HAI FRIENDS PLEASE CLICK THE ADD.

Wednesday, 30 November 2011

சோம்பேறித்தனம், நரம்புத் தளர்ச்சி தவிர்க்க வழிகள்!

நின்ற பாத ஆசனம்
வலது காலில் நின்று கொண்டு இடது காலை மடக்கி குதிகாலை வலது தொடை மேல் வளைத்து ஆசனவாயில் படும்படி நிறுத்த வேண்டும். இரு கைகளையும் உயரே முடிந்த அளவு உயர்த்திக் கும்பிட வேண்டும். கையை விறைப்பாக வைக்கக் கூடாது.
பின் இடது காலில் நிற்க வேண்டும். முறைக்கு 1 நிமிடமாக 2 முதல் 4 முறை செய்யலாம். நின்று கொண்டு காலை பத்மாசனத்திற்குப் போடுவது போன்றும் செய்யலாம். மூச்சு சாதாரணமாக விடலாம். பழங்காலக் கோவில்களில் இதுபோன்ற ஆசன நிலையில் உள்ள சிற்பங்கள் பல காணலாம்.
பலன்கள்....
இவ்வாசனம் பார்வைக்கு மிக இலகுவாகத் தோன்றினாலும் இதன் பலன் மிக அதிகம். தியானம், மன ஒருமைப்பாடு, திடசிந்தனை இவைகளுக்கு சிறந்த ஆசனம். வாதம், நரம்புத் தளர்ச்சி, சோம்பேறித்தனம் இவைகள் ஒழியும். மனச் சஞ்சலம் ஒழியும். திடமனது ஏற்படும். காரியங்களைச் செம்மையாக முடிக்கும் ஆற்றல் உண்டாகும். பயம் ஒழியும். ரத்த ஓட்டம் சீர்படும். மன அமைதி பெறும். சஞ்சலங்கள் ஏற்படாது.

labels:nervess weak,meditation,

தாய்-மகள் கழுத்தை அறுத்து கொலை?


திருமங்கலத்தில் பயங்கரம்: கழுத்தை அறுத்து தாய்-மகள் படுகொலை; வீட்டுக்குள் பிணமாக கிடந்தனர்
திருமங்கலம் இந்திரா நகரை சேர்ந்தவர் பாண்டியம்மாள் (வயது45). இவரது மகள் வாசுதேவி (19). இவருக்கும் திருமணமாகிவிட்டது. 2 பேருமே கணவர்களை விட்டு பிரிந்து ஒரே வீட்டில் தனியாக வசித்து வந்தனர். பாண்டியம்மாள் திருமங்கலம் நகரசபையில் துப்புரவு தொழிலாளியாக பணியாற்றி வந்தார். வாசு தேவியும் அவ்வப்போது கூலி வேலைக்கு சென்று வந்தார்.
 
இந்த நிலையில் இன்று காலை நீண்ட நேரமாகியும் பாண்டியம்மாளின் வீட்டுக்கதவு திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் வீட்டு கதவை தட்டினர். கதவை தட்டியதுமே அது தானாக திறந்து கொண்டது. வீட்டுக்குள் பாண்டியம்மாளும், வாசுதேவியும் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தனர்.
 
இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர்கள் திருமங்கலம் டவுண் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு உடனே விரைந்து வந்தனர். தாய்-மகள் 2 பேரையும் கழுத்தை அறுத்து கொலை செய்தது யார்? எதற்காக இந்த கொலை நடந்தது? என்பது தெரியவில்லை.

labels:thirumangalam, police,death.

Tuesday, 29 November 2011

பெட்ரோல் விலை குறைப்பு!!


பெட்ரோல் விலையை சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு   ஏற்ப எண்ணை   நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. கடந்த சில மாதங்களாகவே சர்வதேச  சந்தையில் கச்சா எண்ணை  விலையில் வீழ்ச்சி ஏற்பட்டு வருகிறது. எனவே, இங்கு பெட்ரோல் விலையை குறைக்க எண்ணை நிறுவனங்கள் தீர்மானித்தன.
 
இம் மாதம்  16-ந்தேதி லிட்டருக்கு ரூ.2.22வரை விலை  குறைக்கப்பட்டது. இந்த விலை  குறைப்புக்கு பிறகு டெல்லியில் ஒரு  லிட்டர் பெட்ரோல் ரூ.66.42-க்கு விற்கப்படுகிறது.
 
இந்நிலையில், பெட்ரோல் விலை மீண்டும் குறைக்கப்பட உள்ளது. எண்ணை நிறுவன அதிகாரிகள் கடந்த வாரம் கூடி இதுபற்றி   முடிவு  எடுத்தனர். விலை  குறைப்பு முடிவு இன்று நள்ளிரவு   முதல் அமலுக்கு  வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. லிட்டருக்கு ரூ.1 முதல் ரூ.1.50 வரை குறையும் என்று கூறப்படுகிறது. அத்துடன்  பெட்ரோல் மீதான வரியும் லிட்டருக்கு ரூ.1.02 குறையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

labels:petrol,delhi.

பஸ் ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு.......


51-ல் இருந்து 58 சதவீதமாக பஸ் ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு: ஜெயலலிதா அறிவிப்பு
மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான அக விலைப்படியை மாநில அரசு ஊழியர்களுக்கு வழங்கும் வகையில், மாநில அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுவோருக்கான அகவிலைப்படியை 51 விழுக்காட்டில் இருந்து 58 விழுக்காடாக 1.7.2011 முதல் உயர்த்தி வழங்கவும், அதற்கான நிலுவைத் தொகையை ரொக்கமாக வழங்கவும் கடந்த அக்டோபர் மாதம் நான் ஆணையிட்டேன்.
 
இதேபோன்று, தமிழ்நாட்டில் இயங்கி வரும் எட்டு அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரியும் அலுவலர்கள், தொழில்நுட்பப் பணியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் ஆகியோருக்கு வழங்கப்பட்டு வரும் அகவிலைப்படியையும், 51 சதவீதத்தில் இருந்து 58 சதவீதமாக 1.7.2011 முதல் உயர்த்தி வழங்க நான் தற்போது ஆணையிட்டுள்ளேன்.
 
