறது. அடுத்து `நண்பன்' படம் முடிந்து ரிலீசுக்கு தயாராகிறது.
 
இப்படத்துக்கு பின் கவுதம் இயக்கும் `யோஹன் அத்தியாயம் ஒன்று' என்ற படத்துக்கு வருகிறார். இது முடிந்ததும் ஏ.ஆர். முருகதாஸ் படத்துக்கு போகிறார்.

சூர்யா...முருகதாசையும் அழைத்து சபாஷ்!!!!!ரஜினி


ரஜினி பாராட்டுபடம் பார்க்க வந்த  ரஜினியை சூர்யாவும், ஜோதிகாவும் தம்பதி சகிதம் வரவேற்றனர்.
 
படம் பார்த்து விட்டு சூர்யாவை வெகுவாக பாராட்டினார்  ரஜினி. இயக்குனர் ஏ.ஆர். முருகதாசையும் அழைத்து சபாஷ் சொல்லி விட்டு போனாராம்.

படவாய்ப்பு பறிபோன வருத்ததில்!!!.... சமந்தா.


சமந்தா வருத்தம்தெலுங்கில் உச்ச நடிகையாகிவிட்ட சமந்தா, கவுதம்மேனன் இயக்கும் நீதானே என் பொன் வசந்தம் படத்துக்கு ஒப்பந்தமாகியுள்ளார். கார்த்திக் மகனை மணிரத்னம் அறிமுகப்படுத்தும் படத்தில் சமந்தாவை நாயகியாக்க முயற்சி நடந்தது. மணிரத்னமே விரும்பி அழைத்தார். ஆனால் திடீரென மனம் மாறி சமந்தாவை வேண்டாம் என அனுப்பி விட்டார். மணிரத்னம் படவாய்ப்பு பறிபோன வருத்ததில் இருக்கிறார் சமந்தா.

வெற்றிக்கு கடின உழைப்பும் அர்ப்பணிப்பு தன்மையும்......


தந்தை கமலுக்கு ஸ்ருதி  பாராட்டு “வாழ்க்கையில் எனக்கு முழு சுதந்திரம் அளிக்கிறார்”ஐஸ்வர்யா இயக்கும் 3 படத்தில் தனுஷ் ஜோடியாக நடிக்கிறார்.“ஓ மை பிரண்ட், கப்பார் சிங்” போன்ற தெலுங்கு படங்களிலும் நடிக்கிறார்.
 
வாழ்க்கையில் நான் எந்த முடிவுகளையும் சுயமாக எடுத்துக் கொள்ளலாம். அதற்கான முழு சுதந்திரத்தையும் எனது தந்தை கமல் எனக்கு அளித்து உள்ளார். அந்த வகையில் நான் பெரிய அதிர்ஷ்டசாலியாக இருக்கிறேன். பண வசதி இருப்பதால் அதிலிருந்து தன்னம்பிக்கை பெறுகிறேன். வெற்றிக்கு கடின உழைப்பும் அர்ப்பணிப்பு தன்மையும் அவசியம் என்பதை உணர்ந்து வைத்துள்ளேன்.
 
சினிமா, இசை, எழுத்து எல்லாவற்றிலும் அதை செய்கிறேன். வாழ்க்கையில் ஒவ்வொரு அடியையும் என் விருப்பப்படியே எடுத்து வைக்கிறேன். நானே என்னை வழி நடத்துகிறேன். என் பெற்றோரிடம் சில விஷயங்களில் ஆலோசனை பெற நான் அணுகுவது உண்டு. 

முகத்தில் ஆசிட் ஊற்றி விடுதலை கட்சி செயலாளர் படுகொலை


முகத்தில் ஆசிட் ஊற்றி
விடுதலை சிறுத்தை கட்சி
செயலாளர் படுகொலைஇரவு ஆட்டோ சவாரிக்கு சென்ற மாரியப்பன், பின்னர் வீடு திரும்பவில்லை. நேற்று பஞ்சப்பூர்   மாநகராட்சி கழிவு நீர் குட்டை அருகே மாரியப்பனின்   ஆட்டோ, அனாதையாக    நின்றது. இதனால்  மாரியப்பன் கடத்தப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார்  விசாரணை நடத்தினர்.
 
இன்று காலை பஞ்சப்பூர் சாரநாதன்  கல்லூரி  அருகேயுள்ள  ஏரியில்  மாரியப்பன்   பிணமாக    கிடந்தார். அவரது முகம் ஆசிட் ஊற்றப்பட்டு, சிதைந்த நிலையில் இருந்தது. கையில் வெட்டுக்காயமும் இருந்தது. மர்ம கும்பல், மாரியப்பனை   கொன்று  பிணத்தை  ஏரியில்  வீசி விட்டு சென்றுள்ளார். நேற்று முன்தினம் நள்ளிரவில்  திருச்சி  ஜங்ஷனில் மாரியப்பன் தனது ஆட்டோவில் இந்தி பேசிய 2 வாலிபர்களை  சவாரிக்கு அழைத்து  சென்றுள்ளார். அதன் பின்னர்தான் அவர்  மாயமாகியுள்ளார். எனவே வடமாநில வாலிபர்கள் இந்த கொலையை செய்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. மாரியப்பனுக்கு சுஜாதா, சர்மிளா என்ற 2 மனைவிகளும் 3 பெண் குழந்தைகளும், 1 மகனும் உள்ளனர்.

