HAI FRIENDS PLEASE CLICK THE ADD.

Saturday, 30 June 2012

சில்க்கை போல எனக்கு நிறைய ரசிகர்கள் கூட்டம்.... சிலுக்கு போல நடிக்க எனக்கு ஆசை

                                    தமிழில் தி டிர்ட்டி பிக்சர்ஸ் படத்தை ரீ-மேக் செய்தால், அத‌ில் சில்க்காக நடிக்க நான் தயார், அதற்கு பொருத்தமான ஆளு நான் தான் என்று கூறியுள்ளார் நடிகை நமீதா.


                           1980-90களில் தென்னிந்தியாவில் தனது நடிப்பாலும், கவர்ச்சியாலும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பெற்றவர் மறைந்த நடிகை சில்க் ஸ்மிதா.


                           இவரது வாழ்க்கையை மையமாக வைத்து இந்தியில் தி டர்ட்டி பிக்சர்ஸ் என்ற பெயரில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு படம் வெளியாகி சக்கபோடு போட்டது. இதில் சில்க்காக வித்யாபாலன் நடித்து இருந்தார். 

                           இந்தியில் இப்படம் சக்கபோடு போட்டதை தொடர்ந்து தென்னிந்தியாவிலும் இப்படத்தை ரீ-மேக் செய்ய வேலைகள் நடந்து வருகிறது.                         முதற்கட்டமாக கன்னடத்தில் உருவாகி வரும் இப்படத்தில் பிரபல சர்சை மற்றும் கவர்ச்சி நடிகை வீணா மாலிக் நடித்து வருகிறார். இந்நிலையில் தமிழ் மற்றும் தெலுங்கில் இப்படத்தை ரீ-மேக் செய்யவும், அதில் சில்க்காக நடிக்க அனுஷ்கா, நயன்தாரா ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால் அவர்கள் முடியாது என்று மறுத்துவிட்டநிலையில், இப்போது அந்த ரோலில் நடிக்க நான் தயார் என்று கூறியுள்ளார் நடிகை நமீதார்.


                      சில்க்கை நான் நேரில் பார்த்தது கிடையாது. ஆனால் அவரின் நிறைய படங்களை பார்த்து இருக்கிறேன். சில்க்கை போல எனக்கு நிறைய ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. 


                      அவருடைய வேடத்திற்கு நான் பொருத்தமான ஆளு. தமிழ் மற்றும் தெலுங்கில் டர்ட்டி பிக்சர்ஸ் படத்தை எடுத்தால் அதில் நடிக்க நான் தயாராக இருக்கிறேன். இதற்காக சம்பளத்தை கூட நான் குறைத்து கொள்ள தயாராக உள்ளேன் என்று கூறியுள்ளார். 

ஒலிம்பிக்கில் 'ஜெய் ஹோ...' பாடல்...இசை ஏ.ஆர். ரஹ்மான்


லண்டன் ஒலிம்பிக்கில் ஏ.ஆர்.ரஹ்மானின் பாடல்
           
      லண்டனில் வரும் ஜூலை மாதம் 29ம் தேதி துவங்க உள்ள ஒலிம்பிக் போட்டியின் துவக்க நிகழ்ச்சியில் பல உலக நாட்டு இசைகள் இசைக்கப்பட உள்ளன. இதற்காக பல்வேறு நாடுகளின் இசைப் பாடல்கள் தொகுக்கப்பட்டு வருகிறது. 

          ஏற்கனவே இளையராஜா இசையமைத்த 'நான்தான் ஒங்கப்பன்டா' எனும் பாடல் இடம்பெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து, தற்போது ஏ.ஆர். ரஹ்மான் இசை அமைத்துள்ள ஒரு திரைப்பட பாடலும் இடம்பெறப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
       'ஸ்லம்டாக் மில்லினியர்' திரைப்படத்தில், ஆஸ்கார் விருது பெற காரணமாக அமைந்த 'ஜெய் ஹோ...' பாடல் அது என்றும் ஒரு தகவல் கூறுகிறது. இசைஞானி இளையராஜாவைத் தொடர்ந்து இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானின் இசையும் ஒலிம்பிக்கில் இடம்பெறுவது இந்தியர்களுக்கு பெருமை சேர்க்கும் என்பதில் துளியும் ஐயமில்லை.

பிரதமர் மன்மோகன்சிங்...... கோவிலில் 10 நிமிடம் இருந்து சாமி தரிசனம்           புதுவை மணக்குள விநாயகர் கோவிலில் மன்மோகன்சிங் சாமி தரிசனம்: அரவிந்தர் ஆசிரமத்துக்கும் சென்றார்   


          பிரதமர் மன்மோகன்சிங் 2 நாள் சுற்றுப்பயணமாக நேற்று புதுவை வந்தார். புதுவை பல்கலைக்கழகத்தில் நேற்று மாலை நடந்த விழாவில் தெற்காசிய கூட்டமைப்பு படிப்பு மையத்தை திறந்து வைத்து பேசினார். 


         பின்னர் கவர்னர் மாளிகைக்கு வந்தார். அங்கு இரவு தங்கி ஓய்வு எடுத்தார். 
         

        இன்று காலை 9-15 மணிக்கு புதுவை ஜிப்மர் கல்லுரி விழாவில் கலந்து கொள்வதற்காக கவர்னர் மாளிகையில் இருந்து புறப்பட்டார். அப்போது கவர்னர் மாளிகைக்கு அருகில் உள்ள புதுவையில் பிரபலமான மணக்குளவிநாயகர் கோவிலுக்கு சென்றார். 

     அங்கு அவருக்கு பூரணகும்ப மரியாதை அளித்து கோவில் நிர்வாகத்தினர் வரவேற்றனர். 

     கோவிலில் 10 நிமிடம் இருந்து சாமி தரிசனம் செய்தார். பின்னர் அருகில் உள்ள அரவிந்தர் ஆசிரமத்துக்கும் சென்றார். அரவிந்தர் மற்றும் அன்னை சமாதிகளை வணங்கினார். 