இந்த உயர்த்தப்பட்ட அகவிலைப்படி நிலுவையின்றி ரொக்கமாக 1.7.2011 முதல் வழங்கப்படும். இந்த அகவிலைப்படி உயர்வு காரணமாக, அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு கூடுதலாக மாதம் ஒன்றுக்கு 9 கோடியே 15 லட்சம் ரூபாய் செலவாகும்.
 
இந்த அகவிலைப்படி உயர்வின் மூலம், போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரியும் 1 லட்சத்து 19 ஆயிரத்து 261 அலுவலர்கள், பணியாளர்கள், தொழிலாளர்கள் பயன் பெறுவர். தற்போது அறிவிக்கப்பட்டுள்ள இந்த அகவிலைப்படி உயர்வு, அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றும் பணியாளர்களும், தொழிலாளர்களும் மேன்மேலும் ஊக்கத்துடனும், உற்சாகத்துடனும் கடமையாற்ற வழிவகை செய்யும் என்று நம்புகிறேன்.
 labels:jeyalalitha,

அம்மா ஓய்வு


முதல்வர் ஜெயலலிதா நாளை, நீலகிரி மாவட்டம் கோடநாடு செல்கிறார். முதல்வர் வருகையை தொடர்ந்து பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மேற்கு மண்டல ஐஜி (பொறுப்பு) அம்ரேஷ் பூஜாரி, டிஐஜி ஜெயராமன், நீலகிரி எஸ்பி நிஜாமுதீன், குன்னூர் டிஎஸ்பி மாடசாமி ஆகியோர் நேற்று ஆலோசனை நடத்தினர்.

 கோத்தகிரி முதல் கோடநாடு வரை சாலையில் எந்தெந்த பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என்பது குறித்து ஆராயப்பட்டது. உள்ளூர் போலீசார் மட்டுமில்லாமல், கோவையில் இருந்து அதிவிரைவு படை போலீசாரையும் வரவழைக்க திட்டமிடப்பட்டது. 

வழக்கமாக ஜெயலலிதா கோடநாடு வரும்போது சென்னையில் இருந்து கோவைக்கு விமானம் மூலம் வந்து பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் கோடநாடு செல்வது வழக்கம். 

ஆனால், நீலகிரியில் கடந்த 4 நாட்களுக்கும் மேலாக மேகமூட்டம் நிலவி வருகிறது. நாளையும் இதே போல் மேகமூட்டம் நிலவினால் ஹெலிகாப்டர் தரையிறங் குவதில் சிக்கல் ஏற்படும். 

எனவே, வாகனம் மூலம் தரைமார்க்கமாக முதல்வர் கோடநாடு செல்வது குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. 

தலைமை செயலாளர் தேபேந்திரநாத் சாரங்கி மற்றும் சில அமைச்சர்கள், உயர் அதிகாரிகள், தோழி சசிகலா ஆகியோரும் கோடநாடு செல்கின்றனர். கோடநாடு பங்களாவில் ஜெயலலிதா சுமார் 3 வார காலம் தங்கி இருப்பார். டிசம்பர் கடைசியில் சட்டசபை குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கும் நேரத்தில் சென்னை திரும்புவார்

labels:jeyalalitha,mudalvar,ஜெயலலிதா, முதல்வர் 

Monday, 28 November 2011

ரஜினி டாடா காட்டிய தீபிகா.....

http://gallery.oneindia.in/celebs/deepika-padukone-11180.htmlரஜினி டாடா காட்டிய தீபிகா.......எந்திரன் படத்துக்குப் பிறகு ரஜினியின் அடுத்த படம் குறித்து பெரும் குழப்பம் தொடர்ந்து நிலவி வந்தது. முதலில் சுல்தான் தி வாரியர் என்ற படத்தைக் கூறி வந்தனர். பின்னர் ராணா என்ற பெயரில் புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியானது. இதற்கான பூஜையும் போடப்பட்டது. தீபிகா படுகோன் இப்படத்தில் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. இதனால் தீபிகாவும் உற்சாகமாக இருந்தார். ஆனால் ரஜினிக்கு உடல் நலம் பாதிக்கப்படவே, ராணா படப்பிடிப்பு நின்று போனது. அவர் உடல் நலம் குணமடைந்து திரும்பினாலும் கூட அதிரடி ஆக்ஷன் காட்சிகள் படத்தில் இருப்பதால் அவரை ராணா படத்தில் நடிக்க வைப்பது குறித்து குடும்பத்தினரும், படக்குழுவினரும் தீவிர சிந்தனையில் மூழ்கினர்.

இந்த நிலையில்தான் கோச்சடையான் என்ற புதிய பட அறிவிப்பை வெளியிட்டனர். இந்தப் படத்தை அதி நவீன தொழில்நுட்பத்தில், எடுக்கப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஹீரோயினாக நடிக்க அனுஷ்காவை நாடியுள்ளதாக இப்படத்தின் இயக்குநர் மேற்பார்வைப் பணியைக் கவனிக்கப் போகும் கே.எஸ்.ரவிக்குமார் கூறியுள்ளார்.

இதனால் ராணா பட நாயகி தீபிகா கடும் அப்செட்டாகியுள்ளாராம். ராணா படம் நிறுத்தி வைக்கப்பட்டு விட்டது குறித்து அவரிடம் கருத்து கேட்போரிடம், அதுகுறித்து என்னைக் கேட்டால் எனக்கு என்ன தெரியும். நான் இப்போது மிகவும் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறேன். ராணா படம் குறித்து எனக்கு ஒரு தகவலும் தெரியாது. எனவே அதுகுறித்து என்னிடம் கேட்காதீர்கள் என்கிறாராம்.

தீபிகா இப்படி மறைமுகமாக கூறினாலும் கூட இப்படத்தில் நடிக்கும் திட்டத்தை தீபிகா கைவிட்டு விட்டதாக அவருக்கு நெருங்கிய வட்டாரம் கூறுகிறது. மாறாக, ராணா படத்துக்காக ஒதுக்கி வைத்திருந்த கால்ஷீட்களை தற்போது புதிய இந்திப் படங்களுக்கு அவர் ஒதுக்கிக் கொடுத்து விட்டாராம். மீண்டும் ராணா படத் தரப்பில் தன்னை அணுகினாலும் அவர் மறுத்து விடப் போவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

labels:deepika, rajmi,kamal,

3 பைகளில் 2 பையை மட்டும் தப்பியது.