பள்ளி மாணவி... பரிதாபமாக உயிரிழந்தார்.


புதுச்சேரியில் அரசு பஸ் கவிழ்ந்து பள்ளி மாணவி பலி- 8 மாணவிகள் கவலைக்கிடம்புதுச்சேரி மாநிலம் கடுவனூர் அருகே பள்ளி மாணவ-மாணவிகளை ஏற்றிச்சென்ற அரசுப்பேருந்து திடீரென வாய்க்காலில் கவிழ்ந்தது. இதில் பள்ளி மாணவி ஹேமாவதி பரிதாபமாக உயிரிழந்தார்.
 
விபத்தில் காயமடைந்த 40 மாணவ- மாணவிகள் கடலூர் மற்றும் புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களில் 8 பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது. விபத்துக்குள்ளான பேருந்து பாகூரில் இருந்து கரையான்புத்தூருக்குச் சென்றுகொண்டிருந்ததாகும்.

தமிழ்நாட்டில் மழைக்கு 9 பேர் பலி.....

தமிழ்நாட்டில் மழைக்கு 9 பேர் பலி; பயிர் சேதம் இல்லை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவ மழை பரவலாக பெய்து வருகிறது. மழைக்கு இதுவரை 9 பேர் பலியாகி உள்ளனர். தொடர்ந்து மழை பெய்கின்ற போதிலும் பயிர் சேதம் இல்லை. எனினும் நிலைமையை கண்காணிக்க கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டு உள்ளன.......

Sunday, 30 October 2011

வளைந்து கொடுக்காவிட்டால் வாழ முடியாத

Movie review, Tamil movie review, review in tamil, kollywood review, bollywood review, hollywood reviewஏழை தந்தையின் கனவை நிறைவேற்ற போலீஸ் அதிகாரியாகிறார் நந்தா. ஆனால் அவர் நினைத்தது போல நேர்மையாக பணியாற்ற முடியவில்லை. வளைந்து கொடுக்காவிட்டால் வாழ முடியாத சூழ்நிலை. மக்களை ஆட்டிப்படைக்கும் அரசியல்வாதிகள், அவர்களுக்கு பல்லக்கு தூக்கும் காவல் துறை அதிகாரிகள் என்ற வட்டத்துக்குள் நந்தாவால் பணியாற்ற முடியவில்லை. அரசியல்வாதி அழகம்பெருமாள் நகர்த்தும் காயில் வீழ்த்தப்படுகிறார் நந்தா. கடைசியில் வேலையை ராஜினாமா செய்துவிட்டு திரும்பும்போது அழகம்பெருமாளின் அவமானப்பேச்சு தாங்காமல் அவரை ரோட்டில் இழுத்துபோட்டு அடிக்கிறார். அழகம்பெருமாளின் ஆட்கள் நந்தாவை அடித்து துவைத்து அரைகுறை உயிரோடு போட்டுவிட்டுச் செல்கிறார்கள். ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்படும் நந்தா, உயிர் பிழைத்தாரா? மீண்டும் பணியில் சேர்ந்தாரா? நேர்மையான அதிகாரியாக அவரால் வெற்றி பெற முடிந்ததா? என்பது மீதி கதை. ‘வைஜயந்தி ஐ.பி.எஸ்’ மாதிரி ‘முத்துக்குமார் ஐ.பி.எஸ்’ என்று தலைப்பு வைத்திருந்தால் பொருத்தமாக இருந்திருக்கும்.

அடிதடி பார்ட்டி சூர்யா!!!!!!

Movie review, Tamil movie review, review in tamil, kollywood review, bollywood review, hollywood reviewஇளம் இசை கலைஞன் போபன், அடிதடி பார்ட்டி சூர்யா, தொழிலதிபர் ஜெயராம், நடுத்தர குடும்பத்து பெண் மீரா ஜாஸ்மின். நான்கு பேருமே புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மரணத்தை எதிர்நோக்கி இருப்பவர்கள். தங்கள் இறுதி நாட்களை மகிழ்ச்சியாக கழிக்க நினைக்கிறார்கள். சூர்யாவுக்கு தன் ஹீரோ கமலை காண வேண்டும், போபனுக்கு மலேசியாவில் படிக்கும் தன் காதலிக்கு கிதாரை அன்பளிப்பாக கொடுக்க வேண்டும் என்பது கடைசி ஆசை. தொழிலதிபர் ஜெயராம் பணத்தில் உலகத்தை சுற்ற கிளம்புகிறார்கள். 