     அங்கு 10 நிமிடம் இருந்தார். பின்னர் ஜிப்மர் மருத்துவ கல்லூரிக்கு சென்றார். அவருடைய கார் முத்தியால்பேட்டை, இ.சி.ஆர். சாலை, திண்டிவனம்சாலை வழியாக ஜிப்மருக்கு சென்றது. வழிநெடுக ஏராளமான பொதுமக்கள் கூடிநின்று 


labels:மன்மோகன்சிங்,

இப்போதைக்கு காதல் செய்ய நேரமில்லை....

    
                                            ஐஸ்வர்யா இயக்கிய ‘3’ படத்தில் நடிக்க கேட்டபோதே அவர் மீது சந்தேகம் இருந்தது என்றார் ஸ்ருதி ஹாசன். தனுஷ் நடித்த ‘3’ படத்தை ஐஸ்வர்யா இயக்கினார். 


                                       இப்படத்தில் ஹீரோயினாக நடிக்க முதலில் ஸ்ருதி ஹாசனிடம் கேட்டபோது நடிப்பதாக ஒப்புக்கொண்டு பிறகு விலகிவிட்டார். 


                                     இந்நிலையில் மற்றொரு ஹீரோயின் ஒப்பந்தம் செய்யப்பட்டார். சில நாட்களிலேயே அவர் நீக்கப்பட்டு ஸ்ருதி நடிப்பதாக அறிவிப்பு வெளியானது. இந்த மாற்றத்துக்கு என்ன காரணம் என்பது பற்றி ஸ்ருதி ஹாசன் மனம் திறந்திருக்கிறார். இதுபற்றி அவர் கூறியதாவது:

                            
       3’ படத்தில் பணியாற்றும்போது தனுஷ், ஐஸ்வர்யா, நான் மூவருமே ஒருவரையொருவர் தொழில் ரீதியாக அணுகுவது என்ற முடிவு செய்துகொண்டோம். 


                                  இதனால் சொந்த விருப்பு வெறுப்புகளுக்கு இடம் தரவில்லை. தொடக்க காலத்தில் ஐஸ்வர்யா மீது எனக்கு சந்தேகம் இருந்தது. அவர் இயக்கும் முதல் படம்.


                                 எப்படி கையாளப்போகிறாரோ என்று எண்ணினேன். முதல்நாள் ஷூட்டிங்கில் அவர் பணியாற்றியதை பார்த்தபிறகு அவர் மீதான சந்தேகம் தீர்ந்தது. ஒரு படைப்பாளியாக அவரை ஏற்றுக்கொண்டேன். இப்படத்தில் பள்ளி மாணவி, மனைவி, விதவை என 3 விதமான தோற்றத்தில் நடிக்க வேண்டி இருந்தது. நடிப்புக்கு வாய்ப்பு இருந்ததால் நடிக்க ஒப்புக்கொண்டேன்.

                                  நான் காதல் வலையில் விழுந்துவிட்டதாக கூறுகிறார்கள். எனக்கேற்ற ஒருவரை தேர்ந்தெடுத்தால் அதை முதலில் எனது தந்தையிடம் சொல்வேன். இப்போதைக்கு காதல் செய்ய நேரமில்லை. கடந்த சில காலங்களுக்கு முன் இசையில் பிஸியாக இருந்தேன். இப்போது கேமராவுக்கு முன்னால் பிஸியாக இருக்கிறேன்.                                 சமீபத்தில் நான் நடித்து வெளியான ‘கப்பர் சிங்’ தெலுங்கு படம் வெற்றி பெற்றது சந்தோஷம். இதற்கு முன் நான் நடித்த சில படங்கள் ஓடவில்லை. ஆனால் இப்படம் வெற்றி அடைந்திருக்கிறது. சினிமாவில் வெற்றி, தோல்வி சகஜம்.

Wednesday, 27 June 2012

பொய்யான கட்டு கதை..... நான் உன்னை காதலிக்கவில்லை ..piaa.

                                                   


                                       நடிகர் பிரேம்ஜியை நான் காதலிக்கவே இல்லை. அவராகவே என்னைக் காதலிப்பதாக சொல்லிக் கொள்கிறார், என்று நடிகை பியா கூறியுள்ளார். 


                                               பொய் சொல்ல போறோம், ஏகன், கோவா, கோ உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நடிகை பியா பாஜ்பாய். கோவா படத்தில் பியாவுடன் பிரேம்ஜியும் இணைந்து நடித்தார். அப்போது இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டதாக கிசுகிசு பரவியது. 

                                           பியாவை காதலிப்பதாக பிரேம்ஜி வெளிப்படையாகவும் அறிவித்தார். நானும் பியாவும் காதலிக்கிறோம் என்று ட்விட்டரில் குறிப்பிட்டிருந்தார். 

                                 இந்நிலையில் நடிகை பியா இதை மறுத்து ஒரு மறுப்பு செய்தி வெளிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது,  எனக்கும் பிரேம்ஜிக்கும் காதல் என்பதெல்லாம் பொய்.                                                    


                                          இதுபோன்ற கிசுகிசுக்கள் பரவுவதற்கு பிரேம்ஜிதான் காரணம். இண்டர்நெட்டில் என்னைக் காதலிப்பதாக அவர் செய்தி வெளியிட்டதால் எனக்குத்தான் பிரச்னையாகிவிட்டது. அந்த செய்தியை நீக்கும்படி பிரேம்ஜியிடம் வற்புறுத்தினேன். 


                                  அதற்குள் அந்த செய்தி பரவி விட்டது. இதனால் நான் மனஉளைச்சலுக்கு ஆளானேன். பிரேம்ஜி பற்றி வெங்கட்பிரபுவிடம் கூட புகார் கூறினேன்.


                         


                                     பிரேம்ஜியை நான் காதலிக்கவே இல்லை, அவராகவே என்னைக் காதலிப்பதாக சொல்லிக் கொள்கிறார் நல்ல கதையாக தேடி வருகிறேன். இப்போதைக்கு சட்டம் ஒரு இருட்டறை படத்தில் மட்டும் நடிக்கிறேன் என்று கூறியுள்ளார். 
labels:Piaa bajpai, premji amaran, love, rumour, பியா பாஜ்பாய், பிரேம்ஜி அமரன்,

அக்ஷய் குமாருடன் கில்லாடி 786 படத்தில்.....அசின்க்கு பிடிக்காத வார்த்தை ஐட்டம்தான்.                                   