கடையின் அலமாரியில் இருந்த தங்க செயின்கள், தங்க மாலைகள் என 500 பவுன் நகைகள் கொள்ளையடிக்ப்பட்டது தெரிய வந்ததது. இதன் மதிப்பு ரூ. 1 கோடி ஆகும். கடையின் பூட்டுகள் மாறி உள்ளதால் கள்ளச்சாவி போட்டு மர்ம நபர்கள் நகையை கொள்ளையடித்து உள்ளனர்.
கடையில் 18 ஊழியர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். அவர்களிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர். சின்னக்கடை வீதியில் ஏராளமான நகை கடைகள் உள்ளது. இந்த வீதி எப்போதும் ஆட்கள் நடமாட்டம் அதிகம் இருக்கும் பகுதி ஆகும். மேலும் கொள்ளை போன கடையின் அருகே போலீஸ் பூத் உள்ளது. இங்கு சுழலும் கண்காணிப்பு காமிரா பொருத்தப்பட்டு உள்ளது. இங்கு கொள்ளையர்கள் கைவரிசை காட்டி இருப்பது மற்ற நகை கடை உரிமையாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கொள்ளை நடந்த கடை அருகே கோட்டை காவல் நிலையம்
திருச்சியில் கொள்ளை நடந்த அமர் ஜுவல்லர்ஸ் இருக்கும் சின்னக்கடை வீதியில் மேலும் மிகப்பெரிய நகை கடைகளும், வர்த்தக நிறுவனங்களும் உள்ளது. இங்கிருந்து 10 கடைகள் தள்ளிதான் கோட்டை போலீஸ் நிலையம் உள்ளது. இங்கு இரவு நேரத்தில் போலீசார் ரோந்து வருவார்கள். இதனையும் மீறி கொள்ளையர்கள் துணிகர செயலில் ஈடுபட்டு இருப்பது வியாபாரிகள் இடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது.
நகை பையை விட்டு சென்ற கொள்ளையர்
அமர் ஜுவல்லரியில் பல ரேக்குகள் உள்ளது. இந்த ரேக்குகளில் உள்ள நகையை கொள்ளையர்கள் 3 பைகளில் அள்ளி போட்டு உள்ளனர். ஆட்கள் வரும் சத்தம் கேட்டதால் 2 பையை மட்டும் எடுத்து கொண்டு தப்பி உள்ளனர். ஒரு பையை விட்டு சென்றதால் அதில் இருந்த 100 பவுன் நகை தப்பி உள்ளது.


labels:நகை,ஜுவல்லரி,போலீசார். 

ஒல்லியாக ஆக வேண்டுமா?

 தூக்கத்தில் இருந்து அதிகாலையில் எழுந்திருப்பவர்கள் உடல் எடை குறைந்து ஆரோக்கியத்துடன் மகிழ்ச்சியாகவும், ஸ்லிம்மாகவும் இருப்பார்கள் என்று இங்கிலாந்து ஆய்வு தெரிவிக்கிறது. லண்டன் ரோஹம்டன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் மனிதனின் உடல் நிலை மற்றும் தூங்கும் பழக்கவழக்கங்கள் குறித்த ஆய்வில் இறங்கினர்.ஆய்வில் 1,068 பேர் கலந்து கொண்டனர். 

அதன் விவரம்: தூக்கத்தில் இருந்து சராசரியாக காலை 5.58 மணிக்கு எழுந்திருக்கும் நபர்களையும், காலை 8.54 மணி வரை தூங்கிய பிறகு எழுந்திருப்பவர்களின் நடவடிக்கை, உடல் நிலை பற்றி அறியப்பட்டது. அதில் காலையில் நேரம் கழித்து எழுந்திருக்கும் நபர்களைவிட, விடியற்காலை கண்விழித்து எழும் நபர்கள் உற்சாகமாக காணப்படுவது தெரிய வந்தது. அத்துடன் அவர்களது உடல் எடை குறைந்து ஆரோக்கியமாக இருந்தனர். தோல் சுருக்கமின்றி இளமையாக காணப்பட்டனர். உடல்வாகும் ஸ்லிம்மாக இருந்தனர். மேலும் வார இறுதியில் 2 பிரிவினருமே சற்று அதிக நேரம் தூங்குகின்றனர். அவ்வாறாக சீக்கிரம் எழுந்திருப்பவர்கள் காலை 7.45 மணி வரை தூங்குவதாக ஆய்வில் தெரியவந்தது.


labels:slim,

ஸ்ருதி ஹாசன் வெளியே! இலியானா உள்ளே!

Shruti Hassan
தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியின் தம்பி பவன் கல்யாண் நடிக்கும் புதிய படத்தில் ஹீரோயினாக முதலில் தேர்வு செய்யப்பட்டிருந்த ஸ்ருதி ஹாசன் தற்போது படத்தில் இல்லையாம். அவருக்குப் பதில் இலியானாவை ஹீரோயினாக்கியுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

தெலுங்கில் உருவாகும் புதிய படம் கப்பார் சிங். பவன் கல்யாண் ஹீரோவாக நடிக்கிறார். இதில் முதலில் ஹீரோயினாக தேர்வானவர் ஸ்ருதி ஹாசன். ஆனால் தற்போது இலியானாவைத் தேடிப் போயுள்ளனராம்.

இந்தப் படம் வேறு எதுவுமல்ல, இந்தியில் வெளியான தபாங் படத்தின் ரீமேக்தான். ஹரிஷ் சங்கர் இயக்குகிறார். தபாங் ஏற்கனவே தமிழில் ஒஸ்தி என்ற பெயரில் ரீமேக் ஆகியஉள்ளது. டிசம்பர் 8ம் தேதி திரைக்கு வருகிறது. இப்படம்தான் தெலுங்கில் கப்பார் சிங் என்ற பெயரில் உருமாறி வருகிறது.