அவர்களின் கடைசி நாட்கள் மகிழ்ச்சியாக கழிந்ததா? அவர்கள் ஆசை நிறைவேறியதா? என்பது மீதி கதை. மலையாள ‘ஃபோர் பிரண்ட்ஸ்’, தமிழில் ‘அன்புள்ள கமல்’ ஆகியிருக்கிறது. இதுவரை சொல்லப்படாத கதை என்பதால் படம் கவனம் ஈர்க்கிறது. வெவ்வேறு சூழலில் வாழும் நான்கு பேரையும் சந்திக்க வைக்கிற சுவாரஸ்யமான திரைக்கதை படத்துக்கு பலம். சூர்யா குடும்பத்துக்கு ஜெயராம் பத்து லட்சம் கொடுத்து அதிர்ச்சி அளிப்பது, சிடு சிடு மீரா ஜாஸ்மினை வழிக்கு கொண்டு வரும் குழந்தை, தன் ஹீரோ கமலை, சூர்யா சந்திக்கும்போது வெளிப்படும் சராசரி ரசிகனின் உணர்வு என்று ஆங்காங்கே வரும் சின்ன சின்ன சுவாரஸ்யங்கள் படத்தை சுமந்து செல்கிறது. 

Foreign investors... Tata, Ambani groups


Overseas investors have cut their exposure to the country's three leading business groups-- Tatas and the conglomerates led by Mukesh and Anil Ambani-- with net sale of shares worth an estimated Rs 2,500 crore in their companies since the beginning of this fiscal.
An analysis of changes in shareholding patterns of the companies belonging to these groups, as filed with the Bombay Stock Exchange, shows that foreign institutional investors (FIIs) are net sellers in shares of all the three groups since April 2011 or start of this fiscal.
On the other hand, the domestic institutional investors (comprising of mutual funds, insurance companies and banks among others) were net buyers of stocks belonging to the Tatas and Mukesh Ambani-ledReliance Industries group. However, they were net sellers of shares from Anil Ambani-Reliance Group.

Anna Hazare ungrateful to RSS: Digvijay.....


Stepping up attack against Team Anna, Congress leader Digvijay Singh today said Anna Hazare is being "ungrateful" to RSS over the outfit's alleged support to the anti-corruption agitation.
"Baba Ramdev is being more honest about the support of RSS to their campaign. Haven't understood why Anna is denying. Ungrateful ?," Singh said in his latest Tweet.
Yesterday, the AICC General Secretary had attacked spiritual guru Sri Sri Ravi Shankar for releasing a book written by BJP President Nitin Gadkari, while a few days back he had said that BJP coming to support of Arvind Kejriwal in latter's spat with Swami Agnivesh, proves his contentions right that BJP and RSS were supporting Kejriwal.
Singh had earlier cautioned Sri Sri that RSS and BJP were trying to use him as their Plan

Nuclear Power Corporation of India......


The Nuclear Power Corporation of India (NPCIL) has blamed foreign activists for their “major role” in backing locals whose protests have stopped work at the Koodankulam nuclear power plant in Tamil Nadu. While the spectacle of a globe-trotting crew of activists-errant often confounds development projects across the world — and Koodankulam fell a victim once their domestic counterparts cried wolf — the ball, however, is firmly in the Union government’s court. That Koodankulam has snowballed from a safety issue to a political headache is the Centre’s failure.
There are two salient truths here which do not necessarily constitute a paradox: a developing economy like India needs nuclear power to cut down its reliance on fossil fuels that increase the atmospheric levels of black carbon. India will need both more and more energy in the coming decades as well as a healthier, sustainable diversification of its energy basket. On the other hand, public concern about a nuclear plant cannot be brushed aside, no matter how emotional and counter-factual. Ideally, every nuclear project should be preceded by prolonged interaction between government, nuclear authorities and locals. In India, safety concerns are compounded by the general negativity about land acquisition. It calls for articulate and thoroughly involved political leadership.

Esha Deol...best dancer.....

Esha Deol insists that she has a split personality when it comes to dance.     The actress who sizzles the 70 mm with her dance moves suddenly transforms and becomes aesthetic when it comes to traditional Bharatnatyam. Speaking about her dance journey she says, 'when I get to accompany Hema Malini on stage it is an experience I cherish with all my heart. Also when I do a classical dance on stage, it's almost like a spiritual experience for me!.

நாய்களை கொன்ற மோட்டார் நிறுவனம்....

காஞ்சிபுரம் அருகே தனியார் மோட்டார் நிறுவனம் ஒன்று, தன்னுடைய நிறுவன வளாகத்தில் அலைந்து திரியும் நாய்களை கொல்வதற்கென்றே ஒரு நபரை நியமித்து கொன்று குவித்த சம்பவம் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. ஜி.கே.என்., டிரைவ் லைன் இந்தியா என்ற அந்த நிறுவனம், தனது வளாகத்தினுள் அலைந்து திரிந்து தொல்லை கொடுத்து வந்த நாய்களை கூண்டோடு கைலாசம் அனுப்ப நபர் ஒருவரை தேர்ந்தெடுத்துள்ளது. அவரும் வளாகத்தினுள் கண்ணில் படும் நாய்களை எல்லாம் சுட்டுக்கொன்று குவித்ததோடு மட்டுமல்லாமல், அவற்றை வளாகத்தினுள்ளேயே எரித்தும் உள்ளார். இச்சம்பவத்தை படமெடுத்த அந்நிறுவன ஊழியர் ஒருவர் இதுகுறித்து ப்ளு கிராஸ் அமைப்பிற்கு அந்த படங்களை அனுப்பியுள்ளார். அவர்கள் எடுத்த நடவடிக்கையின் கீழ், நாய்களை சுட்டுக்கொன்ற அந்த நபர் மற்றும் மோட்டார் நிறுவனத்தின் மீது கடுமையான பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