                                 எனக்கு பிடிக்காத ஒரே வார்த்தை ஐட்டம்தான், என்று நடிகை அசின் கூறியுள்ளார். கஜினி படம் மூலம் இந்திக்கு போன அசின் இப்போது, அக்ஷய் குமாருடன் கில்லாடி 786 படத்தில் நடித்து வருகிறார். 


                                  முழுக்க முழுக்க பாலிவுட்டில்தான் அதிக கவனம் செலுத்தி வருகிறார். அவர் சமீபத்தில் அளித்துள்ள பேட்டியொன்றில், ஐட்டம் கேர்ள் ஆக நடிக்க தனக்கு விருப்பம் இல்லை என்று கூறியிருக்கிறார்.  

                                 
       தமிழ் சினிமா குறித்து அவர் கூறுகையில், எனக்கு தமிழ் சினிமா மீது எந்த கோபமும் இல்லை. ஆனால் நான் இந்த அளவு பெரிய நடிகை ஆன பிறகும், என்னிடம் கதை சொல்ல வருபவர்கள் ரொம்ப சில்லியான ஸ்கிரிப்டுகளோடுதான் வருகிறார்கள். 


                                       அல்லது நான் ஏற்கெனவே நடித்த பாத்திரங்களை ரிபீட் செய்வது போல கதைகளோடு வருகிறார்கள். அதனால்தான் தமிழ் சினிமாவில் நடிக்கவில்லை, என்று கூறியிருக்கிறார். 

                                      
  


                                          பெரிய படங்களில் ஐட்டம் நம்பர் வந்தால் ஒப்புக் கொள்வீர்களா? என்ற கேள்விக்கு பதில் அளித்திருக்கும் அசின், எனக்கு பிடிக்காத வார்த்தை ஐட்டம்தான். இந்தி என்றல்ல, எந்த மொழியிலும் ஐட்டமாக நடிக்க எனக்கு பிடிக்காது, என்று கூறியுள்ளார்.

வாத்தியார் பண்ண கொடுமை பாவம்...மாணவி வாயில டேப்பை ஒட்டி.... மயக்க                                            ஆந்திராவில் பள்ளி மாணவியை ஐந்து மணி நேரம் கொளுத்தும் வெயிலில் நிற்க வைத்து பள்ளி ஆசிரியர் தண்டனை வழங்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

                                 ஆந்திரா தலைநகர் ஐதராபாத்தில் பள்ளி ஒன்றில் படித்து வருபவர் பாத்திமா. இவர் ஆசிரியர் தந்த வீ்ட்டு பாடத்தை முடிக்காமல் பள்ளிக்கு சென்றுள்ளார். 

                                   வீட்டு பாடம் செய்யாத மாணவியின் வாயில் டேப்பை ஒட்டவைத்து தண்ணீர் மற்றும் உணவு உட்பட எந்தவித உணவும் வழங்கமால், ஐந்து மணி நேரம் வரையில் 35 டிகிரி ‌கொளுத்தும் வெயிலில் நிற்க வைத்து ஆசிரியர் தண்டனை வழங்கியுள்ளார். 

                                      இச்சம்பவத்தில் மாணவி மயக்க நிலைக்கு சென்றதால் அவர் உடனடியாக மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் ‌ சேர்க்கப்பட்டார். 

                                  இது குறித்து மாணவியின் பெற்றோர் பள்ளி ஆசிரியர் மற்றும் பள்ளியின் மீது நடவடிக்கை எடுக்க கோரி போலீசில் புகார் அளித்துள்ளனர்.

அல்ஸர் வந்தா என்ன செய்ய வேண்டும்...... என்ன சாப்பிடலாம்             


        நம் வயிற்றுக்குள் குடலை பாதுகாக்கும் திரை போன்ற அதைப்பு பாதிக்கப்படுவதாலோ, அதில் புண்கள் உருவானாலோ வலியும், எரிச்சலும் ஏற்படுகிறது இதுவே அல்சர் எனப்படுகிறது.


           இந்த புண்களினால் சிறிது உணவு உட்கொண்டாலும் அது தொண்டைக்குழியிலேயே நிற்பது போல உணர்வு ஏற்படும். நெஞ்சு எரிச்சலும், புளித்த ஏப்பமும் அடிக்கடி வந்து தொந்தரவை ஏற்படுத்தும்.

        
  


                 வாய்க்கு ருசியாக காரமாகவோ, புளிப்பாகவோ எதையும் சாப்பிட முடியாத நிலை, கொஞ்சம் சாப்பிட்டால் கூட புளித்த ஏப்பம் என இன்றைக்கு பெரும்பான்மையோரை வாட்டி எடுக்கிறது அல்சர். சாப்பிட வேண்டிய நேரத்தில் சரியாக சாப்பிடாமல் விடுவதும், 


        பாஸ்ட் புட், எண்ணெய் அதிகம் சேர்த்த உணவுகள், காபி, டீ போன்றவற்றை உள்ளே தள்ளுவதும் அல்சர் ஏற்பட காரணமாகின்றன. அதேபோல் அதிக டென்சன், மன அழுத்தம் போன்றவையும் அல்சர் ஏற்பட காரணமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

மன அழுத்தம் பாதிப்பு,,,,,

          ஒரு சிலருக்கு பரம்பரை காரணமாகவும் அல்சர் ஏற்பட வாய்ப்புள்ளது. அதேசமயம், அதிக உணர்ச்சி வசப்படுதல், மன அழுத்தம் காரணமாகவும் அல்சர் ஏற்படும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 

         டென்சன் ஏற்படும் போது அமிலம் அதிகமாக சுரக்கிறது. இதுவும் அல்சர் ஏற்பட முக்கிய காரணமாகிறது என்கின்றனர் மருத்துவர்கள்.

மருந்தின் வீரியத்தினால் புண்கள்,,,,,

           சாதாரணமாக ஏற்படும் தலைவலி, காய்ச்சல் என்றால் தாங்களாகவே மருந்தகங்களுக்கு சென்று எதையாவது மாத்திரைகளை வாங்கி உட்கொள்கின்றனர். 


