ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரில் குழந்தைகள் நல மருத்துவமனையில் 44 பச்சிளம் குழந்தைகள் பலியான சம்பவத்தை தொடர்ந்து , மருத்துவமனை கண்காணிப்பாளர் இடமாற்றம் செய்யப்பட்டார்.
காஷ்மீரில் ஜி. பி. பான்ட் மருத்துவமனையில் கடந்த இரு வாரங்களில் 44 பச்சிளம் குழந்தைகள் போதிய மருத்துவ வசதியின்றி இறந்தனர்.
டாக்டர்கள், நர்சுகள் மற்றும் குழந்தை பராமரிப்பிற்கான வென்டிலேட்டர் பற்றாக்குறையால் குழந்தைகள் பலியானதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக வடக்கு காஷ்மீரின் லாங்கேட் தொகுதி சுயேட்சை எம்.எல்.ஏ. ரஷீத் என்பவர் மக்களை திரட்டி போராட்டம் நடத்தினார்.
இது குறித்து உரிய விசாரணைக்கு அம்மாநில அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் ஜி.பி.பான்ட் மருத்துவமனையில் கண்காணிப்பாளர் ஜாவியத் சவுத்ரி என்பவரை இடமாற்றம் செய்ய அரசு உத்தரவிட்டது.
இது குறித்து உரிய விசாரணைக்கு அம்மாநில அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் ஜி.பி.பான்ட் மருத்துவமனையில் கண்காணிப்பாளர் ஜாவியத் சவுத்ரி என்பவரை இடமாற்றம் செய்ய அரசு உத்தரவிட்டது.
No comments:
Post a Comment