விரைவில் அதிரடி மாற்றம்...தமிழக போலீசில்கடந்த ஆட்சியில், ஆட்சியாளர்களுக்கு சார்பாக செயல்பட்ட சில அதிகாரிகள் பல்வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டனர். மதுரை, திருச்சி, கோவை உள்ளிட்ட மாநகர்களுக்கு திறமையான, எந்த சூழலையும் சமாளிக்கக் கூடிய அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். அதே போல், கடந்த ஆட்சிக் காலத்தில் அ.தி.மு.க., ஆதரவு அதிகாரிகள் என்று ஓரங்கட்டி வைக்கப்பட்டிருந்த பல அதிகாரிகள், மீண்டும் வரவழைக்கப்பட்டு தகுதியான பணியில் நியமிக்கப்பட்டனர்.

சென்னை மாநகரைப் பொறுத்தவரை, புதிய அரசு பொறுப்பேற்ற அன்றே கமிஷனர் மாற்றப்பட்டார். அதைத் தொடர்ந்து கூடுதல் கமிஷனர்கள், துணை கமிஷனர்களில் இருந்து இன்ஸ்பெக்டர்கள் வரையில் அனைவருமே மாற்றப்பட்டனர். புறநகரிலும் மாற்றம் நடந்தது. இந்நிலையில், இரண்டு போலீசும் இணைக்கப்பட்டு சென்னை பெருநகர் போலீஸ் உருவாக்கப்பட்டு, நான்கு மண்டலங்கள் பிரிக்கப்பட்ட நிலையில், புதிய பதவியிடங்களும் உருவாக்கப்பட்டு அதில் அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். சென்னை மத்திய குற்றப்பிரிவிற்கு இணை கமிஷனர் பதவியிடம் உருவாக்கப்பட்டு, அதில் பொன் மாணிக்கவேல் நியமிக்கப்பட்டு, தற்போது உளவுப்பிரிவு டி.ஐ.ஜி.,யாக மாற்றப்பட்டுள்ளார்.குற்றம் மற்றும் தலைமையிடம் இரண்டிற்கும் தனித்தனி கூடுதல் கமிஷனர்கள் நியமிக்கப்பட்டனர்.

தீவிரவாதிகளுடன் தொடர்பு சவுதி அரேபிய பெண் ஒருவர் தண்டனை

அல் கய்தா தீவிரவாதிகளுக்கு உதவிய பெண்ணுக்கு சவுதி அரேபிய நீதிமன்றம் 15 ஆண்டு சிறை தண்டனை விதித்தது.
அல் கய்தா தீவிரவாதிகளுடன் தொடர்பு வைத்திருந்த சவுதி அரேபிய பெண் ஒருவர் (பெயர் வெளியிடப்படவில்லை) கடந்த ஜூலை மாதம் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 2 கைத்துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன. அந்த பெண் பற்றிய விவரங்கள் வெளியிடப்படவில்லை. ஆனால், கடந்த ஆகஸ்ட் மாதம் ஓகாஸ் என்ற பத்திரிகை, Ôஅல் கய்தா லேடிÕ என்று குறிப்பிட்டு கைது செய்யப்பட்ட பெண்ணுக்கு 45 வயதிருக்கும் என்ற தகவலை மட்டும் வெளியிட்டது.
இதற்கிடையில் அந்த பெண்ணிடம் நடத்திய விசாரணையில் அவர் அல் கய்தா தீவிரவாதிகள் தங்குவதற்கு இடம் அளித்தது, நிதி திரட்டி அல் கய்தா தீவிரவாதிகளுக்கு அனுப்பியது, ஆயுதங்கள் வைத்திருந்தது, சவுதியில் தீவிரவாத செயல்களை தூண்டியது தெரியவந்தது. 
அந்த பெண் மீதான விசாரணை கடந்த ஜூலை 31ம் தேதி தொடங்கியது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், தீவிரவாதிகளுக்கு உதவிய பெண்ணுக்கு 15 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. தீவிரவாத தடுப்பு நீதிமன்றத்தால் சவுதியில் பெண் ஒருவர் தண்டனை பெறுவது இதுவே முதல் முறை.