        இவ்வாறு அடிக்கடி மாத்திரை சாப்பிடுவது ஆபத்து என்கின்றனர் மருத்துவர்கள். அதேபோல் வலிநிவாரணி மாத்திரைகள், ஆன்டிபயாடிக் போன்ற மாத்திரைகள் உட்கொள்வதும் அல்சர் ஏற்பட காரணமாகின்றன. 

      ஏனெனில் ஆன்டிபயாடிக் உட்கொள்ளும் போது மருத்துவர்கள் தரும் பி.காம்பளக்ஸ் மாத்திரைகளை உட்கொள்வதும் அவசியம். தவிர்க்கும் பட்சத்தில் மருந்தின் வீரியத்தினால் வயிற்றில் புண்கள் ஏற்படுகின்றன.

ஜீரணமாகும் உணவுகளை உட்கொள்ளவேண்டும்,,,,

             எந்த காரணம் கொண்டு உணவுகளை தவிர்க்க கூடாது. மேலும் அல்சர் உள்ளவர்கள் எளிதில் ஜீரணமாகும் வகையில் உணவுகளை உட்கொள்ளவேண்டும்.          அல்சர் வந்தவர்களுக்கு விருந்தும் கூடாது, விரதமும் கூடாது. மூன்று வேளையும் மூக்கைப் புடிக்க சாப்பிடாம, கொஞ்சமா, அடிக்கடி சாப்பிடலாம். எதையும் கடிச்சு, நன்கு மென்று பொறுமையா சாப்பிடணும்.


       நார்ச்சத்து உள்ள உணவுகளைத் தவிர்க்கவேண்டும். குழைய வேக வச்ச அரிசி சாதம், அவல், பொரியில் கஞ்சி மாதிரி செய்து சாப்பிடலாம். கீரை, காய்கறிகளைக்கூட நல்லா வேக வச்சு, மசிச்சு, சாப்பிடணும். பாலுக்குப் பதில் மோர் அதிகம் சேர்த்துக்கலாம்.

எண்ணெய் பலகாரங்களை உட்கொள்வது ஆபத்தானது,,,

                   அல்சர் வந்தவர்கள் ஸ்ட்ராங்கான காபி, டீயை குடிக்கக் கூடாது. அதேபோல் அதிகமான இனிப்புகள், பொரித்த உணவுகள், பாதி பழுத்தும் பழுக்காத பழங்கள், பச்சை காய்கறிகள் (வெங்காயம், வெள்ளரி உள்பட), இஞ்சி, கரம் மசாலா, காரமான கிரேவி- இவற்றை அறவே தவிர்க்கவேண்டும் என்பது மருத்துவர்களின் அறிவுரை.              உணவு உட்கொண்ட உடனே படுக்கைக்கு செல்லக்கூடாது. ஏனெனில் அது நெஞ்சு எரிச்சல் ஏற்பட வழிவகுக்கும். எனவே மூன்று மணிநேரம் கழித்தே உறங்கவேண்டும். 

      நள்ளிரவு நேரத்தில் எண்ணெய் பலகாரங்களை உட்கொள்வது ஆபத்தானது என்கின்றனர் மருத்துவர்கள்.

உடல் எடையை குறைக்க தக்காளி பழம் மகிமை......

                        தக்காளியை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை அதிகரிக்காமல் இருக்கும் என்று சமீபத்தில்  மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

                      

                   நாம் அன்றாடம் உணவில் சேர்த்துக் கொள்ளும் தக்காளிப் பழத்தின் மருத்துவக் குணங்களைப் பற்றி இங்கே அறிந்து கொள்வோம். தக்காளியைப் பொதுவாக, சமைக்காமல் பச்சையாகச் சாப்பிடுவதால் இதன் முழுப்பலனையும் பெற முடிகிறது. 

                    அப்படிச் சாப்பிடுவது உடலுக்குப் பலம் தருகிறது. இன்னும் சொல்லப்போனால், உடல் பலவீனமாக இருக்கிறவர்களுக்கு அது டானிக் போன்றது.
                  இதில் வைட்டமின் ஏ- சுமார் 91 மில்லி கிராம் உள்ளது. தவிர வைட்டமின் பி-1, பி-2, 17 மில்லி கிராமும், வைட்டமின் சி- 9 மில்லி கிராமும், சுண்ணாம்புச்சத்து 2 மில்லி கிராமும் அடங்கி உள்ளன.

                
 

              இவை தவிர, நமது உடலில் ரத்த உற்பத்திக்குப் பயன்படுவதோடு மட்டுமின்றி, ரத்தத்தைச் சுத்திகாரிப்பதற்கும், சீரான ரத்த ஓட்டத்திற்கும் இது பயன்படுகிறது.

                   தக்காளியை எந்த விதத்தில் சாப்பிட்டாலும் அதன் சத்துக்கள் அனைத்தும் குறையாமல் நமக்குக் கிடைக்கும். குறிப்பாக இதை காலையிலும், மாலையிலும் சூப் செய்து சாப்பிட்டு வந்தால் தோல் நோய்கள் வராது என்பதை விட, தோலைப் பளபளப்பாக வைத்திருக்கும் தன்மை இதற்கு உண்டு.
   
             தக்காளியை சாப்பிடும் முன்பு சத்தம் செய்ய மறக்காதீர்கள். தக்காளியில் அதிக அளவு வைட்டமின் சி உள்ளது. தக்காளியைத் தொடர்ந்து சாப்பிடுவது இதயத்துக்கு நல்லது.

             உடலில் கொழுப்பு சேராமலும் தடுக்கும். தற்போது தக்காளியை தினமும் உணவில் சேர்த்துக் கொள்வதால் உடல் எடை அதிகரிக்காமல் பார்த்துக்கொள்ள  முடியும் என்று இங்கிலாந்து ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். பசியைத் தூண்டும் ஹார்மோன்களின் செயல் பாடுகளை தக்காளி கட்டுப்படுத்துகிறது.

