HAI FRIENDS PLEASE CLICK THE ADD.

Sunday 8 July 2012

மது குடிக்க... இரவு 12 வரை நல்லா குடிக்கலாம் ஓட்டல் பார்கலில்



       


   -தமிழகத்தில் செயல்படும் ஹோட்டல் மதுபான விடுதிகளில் இரவு 11 மணிக்கு மேல் மதுபானம் விற்பனை செய்யகூடாது என்பது, தற்போது மாற்றியமைக்கப்பட்டு இரவு 12 மணிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

              அதேபோல் 5 நட்சத்திரவிடுதிகளுக்கு சுற்றுலாப்பயணிகள் வரத்து நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் 5 நட்சத்திர விடுதிகள், கிளப்புகளில் மட்டும் 24 மணிநேரமும் மதுபான சப்ளை செய்ய அரசு அனுமதி வழங்கியுள்ளது. 
          நட்சத்திர ஓட்டல்களில் மது அருந்தும் பார் வசதி காலை 11 மணி முதல் இரவு 11 மணி வரை மட்டுமே தற்போது அனுமதிக்கப்பட்டுள்ளது. பார் மற்றும் கிளப்புகளிலும் இந்த நேரத்தில் மட்டுமே மது அருந்த முடியும்.

       நள்ளிரவில் வரும் விருந்தினர்களுக்கு மது அருந்த முடியாத நிலை உள்ளது. நட்சத்திர ஓட்டல்களில் அனைத்து வசதிகள் கிடைத்தாலும் மது விற்பனை மட்டும் குறிப்பிட்ட நேரத்திற்கு மேல் அனுமதிப்பது இல்லை.

      இதனால் ஓட்டல் தொழில் பாதிக்கப்படுவதாகவும் மது விற்பனை நேரத்தை நீட்டிப்பு செய்து தர வேண்டும் என்றும் நட்சத்திர ஓட்டல்கள் தரப்பில் அரசிடம் வலியுறுத்தப்பட்டது. இதையடுத்து மது விலக்கு மற்றும் ஆயத்தீர்வை கட்டுப்பாட்டில் இயங்கும் நட்சத்திர ஓட்டல்கள், பார்கள், கிளப்புகள் போன்றவற்றில் மது விற்பனை நேரத்தை அதிகரிக்க ஆயதத்தீர்வு துறை முடிவு செய்துள்ளது.

      5 நட்சத்திர ஓட்டல்கள் 24 மணி நேரமும் பார் நடத்த ரூ.12 லட்சம் முன்பணமாக செலுத்த வேண்டும். ஒரு ஆண்டுக்கு ரூ.8 லட்சம் முன்பணமாக செலுத்தி வந்த ஓட்டல்கள் இனி ரூ.16 லட்சம் செலுத்த வேண்டும்.

       4 நட்சத்திர, 3 நட்சத்திர, ஒரு நட்சத்திர ஓட்டல்களின் முன்பணமும் தற்போது உயர்த்தப்பட்டுள்ளது. சாதாரண ஓட்டல் மற்றும் ஒரு நட்சத்திர ஓட்டல்கள், கிளப் போன்றவைகளின் கட்டணமும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் இவற்றில் பார் செயல்படும் நேரம் காலை 11 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை செயல்பட அரசு அனுமதி அளித்துள்ளது. இதனால் குடிமகன்கள் குஷியடைந்துள்ளனர்.

No comments:

Post a Comment