டாக்டரிடம் கேட்க 10 கேள்விகள்?குழந்தையின்மை பற்றி

   1) மருத்துவ பரிசோதனைப்படி எனக்கு என்ன பிரச்னை, இது குழந்தையின்மைக்கு எப்படி காரணமாகிறது? இந்த நிலை மேலும் மோசமடையுமா, மேம்படுமா அல்லது இப்படியே நீடிக்குமா?
2)நான் செய்த மருத்துவப் பரிசோதனையில் குழந்தையின்மைக்கான காரணம் தெளிவாக தெரியவில்லை என்றால், வேறு என்ன பரிசோதனை செய்ய வேண்டும்? இத்தகைய பரிசோதனையால் ஏதாவது பிரச்னை ஏற்படுமா? எனது வாழ்க்கைத் துணைவருக்கு ஏதாவது கூடுதல் பரிசோதனை செய்ய வேண்டுமா?
3)முதலில் எந்த மாதிரியான சிகிச்சையை நீங்கள் பரிந்துரை செய்வீர்கள்? அது அறுவை சிகிச்சை அடிப்படையிலானதா அல்லது மருந்து அடிப்படையிலானதா? அல்லது இரண்டும் சேர்ந்ததா? இந்த சிகிச்சையில் உள்ள பிரச்னை என்ன?
4)உங்களுடைய மருத்துவமனையில் இந்த சிகிச்சை பெற்றவர்களில் எத்தனை பேர் கருத்தரித்திருக்கிறார்கள்? (சில நேரங்களில் கருத்தரித்தாலும் அவை கலைந்து விட வாய்ப்பு உண்டு எனவே, கருத்தரித்ததைக் கூறுகிறாரா? அல்லது நல்ல நிலையில் குழந்தை பிறந்ததை கூறுகிறாரா என்பதை கவனியுங்கள்)
5) பழங்கால மருத்துவ முறைகளை ஏதேனும் உள்ளதா? நீங்கள் பரிந்துரைக்கும் வழக்கமான சிகிச்சை முறையுடன் இதை ஒப்பிட்டால் எது சிறந்தது?
6)பொதுவாக, அடுத்த சிகிச்சைக்கு செல்வதற்கு முன் நீங்கள் பரிந்துரைக்கும் சிகிச்சை முறையை எத்தனை தடவை முயற்சி செய்யலாம்?
7)என்னுடைய இப்போதைய வாழ்க்கை முறையில் ஏதேனும் மாற்றம் செய்தால் கருத்தரிக்க வாய்ப்பு உள்ளதா? 
8) கருமுட்டை அல்லது விந்தணு தானம் பெற்று கருத்தரிக்கும் முறையை நீங்கள் பரிந்துரை செய்வீர்களா? அதற்கான வசதிகள் உங்கள் மருத்துவமனையில் உள்ளதா?
9) கருத்தரித்தல் சிகிச்சை எனக்கு எந்த அளவுக்கு வெற்றிகரமாக அமையும் என்று நீங்கள் கருதுகிறீர்கள்.
10) இந்த சிகிச்சைக்கு எவ்வளவு செலவாகும்? இந்த சிகிச்சைக்கான கட்டணத்தை என்னுடை மருத்துவ காப்பீடிலிருந்து கிளெய்ம் செய்ய முடியுமா?

தமிழக சிறுவர்களுக்கு கொடுமை....கேரளா கம்பெனிகளில்!


என் மகன் பாலமுருகனை (14), மாரிமுத்து என்பவர் ஏப்ரல் மாதம் கேரள மாநிலம் கண்ணணூரில் உள்ள சிப்ஸ் கம்பெனிக்கு வேலைக்கு அழைத்து சென்றார். அதிக சம்பளம், சாப்பாடு அளிப்பதாக சொல்லி, முன்பணமாக ஸீ3 ஆயிரம் கொடுத்து மகனை கேரளாவுக்கு கூட்டி சென்றார். ஜூலை 13ல் திடீரென மாரிமுத்து, பாலமுருகனுடன் ஊருக்கு வந்தார். பாலமுருகன் உடலில் பல இடங்களில் காயங்கள் இருந்தது. சிப்ஸ் கம்பெனியில் பாலமுருகனை கடுமையாக வேலை வாங்கியுள்ளனர். தூங்கவிடாமல் 24 மணி நேரம் வேலை செய்ய சொல்லி கொடுமைப்படுத்தியுள்ளனர். ஜூலை 5ல் தூங்கி கொண்டிருந்த அவனை எழுப்பி வேலை செய்ய சொல்லி அடித்துள்ளனர். கொதித்துக் கொண்டிருந்த எண்ணெய்யை அவன் மீது ஊற்றியுள்ளனர். அவனை கொடுமைப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அரசுக்கும், போலீஸ் உயர் அதிகாரிகளுக்கும் மனு கொடுத்தேன். 

துப்பாக்கி சூட்டில் 80 பேர் பரிதாப பலி !

