கேரளாவில் மது குடிப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதில் பள்ளி, கல்லூரி மாணவர்களும் அடங்குவர். கடந்த ஆண்டு ஒரு பள்ளி விழாவில் பேசிய நடிகர் மம்முட்டி பான் மசாலா, மது போதைக்கு மாணவர் சமுதாயமும் அடிமையாகி போவதாக கூறினார்.
இதை தடுக்க விழிப்புணர்வு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். மேலும் பல்வேறு தொண்டு நிறுவனங்களும் கேரளாவில் மது கடைகளின் எண்ணிக்கையை குறைக்க வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணியை நடத்தின. இந்த நிலையில் கேரள முதல்-மந்திரி உம்மன்சாண்டி புதிய சட்டத்தை அமல்படுத்தி உள்ளார்.
இந்த சட்டத்தின்படி 21 வயது நிரம்பியவர்கள் மட்டுமே மதுக்கடைகளுக்கு சென்று மது வாங்க முடியும். மேலும் பள்ளி, கல்லூரிகளுக்கு 400 மீட்டர் தூரத்துக்கு அப்பால்தான் புகையிலை பொருட்களை விற்பனை செய்ய வேண்டும் என்ற சட்டமும் கொண்டு வரப்பட்டது.
இந்த புதிய உத்தரவு நேற்று அமலுக்கு வந்தது. பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பான்மசாலா, புகையிலை போன்ற போதை பொருட்களை விற்பவர்களை கண்காணிக்க தனிக்குழு ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
labels:பான்மசாலா, புகையிலை,பள்ளி, கல்லூரி
No comments:
Post a Comment