பாகிஸ்தானில் உள்ள அபோதாபாத்தில் பதுங்கி இருந்த அல்கொய்தா இயக்க தலைவர் ஒசாமா பின்லேடனை கடந்த ஆண்டு மே மாதம் அமெரிக்க அதிரடிப் படையினர் சுட்டுக் கொன்றனர். அங்கு பின்லேடன் தங்கி இருந்த தகவல் பாகிஸ்தானை சேர்ந்த டாக்டர் சஷில் அப்ரிடி மூலம் தான் அமெரிக்காவுக்கு தெரியவந்தது.
எனவே அவரை அமெரிக்கா வெகுவாக பாராட்டி, கருணை காட்டி விடுதலை செய்ய பாகிஸ்தானை கேட்டுக் கொண்டது.
ஆனால் பாகிஸ்தான் கோர்ட்டில் அப்ரிடி மீது தேசதுரோக வழக்கு தொடரப்பட்டு 33 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து நீதிபதிகள் தீர்ப்பு கூறினர். தற்போது அவர் பெஷாவர் ஜெயிலில் காவலில் இருக்கிறார்.
இதற்கிடையில் தண்டனை அடைந்த டாக்டர் அப்ரிடியின் மீது லஞ்ச-ஊழல் புகார்கள், பெண்களுடன் முறைகேடான பழக்கம், சித்ரவதை, திருட்டு போன்ற குற்றச்சாட்டுகள் இருப்பதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.
அதுமட்டுமின்றி காயம் அடைந்த தீவிரவாதிகளுக்கும் அவர் ரகசியமாக சிகிச்சை அளித்தவர் என்றும் கூறுகிறார்கள். அப்ரிடிக்கும், அவரது குடும்பத்துக்கும் அமெரிக்கா தஞ்சம் கொடுக்க முன்வந்ததாகவும், ஆனால் அதை அவர் ஏற்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில் பாகிஸ்தானின் உளவுத்துறையின் சார்பில், உள்துறைக்கு ஒரு எச்சரிக்கை தகவல் கொடுத்துள்ளனர். அதில் சிறையில் இருக்கும் டாக்டர் அப்ரிடியின் உயிருக்கு தீவிரவாதிகளால் ஆபத்து இருக்கிறது.
தீவிரவாதிகள் அவரை கடத்தி செல்ல முயற்சி செய்யலாம் அல்லது விஷம் வைத்து கொலை செய்யலாம் என கூறப்பட்டு இருக்கிறது. எனவே சிறைச்சாலைக்கு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடு செய்வதா? அவரை வேறு சிறைக்கு மாற்றலாமா? என்பது குறித்து அதிகாரிகள் ஆலோசித்து வருகிறார்கள்.
labels: தீவிரவாதிகள்,டாக்டர்,அமெரிக்கா, பின்லேடன்.

No comments:
Post a Comment