சூடானில் போராட்டக்காரர்கள் திடீர் தாக்குதல் நடத்தியதில் பொதுமக்கள் 15 பேர் உள்பட 80 பேர் பரிதாபமாக பலியாயினர்.
ஆப்ரிக்க நாடான சூடானில் முஸ்லிம்களுக்கும் ஆப்ரிக்கர்களுக்கும் இடையில் தொடர்ந்து இன மோதல் நடந்து வருகிறது. வடக்கு சூடானில் உள்ளவர்களுக்கும் தெற்கு சூடானில் உள்ளவர்களுக்கும்  மோதல் உள்ளது. சமூகத்தில் ஏற்றத் தாழ்வுகளை எதிர்த்து Ôதெற்கு சூடான் விடுதலை படைÕ (எஸ்எஸ்எல்ஏ) என்ற பெயரில் போராட்டக்காரர்கள் வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த ஜூன் மாதத்தில் இருந்து போராட்டக்காரர்கள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். 
இந்நிலையில் தெற்கு சூடானில் உள்ள மயோம் நகருக்குள் எஸ்எஸ்எல்ஏ போராட்டக்காரர்கள் நூற்றுக்கணக்கில் திடீரென புகுந்தனர். அவர்களுக்கும் சூடான் ராணுவத்துக்கும் இடையில் கடும் துப்பாக்கிச் சண்டை நடந்தது. இதில் 60 போராட்டக்காரர்கள் உள்பட 80 பேர் பலியாயினர் என்று சூடான் தகவல் தொடர்புத் துறை அமைச்சர் கிடியோன் காட்பன் தோர் நேற்று தெரிவித்தார்.
அவர் கூறுகையில், ÔÔஉள்ளூர் தீவிரவாதிகளுக்கு உதவ எஸ்எஸ்எல்ஏ போராட்டக்காரர்கள் திடீரென நுழைந்து வன்முறையில் ஈடுபட்டதால் ராணுவம் தாக்குதல் நடத்தியது. தற்போது நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதுÕÕ என்றார்.

Saturday, 29 October 2011

Short on cash, govt eyes surplus with PSUs


The Prime Minister is eyeing the “significant” cash surplus with 24 rich public sector undertakings (PSUs) to tide over his government’s revenue shortfall in the current financial year and to keep the fiscal deficit within bounds.
Last Monday, the Prime Minister’s Office directed 10 ministries and departments to conduct a 12-month investment plan of the identified PSUs under them and report by November 15 the surplus they would hold beyond their investment needs.
Tables annexed with the PMO letter show that the government plans to ask these PSUs to use the surplus cash to buy back their shares held by the government. Numbers in the tables indicate two options: buyback at 5 per cent or at 10 per cent of the market capitalisation as of September 30.
“It is imperative that these surpluses, possibly leveraged suitably, be utilised productively,” says the PMO letter.

Sebastian Vettel takes pole at first Indian F1 Grand Prix......


Red Bull's Sebastian Vettel scorched his way to the pole position for Sunday's Formula One Indian Grand Prix while Force India can hope to score points in the first ever home race with Adrian Sutil qualifying for the eighth position on the grid here today.
Vettel, running on soft tyres, clocked 1:24.178 to secure 13th pole position of the 2011 season, pipping McLaren's Lewis Hamilton by 0.296 secs. Vettel's teammate Mark Webber (1:24.508) was third.
Hamilton will actually start from fifth position due a three-place grid penalty for ignoring a flag warning.
Ferrari's Fernando Alonso was fourth, followed by McLaren's Jenson Button. Up next was Ferrari's Felipe Massa, who crashed in the final seconds after hitting the raised part of a kerb. Fortunately, the Brazilian was not injured.
Force India's second driver Paul di Resta did better than the final practice session in the morning but could not make the Q3 and settled for 13th position after clocking 1:26.503, just behind Mercedes GP¿s Michael Schumacher.

4 organisers arrested, show cancelled


Four officials of a company involved in organising rock band Metallica's maiden concert in India have been arrested on charges of cheating even as the event by the celebrated American heavy metal band has been cancelled on "security grounds".
Hours after the concert failed to take off as scheduled last night and triggered chaos at the Leisure Valley venue with fans going berserk, police arrested four persons belonging to DNA network, the event management company looking after the show.
They were arrested under sections 406 (breach of trust) and 420 (cheating) of the Indian Penal Code, police said.
Those arrested include Ashok, Rajesh, Savia Faleio and Umesh.
The company said, "The band was notified that there was a serious question as to whether the show could proceed with regard to the safety of the concert audience".

போலிசாருக்கும் போதை மருந்து கும்பலுக்கும் இடையே மோதல் !

 போலீசாருக்கும் போதை மருந்து கும்பலுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கி சண்டையில் 21 பேர் பலியாகியுள்ளனர். அம்மாநில செய்தி தொடர்பாளரும் அரசு தரப்பு வழக்கறிஞருமான ஜொனாதன் அரேன்டான்டோ இத்தகவலை தெரிவித்துள்ளார். போதை மருந்து கும்பலுக்கும் அரசு தரப்பு படையினருக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் போதை மருந்து கும்பலை சேர்ந்த 10 பேர் கொல்லப்பட்டனர், தொடர்ந்து குடியிருப்பு பகுதிகளில் நடைபெற்ற தாக்குதலில் பொதுமக்கள் 5 பேர் பலியாயினர் மேலும் வேறு இரு தாக்குதலின் போது காவல் துறை அதிகாரி ஒருவர் காயமடைந்தார்.