               இதனால் அதிக அளவு சாப்பிடுவது தடுக்கப்பட்டு, உடல் எடை அதிகரிக்காமல் கட்டுக்குள் இருக்கிறது. சராசரி எடை கொண்ட 18 வயது முதல் 35 வயதுக்கு உள்பட்ட பெண்கள் இதற்கான ஆய்வில் ஈடுபடுத்தப்பட்டனர். 
    
              அவர்களில் ஒரு பிரிவினருக்கு  சாண்ட்விச்சுடன் கேரட் வழங்கப்பட்டது.
இதில் தக்காளி சாப்பிட்டு வந்தவர்கள் குறைவாகவே சாப்பிட்டனர். தக்காளி சாப்பிடுவது பசி உணர்வைக் கட்டுபாட்டுக்குள் வைக்கிறது என்று தெரிய வந்துள்

இதயத்தை பாதுகாக்கும் சீதா பழத்தின் செயல்கள்                      கஸ்டர்டு ஆப்பிள் என்றும் பட்டர் ஆப்பிள் என்றும் ஆங்கிலத்தில் அழைக்கப்படும் சீதாப்பழம் சுவை மிக்க இனிய பழமாகும். 

             குளூகோஸ் வடிவில் நிறைந்த அளவு சர்க்கரைச் சத்தைக் கொண்டிருக்கும் இப்பழம் குழந்தைகள் முதல், பெரியவர்கள் வரை அனைவராலும் விரும்பப்படுகிறது.


               வெப்பம் மிகுந்த பகுதிகளில் எளிதாக வளரும் சீதா சிறு மர வகையைச் சார்ந்தது. 

           சீத்தாப்பழம் தனிப்பட்ட மணமும், சுவையும் கொண்டது. சீத்தாப்பழத்தின் தோல், விதை, இலை, மரப்பட்டை அனைத்துமே அரிய மருத்துவ பண்புகளை கொண்டது.

           இதன் தாவரவியல் பெயர் Annona squamosa என்று பெயர். சீத்தாப்பழத்தில் நீர்சத்து அதிகமாக உள்ளது. மேலும் மாவுசத்து, புரதம், கொழுப்பு, தாது உப்புக்கள், நார்ச்சத்து, சுண்ணாம்புச் சத்து, பாஸ்பரஸ், இரும்பு சத்து போன்றவை அடங்கியுள்ளன.

மருத்துவ பயன்கள்:

          சீத்தாப்பழத்தை உண்ண செரிமானம் ஏற்படும். மலச்சிக்கல் நீங்கும்.

           சீத்தாப்பழச்சதையோடு உப்பை கலந்து உடையாத பிளவை பருக்கள் மேல் பூசிவர பிளவை பழுத்து உடையும்.

        இலைகளை அரைத்து புண்கள் மேல் போட்டுவரை புண்கள் ஆறும்.

        விதைகளை பொடியாக்கி சம அளவு பொடியுடன் சிறுபயிறு மாவு கலந்து தலையில் தேய்த்து குளித்து வர முடி மிருதுவாகும். பேன்கள் ஒழிந்து விடும்.

       சீத்தாப்பழம் குளிர் மற்றும் காய்ச்சலை குணப்படுத்தும்.

       சீத்தாப் பழ விதை பொடியோடு கடலை மாவு கலந்து எலுமிச்சை சாறில் குழைத்து தலையில் தேய்த்து ஊறிய பின்னர் குளித்து வர முடி உதிராது.

       சீத்தாப்பழ விதைப்பொடியை மட்டும் தலையில் தேய்த்து குளித்து வந்தால் முடி உதிராது.

      சிறுவர்களுக்கு சீத்தாப்பழம் கொடுத்துவர எலும்பு உறுதியாகும். பல்லும் உறுதியாகும்.

       சிறிதளவு வெந்தயம், சிறுபயிறு, இரண்டையும் இரவு ஊறவைத்து பின்னர் காலையில் அரைத்து இதோடு சீத்தாப்பழ விதைப்பொடியை கலந்து தலையில் தேய்த்து ஊறிய பின்னர் குளித்துவர தலை குளிர்ச்சி பெறும். முடியும் உதிராது. பொடுகு காணாமல் போகும்.

             சீத்தாப்பழத்தை தொடர்ந்து உண்டு வந்தால் இதயம் பலப்படும். காசநோய் இருந்தாலும் மட்டுப்படும்.

            100 கிராம் சீதாப்பழத்தில் அடங்கியுள்ள சத்துக்களின் உணவு மதிப்பீடு

           ஈரப்பதம்-70.5%, புரதம்-1.6%, கொழுப்பு-0.4%, மணிச்சத்து-0.9%, நார்ச்சத்து-3.1%, கால்சியம்-17மி.கி., பாஸ்பரஸ்-47மி.கி., இரும்புச்சத்து-4.31மி.கி., வைட்டமின் ‘சி’-37மி.கி., வைட்டமின்’பி’ காம்ப்ளக்ஸ் சிறிதளவு, மாவுச்சத்து-23.5%.,கலோரி அளவு-10.4% ஆகும். 

பேன் தொல்லைக்கு

               சீதாப்பழத்தின் விதைகளை சிறிதளவு சீயக்காய் அறைக்கும் பொழுது சேர்த்து அரைத்து வைத்துக் கொண்டு வாரம் ஒரு முறை தலைக்கு தேய்த்து குளித்து வர பேன்கள் நீங்கும்.

உயிரை குடிக்கும் வலி நிவராணி மாத்திரை.... பாராசிட்டமால்                                 தொடர்ந்து அளவுக்கதிகமாக பாராசிட்டமால் வலி நிவாரணி மருந்தை உட்கொண்டுவரும் ஆட்களுக்கு சில சந்தர்ப்பங்களில் உடலில் தேங்கும் அந்த மருந்தின் அளவு அதிகமாகி உயிரிழப்பு ஏற்படக்கூடும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். 


                              படிப்படியாக உடலில் சேர்ந்தாலும் கூட மருந்தின் அளவு கூடிப்போய் மரணம் ஏற்படலாம் என அவர்கள் தெரிவிக்கின்றனர்.
   
                             

                      கடந்த சில ஆண்டுகளில் 150க்கும் மேற்பட்டவர்கள் இவ்வாறாக உயிரிழந்திருப்பதை எடின்பர்க் நகர மருத்துவமனைகள் பதிவுசெய்துள்ளன என்று அந்நகர பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். 


