HAI FRIENDS PLEASE CLICK THE ADD.

Friday, 13 July 2012

குடிகாரக் கும்பல் ஒன்று இளம் பெண்ணை....மானபங்கம் செய்த சம்பவம்


     அசாம் மாநிலத்தில் பொதுமக்கள் அதிகம் நடமாடும் இடத்தில் 20க்கும் மேற்பட்ட குடிகாரக் கும்பல் ஒன்று இளம் பெண்ணை மானபங்கம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
      அசாம் தலைநகர் கவுகாத்தியிலிருந்து மேகாலயா மாநில தலைநகர் ஷில்லாங் செல்லும் சாலையில் மதுபானக் கடைக்கு இளம்பெண் ஒருவர் நண்பருடன் வந்திருக்கிறார். அப்போது போதையில் இருந்த 20 பேர் கொண்ட கும்பல் ஒன்று அந்த இளம்பெண்ணை சுற்றி வளைத்து மானபங்கப்படுத்தியுள்ளனர். 
     அவரது தலை முடியை பிடித்து இழுத்து கீழே தள்ளி அடித்துத் தாக்கியுள்ளனர். மேலும் அவரை உடைகளை பொதுமக்கள் முன்னிலையிலேயே களைந்தும் இருக்கின்றனர்.சுமார் அரைமணி நேராமக அந்தக் கும்பலின் அட்டகாசம் நீடித்தது. அப்பகுதிக்கு போலீசார் வந்ததையடுத்து கும்பல் தப்பி ஓடியது. இதை உள்ளூர் தொலைக்காட்சி ஒன்று அப்படியே படம்பிடித்து ஒளிபரப்பாக்கிவிட்டது. அப்புறம் என்ன! மாநிலமே களேபரமானது.
    அசாம் ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது. இச் சம்பவத்துக்கு முதல்வர் தருண் கோகய் இதனால் வேறு வழியில்லாமல் 3 பேரை போலீஸ் கைது செய்திருக்கிறது. மற்றவர்கள் தலைமறைவாகிவிட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
சமூக வலைதளங்களான ஃபேஸ்புக் மற்றும் டிவிட்டரிலும் இந்த சம்பவம் பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது.

Wednesday, 11 July 2012

திருமண சட்டத்தை மாற்றி புதிதாக எழுத,,,,,நடிகை தேவயானி.



                               சில பல ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ் சினிமாவில் முன்னணி நாயகியாக வலம் வந்தவர் நடிகை தேவயானி. டைரக்டர் ராஜகுமாரனை காதலித்து திருமணம் செய்து கொண்ட பின்னர் சினிமா வாய்ப்புகளை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து கொண்டார். 

                               


                                                           இப்போது முழுநேர சீரியல் நடிகையாக மாறிவிட்ட தேவயானி நீண்ட இடைவேளைக்கு பிறகு மீண்டும் ஒரு படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார். தேவயானியின் கணவர் ராஜகுமாரன் திருமதி தமிழ் என்ற படத்தை இயக்கி, அதில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார். இப்படத்தில் தனது மனைவி தேவயானியையே தனக்கு ஹீரோயினாக்கியுள்ளார்.  

                           



                                    திருமண சட்டத்தை மாற்றி புதிதாக எழுத வேண்டும் என்ற கருவை அடிப்படையாக கொண்ட கதையாகும் திருமதி தமிழ். இப்படத்தில் ராஜகுமாரன், தேவயானியுடன் லிவிங்ஸ்டன், ரமேஷ் கண்ணா, கஞ்சா கருப்பு, சாருஹாசன், பாண்டு, ரோகிணி, கீர்த்தி சாவ்லா உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். எஸ்.ஏ.ராஜ்குமார் இசையமைக்கிறார். 

                          மிக நீண்ட இடைவெளிக்கு பிறகு, தேவயானி ஹீரோயினாக நடிக்கும் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.