சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தின் போது பல்வேறு உறுப்பினர்கள் தங்கள் பகுதிக்கு புதிய பஸ்கள் மற்றும் குளிர்சாதன பஸ்கள் விடப்படுமா என்று கேள்வி எழுப்பினார்கள்.
இதற்கு பதில் அளித்த அமைச்சர் செந்தில்பாலாஜி, புதிய பஸ்கள் தயாரானவுடன் உறுப்பினர்களின் கோரிக்கைகள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் அனுமதி பெற்று நிறைவேற்றப்படும்.
அரசு பஸ்களில் வைக்கப்பட்டிருந்த டி.வி.க்கள் கடந்த ஆட்சியில் முறையாக பராமரிக்கப்படவில்லை. தற்போது நீண்ட தூர பஸ்களில் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய டி.வி.க்கள் வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இன்னும் 1 வார காலத்தில் ஒப்பந்த புள்ளிகள் கோரப்பட்டு புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய டி.வி.க்கள் வைக்கப்படும்.
labels:bus,govt,television,jeyalalitha,
No comments:
Post a Comment