                    ஒரு நபர் உட்கொள்வதற்குரிய அளவை விட சற்று கூடுதலான அளவில் பாரசிட்டமால் மருந்தை உட்கொள்கிறோம் என்பதை பலர் உணராமலேயே இருந்துவிடுகின்றனர் என்று அவர்கள் கூறுகிறார்கள். 


                   ஒரு தடவையில் மருந்தின் அளவு கூடிப்போவதை கண்டுபிடிப்பதென்பதை விட படிப்படியாக உடலில் மருந்தின் அளவு கூடிப்போவதை கண்டுபிடிப்பது சிரமமான விஷயமாகவே இருந்துவந்துள்ளது.

Monday, 25 June 2012

அப்படிப்போடு போடு போடு’. இந்த ட்யூன் இந்திக்குப் போகிறது.


                                   விஜய், த்ரிஷா நடித்த ‘கில்லி’ படத்தில் இடம்பெற்ற பாடல், ‘அப்படிப்போடு போடு போடு’. இந்த ட்யூன் இந்திக்குப் போகிறது. 


                                சமீபத்தில் சல்மான் கான், அசின் நடித்து ஹிட்டான படம் ‘ரெடி’. தெலுங்கு ‘ஆர்யா’ படத்தில் ஹிட்டான, ‘ரிங்க ரிங்கா’ பாடல் டியூன் இந்தப் படத்துக்கு பயன்படுத்தப்பட்டு ஹிட்டானது.


                            


                  இதையடுத்து, இந்தி வில்லன் நடிகர் சோனு சூட், ‘கில்லி’ படத்தில் ஹிட்டான, ‘அப்படிப் போடு போடு போடு’ பாடல் ட்யூனை வாங்கியுள்ளார். சோனு சூட், ‘அருந்ததி’ படத்தில் வில்லனாக நடித்தவர். தற்போது ‘ஒஸ்தி’ படத்தில் வில்லனாக நடித்துள்ளார். 

                             
                       சோனு, ‘லக்கி அன்லக்கி’ என்ற இந்திப் படத்தை தயாரித்து வருகிறார். இதில் ‘அப்படிப்போடு போடு போடு’ ட்யூன் இடம்பெறுகிறது. 


                            
                                      மல்லிகா ஷெராவத்துடன் சோனு ஆடுகிறார். ‘‘இந்த ட்யூனுக்கான உரிமையை இசை அமைப்பாளர் வித்யாசாகரிடமிருந்து வாங்கியுள்ளேன். இந்திக்காக சில மாற்றங்களை செய்து தர இருக்கிறார் அவர்’’ என்றார் சோனு.

நேரில் சிக்கினால் அநேகமாக அனுஷ்காவை கைமா செய்து விடுவார்.......

                            
    

                                நேரில் சிக்கினால் அநேகமாக அனுஷ்காவை கைமா செய்து விடுவார், த்ரிஷா. காரணம், ரொம்ப சிம்பிள்.
                       தெலுங்குப் படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்ட அனுஷ்கா, தமிழ்ப் படங்களில் முழு கவனமும் செலுத்தி வருகிறார். 


                         


                         விக்ரமுடன், ‘தாண்டவம்’, கார்த்தியுடன், ‘அலெக்ஸ் பாண்டியன்’, செல்வராகவன் இயக்கத்தில் ஆர்யாவுடன் ‘இரண்டாம் உலகம்’ என இந்த ஆண்டு முழுக்க அவர் பிசி. 


                            இதை கூட த்ரிஷா பொறுத்துக் கொள்வார். ஆனால், தான் நடித்து வந்த விளம்பரப் படங்களை அடுத்தடுத்து அனுஷ்கா கைப்பற்றியதைதான் த்ரிஷாவால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. 


                     கூட்டிக் கழித்துப் பார்த்தால், இன்று தமிழகத்தில் த்ரிஷா, ஜீரோ. இப்போது முதல் வரியை மீண்டும் படியுங்கள்.

The system administrator is responsible for following things:


The system administrator is responsible for following things: 1. User administration (setup and maintaining account)
 2. Maintaining system
 3. Verify that peripherals are working properly
 4. Quickly arrange repair for hardware in occasion of hardware failure
 5. Monitor system performance
 6. Create file systems
 7. Install software
 8. Create a backup and recover policy
 9. Monitor network communication
 10. Update system as soon as new version of OS and application software comes out
 11. Implement the policies for the use of the computer system and network
 12. Setup security policies for users. A sysadmin must have a strong grasp of computer security (e.g. firewalls and intrusion detection systems).

Saturday, 23 June 2012

படுக்கை அறையில் ரோமான்ஸ் அதிகரிக்க முக்கிய வழிகள்

Shweta Menon                          அதிகாலையில் எழுந்து லைட் போடுவது, புரண்டு படுப்பது இதுபோன்ற சின்னச் சின்ன விஷயங்களில் சில விதிமுறைகளை பின்பற்றுங்கள்.. 


                   படுக்கை அறை இன்பமயமாகும், ரொமான்ஸ் அதிகரிக்கும் என்கின்றனர் குடும்பநல நிபுணர்கள்.
வீட்டில் உள்ள அறைகளில் பெட்ரூம் முக்கியமானது. தூங்கி ஓய்வெடுப்பதற்கு மட்டும் அல்ல.. 
             மனதை ரிலாக்ஸ் செய்து மகிழ்வதற்கும் ஏற்ற அறை. குறிப்பாக தம்பதிகளுக்கு. ஆனால், அங்கும் சில சிரமங்கள், பிரச்னைகளை சந்திக்க வேண்டியுள்ளது. 


         அதை பெரிதுபடுத்தாமல் சமாளிக்க பழகி கொண்டால் ரொமன்ஸ் அதிகரிக்கும். இல்லை என்றால் வாழ்க்கை வெறுப்பாகிவிடும் என்கின்றனர் குடும்ப நல நிபுணர்கள்.

            படுக்கை அறை பழக்கவழக்கங்களில் தம்பதியர் இடையே வேறுபாடுகள் இருக்கும். இருவரில் ஒருவர் குறட்டை விடும் நபராக இருக்கலாம். இது மற்றவரின் தூக்கத்துக்கு இடைஞ்சலாக, எரிச்சலாக இருக்கும்.