ஸ்ருதி ஹாசன் நீக்கத்திற்கான காரணம் தெரியவில்லை. அதேபோல இலியானாவைத் தேடிப் போனதற்கான காரணமும் தெரியவில்லை. ஒருவேளை கவர்ச்சிக்காக இலியானாவைச் சேர்க்க திட்டமிட்டனரா என்பதும் தெரியவில்லை.

ஆனால் ஸ்ருதி ஹாசன் நீக்கத்தால் நடிகை அமலா பால் சந்தோஷமானதாக ஒரு தகவல் கூறுகிறது. தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள 3 படத்தில் முதலில் அமலா பால்தான் நடிப்பதாக இருந்தது. ஆனால் இடையில் என்ன நடந்ததோ தெரியவில்லை அவருக்குப் பதில் ஸ்ருதி ஹாசன் நடித்தார். இந்த நிலையில், ஸ்ருதி ஹாசனுக்கு பெரிய பட வாய்ப்பு தெலுங்கில் பறிபோன தகவல் அமலா பாலுக்கு ஹேப்பி நியூஸாக தெரிவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


labels:sruthihasan,amala,

Saturday, 26 November 2011

உடம்பு ஒல்லியாக ஆகணுமா? இதை படிங்க.

உடம்பு ஒல்லியாக ஆகணுமா? இதை படிங்க. தூக்கத்தில் இருந்து அதிகாலையில் எழுந்திருப்பவர்கள் உடல் எடை குறைந்து ஆரோக்கியத்துடன் மகிழ்ச்சியாகவும், ஸ்லிம்மாகவும் இருப்பார்கள் என்று இங்கிலாந்து ஆய்வு தெரிவிக்கிறது. லண்டன் ரோஹம்டன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் மனிதனின் உடல் நிலை மற்றும் தூங்கும் பழக்கவழக்கங்கள் குறித்த ஆய்வில் இறங்கினர்.ஆய்வில் 1,068 பேர் கலந்து கொண்டனர். 

அதன் விவரம்: தூக்கத்தில் இருந்து சராசரியாக காலை 5.58 மணிக்கு எழுந்திருக்கும் நபர்களையும், காலை 8.54 மணி வரை தூங்கிய பிறகு எழுந்திருப்பவர்களின் நடவடிக்கை, உடல் நிலை பற்றி அறியப்பட்டது. அதில் காலையில் நேரம் கழித்து எழுந்திருக்கும் நபர்களைவிட, விடியற்காலை கண்விழித்து எழும் நபர்கள் உற்சாகமாக காணப்படுவது தெரிய வந்தது. அத்துடன் அவர்களது உடல் எடை குறைந்து ஆரோக்கியமாக இருந்தனர். தோல் சுருக்கமின்றி இளமையாக காணப்பட்டனர். உடல்வாகும் ஸ்லிம்மாக இருந்தனர். மேலும் வார இறுதியில் 2 பிரிவினருமே சற்று அதிக நேரம் தூங்குகின்றனர். அவ்வாறாக சீக்கிரம் எழுந்திருப்பவர்கள் காலை 7.45 மணி வரை தூங்குவதாக ஆய்வில் தெரியவந்தது.

labels:slim.

இருளர் இன பெண்கள் போலீசார் பாலியல்

: தங்களை விசாரணைக்கு அழைத்துச் சென்று திருக்கோவிலூர் போலீசார் பாலியல் பலாத்காரம் செய்து விட்டதாக, இருளர் இன பெண்கள் 4 பேர் மாவட்ட எஸ்.பி.,யிடம் புகார் அளித்துள்ளனர். விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகேயுள்ள டி. மண்டபத்தில் வசிக்கும் இருளர் இன பெண்கள் 4 பேர், திருக்கோவிலூர் போலீசார் நேற்றிரவு தங்களை விசாரணைக்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக விழுப்புரம் எஸ்.பி., அலுவலகத்தில் புகார் அளித்தனர்.

labels:police

Tuesday, 22 November 2011

பணத்தை வேஸ்ட்டு செய்யும் அரசியல்வாதிகள்

பார்லி‌மென்ட்டில் மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் பதவி விலக கோரி எதிர்கட்சிகள் நடத்திய அமளி காரணமாக ஒரு ‌கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது. பார்லிமென்ட்டின் குளிர்கால கூட்டத்தொடர் நேற்று துவங்கியது. டிசம்பர் மாதம்21-ம் தேதி வரை நடைபெற உள்ளது. கூட்டத்தின் முதல் நாளான நேற்று நடைபெற்ற கேள்வி நேரத்தின் போது உள்துறை அமைச்சர் சிதம்பரம் பதவி விலக கோரி எதிர்கட்சிகள் நடத்திய அமளியால் அவை ஒத்திவைக்கப்பட்டது. பார்லிமென்ட் நடப்பதற்காக ஒரு மணி நேரத்திற்கு குறைந்தபட்சமாக 25 லட்சரூபாய்‌ செலவிடப்படுகிறது. இந்நிலையில் எதிர் கட்சிகள் நடத்திய அமளியால் நேற்று மட்டும் நான்கு மணிநேரம் அவை ஒத்திவைக்கப் பட்டது. இதன் காரணமாக ஒரு கோடி ரூபாய் அளவிற்கு நஷ்டம் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

labels:பார்லிமென்ட் ,சிதம்பரம்,

Monday, 21 November 2011

அப்பொல்லோவில் அனுமதி...... கருணாநிதி?


 திமுக தலைவர் கருணாநிதி சென்னை அப்பலோ மருத்துவமனையில் திங்கள்கிழமை இரவு சேர்க்கப்பட்டார்.
 சிறுநீர்ப்பாதையில் ஏற்பட்ட கிருமித்தொற்று காரணமாக அவதிப்பட்டதால் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 அங்கு அவசர சிகிச்சைப் பிரிவில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

LABELS: கருணாநிதி ,

பூஜாகுமார்தான் ஹீரோயின்.... கமல்.விஸ்வரூபம் படத்தை சொந்தமாகத் தயாரிப்பது, படத்தின் கதை தழுவலா போன்ற கேள்விகளுக்கு அவர் பதிலளித்துள்ளார்.

