HAI FRIENDS PLEASE CLICK THE ADD.

Monday 2 July 2012

ஆசிய கிரிக்கெட் இறு‌தி‌ப் போ‌ட்டி டை‌யி‌ல் முடி‌ந்தது - இந்தியா- பாகிஸ்தான் கூட்டு சாம்பியன்



                  இந்தியா, பாகிஸ்தான் இடையிலான 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் இறுதி ஆட்டம் `டை'யில் முடிந்ததால் இரு அணிகளும் கோப்பையை கூட்டாக ப‌‌கி‌ர்‌ந்து கொ‌ண்டன.

             8 ‌அ‌ணிக‌ள் ப‌ங்கே‌ற்ற 19வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நடந்தது. இறு‌தி‌ப் போ‌ட்டி‌யி‌ல்இந்தியாவும், பாகிஸ்தானும் மோ‌தியது. முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 282 ரன்கள் குவித்தது.

        இந்த தொடரில் 2வது முறையாக சதம் அடித்த சமி அஸ்லாம் 134 ரன்களும், உமர் வாஹீத் 48 ரன்களும் விளாசினர். இந்திய தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் ரஷ் களாரியா 10 ஓவர்கள் பந்து வீசி 37 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

       அடுத்து 283 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர் மனன் வோரா (11) ஏமாற்றினாலும், கேப்டன் உன்முக் சந்தும், சென்னையை சேர்ந்த பாபா அபாரஜித்தும் 2வது விக்கெட்டுக்கு 175 ரன்கள் கு‌வி‌த்தன‌ர். 

       அபாரஜித் 90 ரன்களில் ஆட்டம் இழந்தார். அவருக்கு பிறகு வந்த விஜய் ஜோல் 11 ரன்களில் வெளியேற்றப்பட்டார். என்றாலும் டெல்லியை சேர்ந்த உன்முக் சந்த், நிலைத்து நின்று ஆடியதால், இந்தியாவுக்கே வெற்றி வாய்ப்பு அதிகமாக தென்பட்டது.

       கடைசி 6 ஓவர்களில் இந்தியாவின் வெற்றிக்கு 37 ரன்கள் தேவைப்பட்டன. அப்போது கைவசம் 7 விக்கெட்டுகள் இருந்தன. ஆனால் பாகிஸ்தான் இடக்கை சுழற்பந்து வீச்சாளர் முகமது நவாஸ் தனது கடைசி இரு ஓவர்களில் 5 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து, இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி இந்தியாவுக்கு திடீரென நெருக்கடியை உருவாக்கினார். இதனால் ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. கடைசி ஓவரில் இந்தியாவின் வெற்றிக்கு 7 ரன்கள் தேவைப்பட்டன.

       50வது ஓவரை பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் இசான் அதில் வீசினார். இதில் முதல் 4 பந்துகளில் 2 ரன்கள் மட்டுமே எடுத்த இந்தியா உன்முக் சந்தின் (121) விக்கெட்டையும் பறிகொடுத்தது. இதனால் 2 பந்துகளில் 5 ரன்கள் தேவைப்பட்டன. 5-வது பந்தை சந்தித்த களாரியா பவுண்டரிக்கு விரட்டி ஆட்டத்தை சமனுக்கு கொண்டு வந்தார். 

           இதையடுத்து கடைசி பந்தில் ஒரு ரன் தேவைப்பட்ட நிலையில், களாரியா (6) கேட்ச் ஆகி போனார். இதனால் திரிலிங்கான இந்த ஆட்டம் யாருக்கும் வெற்றி தோல்வியின்றி டை‌யி‌ல் முடிந்தது. இந்திய அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 282 ரன்கள் சேர்த்தது.

        இதையடுத்து ஆசிய கோப்பையை இந்திய கேப்டன் உன்முக் சந்தும், பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாமும் கூட்டாக பகிர்ந்து கொண்டனர். சதம் அடித்த சமி அஸ்லம், உன்முக் சந்த் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டனர். முன்னதாக லீக் சுற்றில் இந்திய அணி ஒரு ரன் வித்தியாசத்தில் பாகிஸ்தானிடம் தோற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.

      அடுத்து, ஆகஸ்டு மாதம் ஆஸ்திரேலியாவில் நடக்கும் 16 அணிகள் பங்கேற்கும் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலககோப்பை கிரிக்கெட் போட்டிகளில் இவ்விரு அணிகளும் களம் இறங்கின்றன.

No comments:

Post a Comment