Twin blasts in Imphal, seven injured


Twin blasts rocked Imphal on Wednesday night, injuring seven people. The blasts took place in a crowded market area, as people thronged to celebrate Diwali festivities. The first bomb exploded outside a bank, injuring three people. The second explosion took place in a garment shop, destroying the store's shutter. The motive behind the blast is yet to be ascertained as no one has claimed responsibility for it.

மணமகனாக.... ஜொலிக்கிறார் கௌதம் கம்பீர....:

இந்தியாவின் துவக்க ஆட்டக்காரரான கௌதம் கம்பீர் டெல்லியைச் சேர்ந்த நடாஷா ஜெயினை இன்று மணக்கிறார். அந்த நிகழ்ச்சியில் சச்சின் டெண்டுல்கர், ஷாருக்கான் ஆகியோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தவிருக்கின்றனர் என்று கூறப்படுகிறது. இந்தியாவின் துவக்க ஆட்டக்காரரான கௌதம் கம்பீர் டெல்லியைச் சேர்நதவர். அவர் கடந்த 1 ஆண்டுக்கு முன்பு டெல்லியைச் சேர்ந்த நடாஷா ஜெயின் என்பவரை சந்தித்தார். 

அவர்கள் நட்பு, காதலாக மாறியது. அவர்கள் காதலுக்கு இரு வீ்ட்டாரும் பச்சைக் கொடி காட்டியதையடுத்து திருமணம் நிச்சயிக்கப்பட்டது. குர்கானில் உள்ள பண்ணை வீட்டில் கம்பீர், நடாஷா திருமணம் நடக்கிறது. இதில் லிட்டில் மாஸ்டர் சச்சின் டெண்டுல்கர், பாலிவுட் பாதுஷா ஷாருக் கான் ஆகியோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தவிருக்கின்றனர் என்று கூறப்படுகின்றது. கௌதம் கம்பீர் ஷாருக் கானின் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் என்பது குறிப்பிடத்தக்கது.

-

டாக்டர்களின் அலட்சியத்தால்... 17 குழந்தைகள் பரிதாப சாவு!

 கொல்கத்தா அரசு மருத்துமனையில் 12 குழந்தைகள் பலியான சோகம் மறைவதற்குள், மேலும் 17 குழந்தைகள் பலியானதாக திடுக்கி டும் தகவல் வெளியாகி யுள்ளது. மேற்கு வங்காள மாநிலம், வடக்கு கொல்கத்தாவில் பி.சி. ராய் அரசு குழந்தைகள் நல மருத்துவமனை உள்ளது. இங்கு, ஏராளமான குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. 

இந்த மருத்துவமனையில் 2 நாளில் 21 குழந்தைகள் வரிசையாக இறந்தன. இதனால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில், கடந்த 25ம் தேதியும் இங்கு பல வார்டுகளில் அனுமதிக்கப்பட்டு இருந்த குழந்தைகள் திடீரென ஒவ்வொன்றாக இறந்தன. அன்றைய தினம் மட்டும் 8 குழந்தைகள் இறந்தன. மறுநாள் தீபாவளி அன்று மேலும் 4 குழந்தைகள் இறந்தன. டாக்டர்களின் அலட்சியத்தால் குழந்தைகள் இறந்ததாக பெற்றோர்கள் கதறினர்.

தீவிரவாதிகள் சென்னைக்குள்.... வேலாயுதம்


 
ஜய்யின் ஆக்ஷன் பார்முலா இயக்குனர் எம்.ராஜாவின் அழுத்தமான கதையாக்கம் பிரமாண்ட காட்சி கலவையுடன் படம் விறுவிறுப்பாய் எகிறுகிறது...
 
கதை பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் எல்லையில் துவங்குகிறது. தமிழக உள்துறை மந்திரியை தீவிரவாதிகள் கடத்தி செல்லும் ஹெலிகாப்டர் அங்கு இறங்குகிறது. அவர்களிடம் மந்திரி மண்டியிட்டு சென்னையில் குண்டு வெடிப்புகள் நடத்த உதவுதாக வாக்குறுதி அளிக்கிறார். அதன்படி தீவிரவாதிகள் சென்னைக்குள் ஊடுருவுகின்றனர்.
 
மந்திரி தயவில் நடக்கும் கள்ள நோட்டு அச்சடிப்பு இளம்பெண் கடத்தல் என சமூக விரோத செயலில் ஈடுபடும் கும்பலை பத்திரிகை நிருபர் ஜெனிலியா வெளிச்சத்துக்கு கொண்டு வர முயற்சிக்கிறார். அவரை ரவுடிகள் பிடித்து குத்தி சாய்க்கின்றனர்.