அவர் கூறுகையில், "ஒரு நேரத்தில் ஒரே ஒரு படத்தில் மட்டுமே எனது முழுக் கவனமும் இருக்கும். குறித்த நேரத்தில் ஆரம்பிக்கப்படாமல் என்னுடைய தேதிகள் வீணடிக்கப்பட்டால் அப்படம் என் பொறுப்பில் வந்துவிடும். விஸ்வரூபம் என் கைக்கு வந்த கதை இதுதான்.

என் நேரம் குறைவு என்பது புரிகிறது. ஒவ்வொரு ஆண்டும் என் பிறந்த நாள் வரும்போதும், எனக்கான நேரம் குறைந்து கொண்டே போவதை உணர்ந்து பதைக்கிறது மனது. அரசுகளை தேர்வு செய்வது போல, 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த நிகழ்வு வந்தால்கூட நன்றாகத்தான் இருக்கும்.

விஸ்வரூபம் எனது கதை

ஹான்னிபல் படத்தின் ரீமேக் தான் 'விஸ்வரூபம்' எனது சிலர் எழுதி வருகிறார்கள். அது உண்மையில்லை. 'விஸ்வரூபம்' எனது கதை.

இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து, ஜோர்டன் ஆகிய நாடுகளில் நடைபெறுவது போல் கதை அமைக்கப்பட்டுள்ளது. 'ஹே ராம்' படத்தினை அடுத்து 'விஸ்வரூபம்' படத்தினை இந்தி மற்றும் தமிழ் என இரு மொழிகளிலும் இயக்கி வருகிறேன்.

நியூயார்க்கில் வசிக்கும் பூஜாகுமார்தான் ஹீரோயின்," என்று கூறியுள்ளார் கமல்.


LABELS:KAMAL,NEWFLIM,INDIA,AMERICA,ENGLAND,

நாளை விஜயகாந்த் உண்ணாவிரதம் காரணம் இதோ.


பஸ் கட்டண உயர்வை திரும்ப பெறகோரி 24-ந் தேதி தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் சென்னையில் உண்ணாவிரதம் இருக்கிறார். 
அண்மையில் தமிழக அரசு பஸ் கட்டணத்தையும், பால் விலையையும் உயர்த்தியது. அரசு தரப்பில் போக்குவரத்துக் கழகங்களும், ஆவின் பால் நிறுவனமும் பெரும் நஷ்டத்தில் இயங்கி வருவதாகவும், அவை முடங்கும் நிலையில் உள்ளது என்பதாலும் இந்த கட்டண உயர்வை மேற்கொண்டதாக முதல்வர் ஜெயலலிதா குறிப்பிடுகிறார்.
 எந்த அளவிற்கு பொதுத்துறை நிறுவனங்களின் நஷ்டங்களை கண்டு அவற்றை சீர்படுத்த வேண்டும் என்று முதல்வர் அக்கறை கொள்ளுகிறாரோ, அதே அளவுக்கு ஏழை, நடுத்தர குடும்பங்களின் வாழ்க்கை செலவுகளை சரிக்கட்ட முடியாமல் திண்டாடும்  அந்த மக்களின் நிலையையும் கருத்தில் கொள்ள வேண்டும். 
 அரசின் இந்த போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தி வரும் 24.11.2011 வியாழக் கிழமை அன்று காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை தே.மு.தி.க. சார்பில் எனது தலைமையில் சென்னையில் கோயம்பேடு தே.மு.தி.க. தலைமை நிலையத்திலும்,
 இதர மாவட்டங்களில் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பும் தே.மு.தி.க. சார்பில் உண்ணாவிரதம் மேற்கொள்ளப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.

labels:VIJAYAKANTH,MILK,MINISTOR,JEYALALITHA,CHENNAI.

குடிக்ாரர்களுக்கு பூஸ்ட் கொடுத்த அரசு?

 
விலை உயர்ந்த மது வகைகள், வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் மது வகைகளை விற்க எலைட் பார்கள் என்ற பெயரில் தனி மது விற்பனை நிலையங்களை நடத்த அரசு முடிவு செய்துள்ளது. தற்போது பல்வேறு பகுதிகளில் ஏசி வசதி செய்யப்பட்ட பார்களும் சாதாரண பார்களும் டாஸ்மாக் கடைகளுடன் இணைக்கப்பட்டுள்ளன. இந்த பார்கள் ஆளும் கட்சியினருக்கு அல்லது அவர்களுக்கு  வேண்டியவர்களுக்கு தரப்பட்டுள்ளன.

தற்போது புதிதாக 600 எலைட் பார்கள் அமைக்கப்பட உள்ளன. இதில் முதல் கட்டமாக வரும் டிசம்பர் மாதம் 200 எலைட் பார்கள் தொடங்கப்பட உள்ளன. இவை பெரும் பாலும் பிரமாண்டமான ஷாப்பிங் சென்டர்கள், மால்களில் அமைக்கப்பட உள்ளன. அதிக அளவு இட வசதி, ஏசி வசதி, நவீன அறைகள், நட்சத்திர ஓட்டல் போன்ற பார்கள், உணவகங்கள் இதில் இடம் பெற உள்ளன.

 ஊரக பகுதிகளில் பரந்த நிலப் பரப்பில் எலைட் பார்கள் அமைக்கப்படும். நுழைவு கட்டணம் ஒரு நபருக்கு ரூ.50. நொறுக்கு தீனியும் வழங்கப்படும். சைட் டிஷ் உணவு வகைகளுக்கு செலவு தனி. குவார்ட்டர் ரூ.130க்கு மேற்பட்ட மதுவகைகள் பீர் வகைகள், வெளிநாட்டு மது வகைகள் விற்பனைக்கு கிடைக்கும். இதற்கான வரி கூடுதலாக வசூலிக்கப்படும். உணவு வகைகளுக்கு தனி கட்டணம். மது விற்பனை பிரிவு மட்டும் டாஸ்மாக் நிறுவன கட்டுப்பாட்டில் இயங்கும். பார்களை தனியார் நிறுவனங்கள் மூலம்  நடத்த அரசு திட்டமிட்டுள்ளது. வடமாநிலத்தை சேர்ந்த பெரிய நிறுவனமும். அண்டை மாநிலத்தை சேர்ந்த நிறுவனமும் பார்களை நடத்த அனுமதி கேட்டு தமிழக அரசும் சம்மதித்து விட்டதாக கூறப்படுகிறது. 


labels:bars,elite bar,

எங்கே குளித்தாலும் படம் எடுக்கும் ஆண்கள்,பெண் போலீசில்!