               சில எளிய வழிகளை பின்பற்றினால் பிரச்னையை சமாளிக்கலாம். நீங்கள் குறட்டை விடும் நபராக இருந்தால், ‘நாசல் ஸ்டிரிப்’ அணியலாம் அல்லது டாக்டரை சந்தித்து நிவாரணம் தேடலாம். 
           Shweta Menon  பாதிக்கப்படும் நபராக இருந்தால் காதில் பஞ்சை வைத்து அடைத்து கொள்ளலாம் அல்லது மெல்லிய இசையை கேட்படி தூங்கலாம். 
       அதுவும் இல்லையென்றால் கனமான போர்வை இழுத்துப் போர்த்தி படுக்கலாம். அல்பமான குறட்டைக்காக டைவர்ஸ் வரை போவது ரொம்ப ஓவர்.
        சிலர் அடித்துப் போட்டாற்போல கொஞ்சம்கூட அசையாமல் தூங்குவார்கள். வேறு சிலர் புரண்டுகொண்டே இருப்பார்கள்.
 உருளும் ஆசாமிகளின் பக்கத்தில் படுத்து தூங்குவது கஷ்டமான விஷயம்தான். 


           இதுபோன்ற நபர்கள், பார்ட்னருக்கு தொந்தரவு கொடுக்காமல் தரையில் படுத்து புரள்வது சிறந்தது.
சிலர் அதிகாலை 4 மணிக்கே எழுந்திருப்பார்கள். உங்கள் இனியவர்/இனியவள் மிட்நைட் 1 மணிவரை டிவி பார்த்துவிட்டோ, புத்தகம் படித்துவிட்டோ தூங்க செல்லும் நபராக இருக்கலாம்.       
                    அப்படியிருந்தால் அதிகாலையில் எழுந்திருக்கும் நபர், முதல் வேலையாக வீடு முழுவதும் ட்யூப்லைட் போட்டு அமர்க்களம் பண்ணக்கூடாது. 
           முடிந்த அளவு நைட் லேம்ப் வெளிச்சத்திலேயே தன் வேலைகளை முடிக்க பழகிக்கொள்ள வேண்டும்.
இல்லற இன்பத்துக்குப்பின் சிலருக்கு உடனடியாக தூக்கம் சொக்கும். பார்ட்னர் சிறிது நேரம் பேசிக்கொண்டிருக்க பிரியப்படலாம். ‘குட்நைட்’ சொல்லி அவரை கடுப்பேற்றாமல், உங்கள் தூக்கத்தை அட்லீஸ்ட் 10 நிமிஷமாவது அவருக்காக தியாகம் செய்துவிட்டு பேசிக்கொண்டிருக்கலாம்.
பெரும்பாலும் இதுபோன்ற சின்னப் பிரச்னைகள்தான் விஸ்வரூபமெடுத்து பிரிவு வரை போகிறது. 
                  பார்ட்னருடன் மனம் விட்டுப் பேசினால், மென்மையாக எடுத்துச் சொன்னால் சிறிய அளவாக இருக்கும்போதே பிரச்னைகளை அகற்றிவிடலாம். படுக்கைஅறை போல வாழ்க்கையும் இன்பமாகும். ரொமான்ஸ் அதிகரிக்கும் 

தற்கொலையில் முதலிடத்தைத் தேடிக் கொண்ட இந்தியா............


      உலகிலேயே தற்கொலை மரண விகிதத்தில் இந்தியா முதலிடத்தைத் தேடிக் கொண்டதால லான்செட் நிறுனத்தின் ஆய்வில் தெரியவந்துள்ளது. இதில் தென் மாநிலங்கள்தான் முதலிடத்தில் இருக்கின்றன என்றும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளன.
      இந்தியாவில் மொத்தம் 22% மக்கள் தொகையைக் கொண்டுள்ள தென்னிந்திய மாநிலங்களான தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தற்கொலை எண்ணிக்கையில் 42%ஐக் கொண்டுள்ளது என்று ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.
       2010ம் ஆண்டு ஆந்திராவில் 28,000 பேரும், தமிழகத்தில் 24,000 பேரும், மகாராஷ்டிராவில் 19 ஆயிரம் பேரும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
    மஹராஷ்டிரம் மற்றும் மேற்கு வங்க மாநிலங்கள் இணைந்து 15% அளவிற்கு தற்கொலைகள் நடக்கின்றன. இந்தியாவிலேயே மிகக் குறைந்த எண்ணிக்கையில் டெல்லியில்தான் தற்கொலைகள் நிகழ்கின்றன என்றும் கூறப்பட்டுள்ளது.
      இதில் 15 வயது முதல் 21 வயது வரையுள்ள இளைஞர்கள் சாலை விபத்திலும் இளம்பெண்கள் பிரசவ நேரத்திலும் குழந்தை பிறக்கும்போது ஏற்படும் கோளாறுகள் காரணமாகவும் தற்கொலை முடிவைத் தேடிக்கொள்கின்றனர்
        சாலை விபத்தில் 14 சதவிகித இளைஞர்களும் பிரசவ காலத்தில் இளம்பெண்கள் 16 சதவிகிதத்தினரும் தற்கொலை மரணங்களில் இறக்கின்றனர்.
       2001-03ம் ஆண்டுகளில் இருந்ததை விட தற்போது தற்கொலைகள் 3 மடங்கு அதிகரித்துள்ளது. தென் மாநிலங்களில் தற்கொலை செய்வோரின் எண்ணிக்கை 10 மடங்கு அதிகரித்துள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

Thursday, 21 June 2012

மத்திய மந்திரி சபையில் இருந்து சங்மா மகள் அகதா ராஜினாமா செய்கிறார்


              முன்னாள் சபாநாயகரும் தேசியவாத காங்கிரஸ் தலைவர்களில் ஒருவருமான பி.ஏ.சங்மா ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகிறார். தேசியவாத காங்கிரஸ் கட்சி மத்தியில் காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு ஆதரவு அளித்து வருகிறது. சங்மா மகள் அகதா சங்மா மத்திய மந்திரி பதவி வகித்து வருகிறார்.
 
