HAI FRIENDS PLEASE CLICK THE ADD.

Thursday, 31 May 2012

டெங்கு காய்ச்சலுக்கு...பலி எண்ணிக்கை 51 ஆக உயர்ந்துள்ளது.

                                 நெல்லை மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலுக்கு மேலும் ஒரு குழந்தை பலியானது. இதையடுத்து பலி எண்ணிக்கை 51 ஆக உயர்ந்துள்ளது. 
                                சென்னையில் டெங்கு காய்ச்சலுக்கு பலியானதாக கூறப்பட்ட பெண்ணுக்கு சிகிச்சையளித்த டாக்டர்களிடம் மாநகராட்சி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். 
                          நெல்லை மாவட்டம் கடையநல்லூர் பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன் டெங்கு காய்ச்சல் ஏற்பட்டு மாவட்டம் முழுவதும் பரவியது. டெங்குவால் பாதிக்கப்பட்ட ஏராளமானோர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

                 நெல்லை அரசு மருத்துவமனை டெங்கு தனிவார்டுகளில் 100க்கும் மேற்பட்ட குழந்தைகள், பெரியவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். தென் மாவட்டங்களில் இந்த காய்ச்சலுக்கு இதுவரை 50 பேர் வரை பலியாகி உள்ளனர். 
                        இந்நிலையில் நெல்லை மாவட்டம் மேலப்புளியங்குடி அருந்ததியர் காலனியை சேர்ந்த ரவீந்திரன் என்பவரது ஒன்றரை வயது மகன் ஹரிபிரசாத் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு கடந்த ஒருவாரத்துக்கு முன்பு பாளையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டான். 
                     அங்கு அவனது உடல்நிலை மோசமானது. உயிருக்கு ஆபத்தான நிலையில் நேற்று மாலை நெல்லை அரசு மருத்துவமனை தனி வார்டில் அனுமதிக்கப்பட்ட அவன் நேற்றிரவு இறந்தான். 

                     இதனால் பலி எண்ணிக்கை 51 ஆக உயர்ந்துள்ளது. இதனிடையே களக்காடு ஜெ.ஜெ.நகர் மேல காலனியை சேர்ந்த கூலி தொழிலாளி சுப்பையா மகள் ஆயிஷாபானு (13) காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார். 
               இந்த சிறுமி டெங்கு காய்ச்சலால் இறந்தாரா? என்பது குறித்து அறிய அவரது ரத்தமாதிரியை டாக்டர்கள் மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

டாக்டர்களிடம் விசாரணை

                 சென்னை கீழ்பாக்கத்தை சேர்ந்தவர் காசிநாதன். கிண்டி போக்குவரத்து புலனாய்வு பிரிவில் உதவி ஆய்வாளராக உள்ளார். இவரது மகள் மஞ்சுளா (30). காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த மஞ்சுளா, கடந்த 24ம் தேதி, அண்ணாநகரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். 
                           அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவருக்கு மஞ்சள் காமாலை, சிறுநீர் தொற்று போன்றவற்றுடன் அதிக அளவு ரத்தபோக்கும் இருந்ததாக கூறி சிகிச்சை அளித்துள்ளனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று மாலை மஞ்சுளா இறந்தார். பிரேத பரிசோதனைக்காக அவரது உடல் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 

                      இந்நிலையில் அவர் டெங்கு காய்ச்சலுக்கு பலியாகி இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது. இதனை தொடர்ந்துசென்னை மாநகராட்சி சுகாதார துறை அதிகாரிகள், மஞ்சுளாவுக்கு சிகிச்சையளித்த டாக்டர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.


labels:கீழ்பாக்கம்,ஹரிபிரசாத்,நெல்லை,

No comments:

Post a Comment