                 எங்கே குளித்தாலும் படம் எடுக்கும் ஆண்கள்,பெண் போலீசில்!  புகாரின்படி.............................
 குளித்துக் கொண்டிருந்த இளம்பெண்ணை செல்போனில் படம் பிடித்து மிரட்டிய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். ஸ்ரீபெரும்புதூர் அடுத்த திருமங்கலத்தை சேர்ந்தவர் சுமிதா (21) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவரது வீட்டையொட்டி ஓலையால் அமைக்கப்பட்ட குளியலறை உள்ளது.

கடந்த ஜூலை மாதம் சுமிதா, இந்த குளியலறையில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது, அதே கிராமத்தை சேர்ந்த நீலகண்டன் (22), வெங்கடேசன் (22) ஆகியோர் மறைந்திருந்து சுமிதா குளிப்பதை செல்போனில் வீடியோ படம் பிடித்துள்ளனர்.

பின்னர்  ‘நாங்கள் கேட்கும்போது பணம் தர வேண்டும், இல்லாவிட்டால் நண்பர்களின் செல்போன்களுக்கு அனுப்பி விடுவோம்Õ என்று அவரை மிரட்டியுள்ளனர். இதனால் பயந்துபோன அவர், கேட்கும்போதெல்லாம் ஸீ500, ஸீ1000 என அவர்களுக்கு கொடுத்துள்ளார். 3 நாட்களுக்கு முன்பு ‘எங்களுக்கு அவசரமாக ஸீ50 ஆயிரம் தேவைப்படுகிறது, உடனே கொடுÕ என மிரட்டி உள்ளனர். புகாரின்படி, சுங்குவார்சத்திரம் போலீசார், நீலகண்டன், வெங்கடேசனை கைது செய்தனர்.


labels:cellphone,police,

குழந்தை பெற்றுக்கொள்ள அடம் பிடித்த தாத்தா!முதியவருக்கு டெஸ்ட் டியூப் முறை மூலம் இரட்டை குழந்தை பிறந்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் தாலுகா வெங்கலப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பெருமாள்சாமி(81). இவரது முதல் மனைவிக்கு குழந்தை இல்லை. இதனால் 2வதாக ரத்தினம்(46) என்பவரை திருமணம் செய்தார். இவர்களுக்கு திருணமான 5 ஆண்டுக்குப்பின் ஆண் குழந்தை பிறந்தது. 23 வயதடைந்த இவர்களது மகன் சுருளி மோகன், கடந்த 2008ம் ஆண்டு நடந்த விபத்தில் இறந்து விட்டார்.

வாரிசாக இருந்த ஒரு மகனும் இறந்ததால் மீண்டும் குழந்தை பேறுக்கு முயற்சித்தனர். இவர்கள் இருவருக்கும் ‘இக்சி‘(சோதனைக்குழாய்) முறையில், சிகிச்சை அளிக்கப்பட்டது. கடந்த 2011 மார்ச்சில்  பெருமாள்சாமி உயிரணுக்களை எடுத்து, ரத்தினத்துக்கு கருவூட்டப்பட்டது. ஏப்ரல் 5ம் தேதி ரத்தப் பரிசோதனையும், 21ம் தேதி ஸ்கேன் பரிசோதனையும் செய்ததில் கருவுற்றது உறுதிப்படுத்தப்பட்டது.

வயது மற்றும் ரத்தக்கொதிப்பு காரணமாக ரத்தினத்துக்கு சிறப்பு மகப்பேறு சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. கடந்த 16ம் தேதி ரத்தினம் இரட்டை ஆண் குழந்தை பெற்றெடுத்தார்.
இது குறித்து பழநி பாலாஜி கருத்தரித்தல் மைய டாக்டர் செந்தாமரைச்செல்வி கூறியதாவது: குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு செயற்கை முறையில் கருத்தரிக்க அதிக வாய்ப்பு உள்ளது. திசுக்குடல் பாதிப்பு, மன அழுத்தம், தவறான உணவுப்பழக்கம், புகை, போதை காரணமாக ஆண்களுக்கு மலட்டுத்தன்மை அதிகரித்து வருகிறது.

இரவில் நேரம் தவறி உணவு உட்கொள்வது, பாலியல் உணர்வை பாழ்படுத்தும். பெண்கள் அதிக மன அழுத்தம் காரணமாக பாதிக்கப்படுகின்றனர். ஆண்களுக்கு எத்தனை வயதானாலும் அவர்களது உடலில் உயிரணு உற்பத்தி இருக்கும். எனவே, குழந்தை இல்லாத தம்பதிகள் செயற்கை முறை கருத்தரித்தல் மூலம் குழந்தை பெறலாம்.
இவ்வாறு செந்தாமரை செல்வி கூறினார்.

labels:doctor,pressure,‘இக்சி,


Sunday, 20 November 2011

5,570 கிலோ லட்டு கின்னஸ்!!


முன்னதாக கின்னஸ் சாதனையில் இருந்த 551 கிலோவில் தயாரான லட்டு முறியடிக்கப்பட்டது.ஆந்திராவில் சமீபத்தில் நடந்த விநாயகர் திருவிழாவிற்கு தயார்‌ செய்யப்பட்ட 5,570 கிலோ லட்டு கின்னஸில் இடம் பெற்றது.
 விசாகபட்டினத்தில் நடந்த 21 நாள் திருவிழாவிற்காக விநாயகர் உருவம் ‌கொண்ட 117 அடி உயரத்தில் இந்த லட்டு தயார் செய்யப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. 
இந்த லட்டு பிரிட்டனில் உள்ள இந்து கோயிலில் தயாரானது. இதை 50 பேர் ஒன்று சேர்ந்து ஒரு வார காலத்தில் தயார் செய்துள்ளனர். ஏற்கனவே 551 கிலோவில் தயாரான லட்டே சாதனையாக இருந்தது குறிப்பி‌டத்தக்கது.

labels:laddu,kinnas,


இடம் மாறிய கை விரல்?