            மத்திய மந்திரி சபையில் இருந்து சங்மா மகள் அகதா ராஜினாமா செய்கிறார் சங்மா தேர்தலில் நிற்க தேசியவாத காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்தது. அவரை வாபஸ் பெறுமாறும் இல்லையெனில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தது. ஆனால் சங்மாவே முன்வந்து தேசியவாத காங்கிரசில் இருந்து ராஜினாமா செய்துவிட்டார்.
 
       சங்மாவின் மகள் அகதா சங்மா மத்திய மந்திரி சபையில் நகர்ப்புற வளர்ச்சித்துறை மந்திரியாக பதவி வகித்து வருகிறார். இவர் கடந்த பாராளுமன்ற தேர்தலில் மேகாலயா மாநிலத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அப்போது அவருக்கு வயது 29. இதனால் இந்தியாவின் மிக இளவயது எம்.பி.யானார்.
 
        தேசியவாத காங்கிரஸ் மத்திய மந்திரிசபையில் அங்கம் வகித்ததால் அகதா சங்மா மத்திய மந்திரியானார். தற்போது தந்தை சங்மா ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதுடன் கட்சியில் இருந்தும் ராஜினாமா செய்துவிட்டார்.
 
      எனவே அகதா சங்மா மத்திய மந்திரிசபையில் நீடிக்க விரும்பவில்லை. மந்திரி பதவியை ராஜினாமா செய்து விட்டு தந்தைக்கு ஆதரவு தெரிவிக்க முடிவு செய்து உள்ளார்.
 
        விரைவில் அவர் ராஜினாமா செய்வார் என்று கூறப்படுகிறது.

Wednesday, 20 June 2012

மாற்றான் மனைவிக்கு ஆசைப்பட்டவனுக்கு....... அபராதம் ரூபாய் 15௦00 மற்றும் ஆயுள்


               தூத்துக்குடியில் ஆசைக்கு இணங்காத இளம்பெண்ணை கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
              தூத்துக்குடி தபால் தந்தி காலனி 8வது தெருவைச் சேர்ந்தவர் ராமசுப்பிரமணியன். அங்குள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். அவரது மனைவி வித்யாலெட்சுமி. 
         அவர்களது தெருவின் பின்புறம் வசிக்கும் பால்ராஜ் மகன் பால் ஜெயபிரதீப். டிப்ளமோ படித்துள்ள அவர் விஜயலெட்சுமியின் அழகில் மயங்கி அவரை அடைய பலமுறை முயற்சி செய்தார்.
              இந்நிலையில் கடந்த 23-5-2011 அன்று இரவு ராமசுப்பிரமணியன் வெளியே சென்ற நேரத்தில் அவரது வீட்டிற்குள் புகுந்த ஜெயபிரதீப் வித்யாலெட்சுமியை பலாத்காரம் செய்ய முயன்றார். 
          அவரது ஆசைக்கு இணங்க மறுத்த வித்யாலெட்சுமி போராடவே ஜெயபிரதீப் ஆத்திரத்தில் கத்தியை எடுத்து அவரை சரமாரியாகக் குத்திக் கொலை செய்தார்.
இது குறித்து சிப்காட் போலீசார் விசாரணை நடத்தி பால் ஜெயபிரதீப்பை கைது செய்தனர்.                
            இந்த வழக்கு தூத்துக்குடி விரைவு நீதிமன்றம் எண் 2ல் நடந்து வந்தது. நீதிபதி கிருஷ்ணவள்ளி வழக்கை விசாரித்து பால் ஜெயபிரதீப்புக்கு ஆயுள் தண்டனையும், ரூ.1,500 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

போலீஸ் மாதிரி நடித்து கள்ளகாதலியை கடத்திய காதலன் உண்மையான போலீசில் கைது


                நெல்லை அருகே போலீஸ் சீருடை அணிந்து கள்ளக் காதலனுடன் பைக்கில் சென்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
             நெல்லை மாவட்டம் விஜயநாராயணம் அருகே உள்ள காடன்குளத்தில் இன்ஸ்பெக்டர் ஜெயபிரின்ஸ் மற்றும் போலீசார் வாகன சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த வாலிபருடன் போலீஸ் சீருடை அணிந்த இளம்பெண் இருந்தார்.
               சீருடையைப் பார்த்து சந்தேகமடைந்த போலீசார் அவரிடம் விசாரித்த போது முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார். உடனே அவரது அடையாள அட்டையை காண்பிக்குமாறு கேட்டனர். அவர் மறுக்கவே அந்த பெண்ணையும், அவருடன் இருந்த வாலிபரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.
            விசாரணையில் அந்த பெண் முன்னீர்பள்ளம் அருகே உள்ள கோபாலசமுத்திரத்தைச் சேர்ந்த சுப்பிரமணி மனைவி சாந்தி என்பதும், அந்த வாலிபர் கீழச்செவலை சேர்ந்த சிதம்பரம் மகன் கதிரவன் என்பதும், இருவரும் கள்ளக்காதலர்கள் என்பதும் தெரிய வந்தது.
       கேரளாவில் உள்ள ஹோட்டலில் வேலை செய்யும் கதிரவன் கோபாலசமுத்திரத்திலுள்ள உறவினர்கள் வீட்டுக்கு அடிக்கடி சென்று வந்தபோது சாந்தியுடன் கள்ளத் தொடர்பு ஏற்பட்டுள்ளது. கதிரவனுடன் ஹோட்டலில் வேலை செய்யும் வெங்கட்ராயபுரத்தை சேர்ந்த ராஜன் என்பவர் ஊரில் நடந்த கொடை விழாவுக்கு வருமாறு அழைக்கவே கதிரவன் சாந்தியுடன் சென்றுள்ளார்.
         போலீஸ் சீருடையில் இருந்த சாந்தியை தனது மனைவி என்று கூறி உறவினர்களிடம் கதிரவன் அறிமுகப்படுத்தினார். கொடை விழா முடிந்து இருவரும் பைக்கில் ஊருக்கு திரும்பும்போது போலீசாரிடம் சிக்கிக் கொண்டனர்.