திருப்பத்தூர் ஒன்றிய குழு அலுவலகம் சூறை

       தேர்தலின் போது ஏற்பட்ட மோதல் காரணமாக திருப்பத்தூர் ஒன்றிய குழு அலுவலகம் சூறையாடப்பட்டுள்ளது. ஒன்றிய குழு துணை தலைவர் பதவிக்கு அதிமுக சார்பில் திருப்பதியும், திமுக சார்பில் நல்லதம்பியும் பேட்டியிட்டனர். இருவரும் சமமான வாக்குகள் பெற்றதால் தேர்தலை ஒத்தி வைக்குமாறு கூறினர். இதனால் கூச்சல் குழப்பம் நிலவியது. இந்நிலையில் வாக்குவாதம் முற்றி கைகலப்பாக முற்றியது. இதில் ஒன்றிய குழு அலுவலகம் சூறையாடப்பட்டது.

Friday, 28 October 2011

600 அறைகள், நவீன வசதிகளுடன் கிண்டியில் உருவாகும் பிரமாண்ட ஓட்டல்.. மாடியில் ஹெலிகாப்டர்


சென்னை கிண்டியில் ஸ்பிக் பில்டிங் அருகே ஐ.டி.சி. நிறுவனம் பிரம்மாண்டமான நட்சத்திர ஓட்டலை கட்டி வருகிறது.   8 ஏக்கர் பரபரப்பளவில் தரை தளம் மற்றும் 10 மாடி கொண்டதாக கட்டப்பட்டு வரும் இந்த ஓட்டலில் 600 அறைகள் நவீன வசதிகளுடன் உள்ளன.
 
இந்த ஓட்டலின் மாடியில் ஹெலிகாப்டர் வந்திறங்கும் வகையில் ஹெலிபேட் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு அனுமதி கேட்டு சென்னை மாநகராட்சி, சி.எம்.டி.ஏ., விமான நிலைய அதிகாரிகள், தீயணைப்பு துறை ஆகியோரிடம் ஓட்டல் நிர்வாகம் அனுமதி கேட்டுள்ளது.

வாலிபர்களிடம் ரூ. 25 லட்சம் மோசடி....நர்ஸ்...


திருச்சூரில் உள்ள ஜூபிளி மிஷன் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் வேலை பார்த்து வருகிறேன். சென்னை சிட்லபாக்கத்தில் உள்ள சகோதரியின் வீட்டுக்கு வந்து செல்வேன். அப்போது அதே பகுதியில் உள்ள ரெங்கநாயகி மற்றும் அவரது சகோதரரின் அறிமுகம் கிடைத்தது. இருவரும் அமெரிக்கா, இங்கிலாந்தில் நர்சு படிப்புக்கு நல்ல வரவேற்பு உள்ளது.
 
அங்கு சென்று வேலை செய்தால் 3 லட்சம் ரூபாய் சம்பளம் கிடைக்கும். இதற்கு விசா மற்றும் பயண செலவுகளுக்கு ரூ. 5 1/2 லட்சம் செலவாகும் என்று கூறினார்கள். இதை நம்பி ரூ. 2? லட்சத்தை கொடுத்தேன். என்னைப்போல் கேரளாவை சேர்ந்த ரின்டோ ராஜு, எட்வின், கோபால், ஆஷாபைஜூ உள்பட 9 பேர் ரூ. 24 லட்சத்து 90 ஆயிரம் பணம் கொடுத்துள்ளனர்.
 
பணத்தை வாங்கிக் கொண்ட ரெங்கநாயகியும், கண்ணனும் எங்களை வெளி நாட்டுக்கு அனுப்பி வைக்காமல் ஏமாற்றி விட்டனர். இதுபற்றி பள்ளிக்கரணை போலீசில் புகார் செய்தோம். அப்போது சப்-இன்ஸ் பெக்டர் ஒருவர் சரியாக விசாரிக்க வில்லை. எனவே பாதிக்கப்பட்ட எங்களுக்கு உரிய நிவாரணம் கிடைக்க உதவும்படி கேட்டுக் கொள்கிறேன்.

Thursday, 27 October 2011

கார் ஓட்டியதால் விபத்து: டெலிவிஷன் நடிகர்?


மும்பையைச் சேர்ந்த முன்னணி டெலிவிஷன் நடிகர் ரோனித் ராய்.   இவர் தீபாவளி பார்ட்டி முடிந்து காரில் இன்று காலை வீடு திரும்பிக் கொண்டிருந்தார். மும்பை புறநகரமான அம்பாலா பகுதியில் காரை மிகவும் வேகமாக ஓட்டி சென்ற போது 3 பேர் மீது மோதினார்.
 
அதோடு மற்றொரு கார் மீது மோதினார். இதில் படுகாயம் அடைந்த 3 பேரும் கூப்பர் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதில் 2 பேரது நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.
 
விபத்துக்குள்ளானவர்களில் 50 வயது பெண்மணி ஒருவரும் அடங்குவார்.   இது தொடர்பாக மும்பை போலீசார் வழக்குப்பதிவு செய்து டெலிவிஷன் நடிகர் ரோனித் ராயை கைது செய்தனர்.
 
அவர் குடிபோதையில் வாகனம் ஓட்டி இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. ஆனால் அவர் தான் மது எதுவும் அருந்தவில்லை என்று போலீசாரிடம் கூறியுள்ளார்.