 


துண்டான விரல் பாகத்தை எடுத்துக் கொண்டு மருத்துவமனைக்கு ஓடினார் வாங். அதற்குள் ஏராளமான ரத்தம் வெளியேறி இருந்தது. வாலிபரை பரிசோதித்த மருத்துவர் துண்டான பாகத்தை விரல் நுனியுடன் சேர்க்க முடியாமல் நசுங்கி இருப்பதை பார்த்தனர். உடனடியாக சிகிச்சை அளிக்காவிட்டால் நடுவிரலை இழக்கும் அபாயம் இருந்ததை அறிந்தனர்.
மருத்துவர்கள் அவசரமாக ஆலோசித்து வாங்கின் துண்டான விரலை வயிற்றுடன் இணைத்து அறுவை சிகிச்சை செய்தனர்.

இதுகுறித்து மருத்துவர் ஹூவாங் சூசாங் கருத்து தெரிவிக்கையில், வாங்கின் விரல் நுனி நசுங்கி இருந்தது. துண்டான பாகத்தை ஒட்ட வைக்க முடியவில்லை. துண்டான விரலில் வெறும் எலும்பு மட்டுமே வெளியில் தெரிந்தது.வேறு வழியில்லாமல் அவரது விரலை வயிற்றுடன் இணைத்து தைத்து விட்டோம். முதலில் விரலுக்கு ரத்த ஓட்டம் சீராக வேண்டும். அதன்மூலம் விரல் நுனி தானாகவே வளர வாய்ப்புள்ளது.

ஒரு மாதத்துக்கு பின் வயிற்றில் இருந்து விரலை பிரித்து விடுவோம். அறுவை சிகிச்சை முழு வெற்றி அடைந்துள்ளது.

மேலும் சதை வளர தொடங்கி உள்ளது என்றார். அதுவரை கை விரலும் வயிறும் இணைந்தே தான் இருக்கும் என்றும் தெரிவித்தார்.


labels:fingar,surgery,china,

கணவர் அமைதியாய் இருக்கும் நேரங்கள்?  ஏதாவது புதுசா ஒரு ஐட்டம் சமைத்துக் கொண்டு வந்து சாப்பிடச் சொல்வார்கள். கணவன்மார்களும் மூச்சு, மொட இல்லாம சாப்பிட்டுவிட்டு எழுந்து விடுவார்கள். என்னங்க நான் புதுசா சமைத்தது எப்படி இருந்தது என்று கேட்பார்கள், மனைவிகள். அதற்கு கணவன்மார்கள் ஓ, ரொம்ப நல்லா இருந்தது என்று பாராட்டுவார்கள். மனைவி உச்சி குளிர்ந்து போய் அந்த உணவை தன் வாயில் வைத்தவுடன் தான் அது எவ்வளவு மோசமாக இருந்தது என்றே உணர்வார்கள். அதற்காக எல்லோரும் மோசமாக சமைப்பவர்கள் இல்லை என்பதையும் இங்கு சொல்லியாக வேண்டும்.

இருந்தாலும், சாப்பாடு நல்லா இல்லாவிட்டாலும் கூட, அதையும் பெண்கள் அழகாக சமாளிப்பார்கள். அன்னைக்கு ஒரு நாள் நான் ஏதோ புதுசா ஒரு ரெசிபி சமைச்சேன். அதை வாயில் வைக்கவே முடியவில்லை. ஆனால் என் புருஷன் ஒரு வார்த்தைக் கூட சொல்லாம அமைதியா சாப்பிட்டார். அவர் மாதிரி வருமா என்று பெருமை பேசிக்கொள்வார்கள். அதாவது கணவன் பொய் சொன்னாலும் கூட, அதை பெருந்தன்மையாக கருதுவதுதான் ஒரு மனைவியின் குணம்.

கணவன் மனைவி இருவருக்கும் ஒரே மாதிரியான டேஸ்ட் இருக்க வேண்டும் என்றில்லை. சந்தோஷ் சுப்பிரமணியம் படத்தில் வருவது மாதிரி, தானே கணவருக்கு ஒரு சட்டையைத் தேர்ந்தெடுத்து அது அவருக்கு பிடிக்காவிட்டாலும் சூப்பர் என்று சொல்லிவிடுவார்கள் மனைவிகள். உடனே அது தனக்கு பிடிக்காவிட்டாலும் மனைவியின் சந்தோஷத்திற்காக அந்த சட்டையை அணிந்து கொள்வார்கள் ஆண்கள்.

இந்த மாதிரி சின்னச் சின்ன விஷயங்களில் ஆண்கள் பொய் சொல்வது மனைவி மனம் வருத்தப்படக் கூடாது, தாம்பத்யத்தில் இனிமை கெட்டு விடக் கூடாது, குடும்பத்தில் பூசல் வெடித்து விடக் கூடாது என்பதற்காகத் தான். மற்றபடி எதுக்கெடுத்தாலும் பொய் சொன்னா கண்டிப்பாக பூகம்பம்தான் வெடிக்கும் என்பதை மனதில் கொள்வது நல்லது.
labels:ஆண்கள்,மனைவி 

கணவர் பொய் சொல்லும் நேரம் எப்போது?

Husband and Wife
ஒரு சேலையைக் கட்டிக் கொண்டு போய் கணவன் முன் நின்று என்னங்க இந்த சேலை எப்படி இருக்கு என்று மனைவி கேட்பாள். அதற்கு கணவன் நீயும், உன் சேலை செலக்ஷனும் என்று உண்மையைச் சொல்ல முடியுமா?. உடனே சேலை ரொம்ப நல்லா இருக்கும்மா என்பார்கள். அவர்கள் சொல்வது சேலையைத் தான், அந்த சேலை உங்களுக்கு நன்றாக இருக்காவிட்டாலும் கூட பெரும்பாலானவர்கள் அப்படித்தான் சொல்கிறார்களாம். நல்லா இல்லைன்னு சொன்னா அடுத்து என்ன நடக்கும் என்பது ஆண்களுக்குத்தானே தெரியும்!.

மனைவியுடன் பொது இடத்தில் நடந்து செல்லும்போது ஒரு அழகான பெண் யாராவது அந்த வழியாகச் சென்றால், அப்படியே ஒரு சின்ன லுக் விடுவது பலருக்கும் இருக்கும் பழக்கம். அப்போது மனைவி கணவரை நோக்கி, என்ன கண்ணு கண்டமேனிக்கு திரியுது. இப்ப எதுக்கு அந்தப் பெண்ணை பார்த்தீங்க என்று கேட்டால். சீச்சீ என்னைப் போய் இப்படி நினைத்துவிட்டாயே. நான் அந்த பெண்ணைப் பார்க்கவே இல்லை, நீ பக்கத்தில் இருக்கும்போது நான் எதுக்கு 'அதை'ப் பார்க்கணும் என்பார்கள். இதுவும் கூட பொய்களில் ஒன்றுதான்.

ஏதாவது புதுசா ஒரு ஐட்டம் சமைத்துக் கொண்டு வந்து சாப்பிடச் சொல்வார்கள். கணவன்மார்களும் மூச்சு, மொட இல்லாம சாப்பிட்டுவிட்டு எழுந்து விடுவார்கள். என்னங்க நான் புதுசா சமைத்தது எப்படி இருந்தது என்று கேட்பார்கள், மனைவிகள். அதற்கு கணவன்மார்கள் ஓ, ரொம்ப நல்லா இருந்தது என்று பாராட்டுவார்கள். மனைவி உச்சி குளிர்ந்து போய் அந்த உணவை தன் வாயில் வைத்தவுடன் தான் அது எவ்வளவு மோசமாக இருந்தது என்றே உணர்வார்கள். அதற்காக எல்லோரும் மோசமாக சமைப்பவர்கள் இல்லை என்பதையும் இங்கு சொல்லியாக வேண்டும்.


labels:wife,husband,life.

கூலி தொழிலாளி மனைவி கூட விட்டு வைக்காதவன்


வாசுதேவநல்லூரில் கூலித் தொழிலாளி மனைவியை கடத்தி சென்றவரை போலீசார் தேடி வருகின்றனர். வாசுதேவநல்லூர் அம்பேத்கார் நடுத்தெருவை சேர்ந்தவர் சின்னப்பன் மகன் செல்லத்துரை (33). கூலித் தொழிலாளி. இவரது மனைவி செல்வி (27). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். கடந்த மாதம் 27ம் தேதி வேலைக்கு சென்ற செல்லத்துரை வீட்டிற்கு வந்த பார்த்தபோது மனைவியை காணவில்லை. இதுகுறித்து பல்வேறு இடங்களில் தேடியும் மனைவி கிடைக்கவில்லை.

இந்நிலையில் தனது மனைவியை அருகில் பெட்டிக்கடை நடத்தி வரும் ராஜ் மகன் விஜயபாபு (25) என்பவர் கடத்தி சென்றுவிட்டதாக வாசுதேவநல்லூர் போலீசில் செல்லத்துரை புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் சண்முகவேல் வழக்குபதிவு செய்து செல்லத்துரை மனைவி செல்வியையும், விஜயபாபுவையும் தேடி வருகின்றனர்.

tag:police,

Saturday, 19 November 2011

கடவுளை கடங்காரணக்கிய பிரஹலாதன்
பிரஹலாதன், "பகவான் நாராயணன் தூணிலும் இருக்கிறான்" என்று கூறினான். அவன் அப்படி சொன்னதும் ஹிரண்யன் தூணை உதைத்தான். நரசிம்மமூர்த்தி உக்கிரமாக வெளிப்பட்டார்.

ஆனால் நரசிம்மர், ஹிரண்யனை உடனே ஒன்றும் செய்யவில்லை. ஹிரண்யன் தன் கதையால் நரசிம்மரை தாக்கினான். அதை பகவான் பொறுத்துக்கொண்டார். ஏனென்றால் அப்போது மாலை நேரம். அந்நேரத்தில் ஹிரண்யனைக் கொல்ல முடியாது.

ஹிரண்யன் பெற்ற வரத்தின்படி பகலிலோ, இரவிலோ அவனைக் கொல்லக் கூடாது. எனவே சூ¡¢யன் அஸ்தமிக்கும் வரையில் நரசிம்மர் சுற்றிச் சுற்றி வந்து ஹிரண்யனுக்கு வளைந்து கொடுத்தார். அதைக்கண்ட ஹிரண்யன் நரசிம்மரைச் சக்தியற்றவர் என்றெண்ணி மேலும் மேலும் கதையால் தாக்கினான். 

இதனால் வேதனையுற்ற பிரஹலாதன் கண்ணீர் பெருக, "பிரபோ! என்னை மன்னியுங்கள். நீங்கள் தூணில் இருக்கிறீர்கள் என்று தொ¢யாமல் சொல்லிவிட்டேன். நீங்கள் இப்படியெல்லாம் துன்பப்படுவதற்கு நான்தான் காரணம்" என்று கதறி அழுதான்.

நரசிம்மர் புன்சி¡¢ப்புடன், "பிரஹலாதா! நான் பட்ட அடிகள் மிகவும் குறைவானவை. நீ என் நாமத்தைக் கூறிய ஒரே காரணத்திற்காக எத்தனை கொடிய தண்டனைகளை அனுபவித்தாய்! அதற்கு நான் தானே காரணம்? அதற்கு பதிலாக நான் உனக்கு எதைக் கொடுத்தாலும் அது உன் துன்பத்திற்கு ஈடாகாது. அதனால்தான் இப்போது நானும் பதிலுக்கு அடிவாங்கி ஆறுதல் அடைகிறேன்" என்று கூறினார்.

பிறகு நரசிம்மர் ஹிரண்யனை வதைத்தார்.

பிரஹலாதனின் பக்தி தூய்மையானது, பிரதி பலன் எதையும் எதிர்பாராதது. எனவேதான் அந்தப் பக்தி பகவானையே கடனாளியாக்கிவிட்டது.


tag:kadayul,