இத்தகைய சிறப்புகள் வாய்ந்த குருபகவான் ஒவ்வொரு ராசியிலும் சுமார் 1 ஆண்டு காலம் தங்கியிருப்பார். 12 ராசிகளையும் அவர் கடந்து வர 12 ஆண்டுகள் ஆகும்.
இது தனிச்சிறப்பு பெறுகிறது. இந்த குருபெயர்ச்சியால் ரிஷபம், மிதுனம், சிம்மம், துலாம், தனுசு, கும்பம் மற்றும் மீனம் ஆகிய ராசிக்காரர்கள் பரிகாரம் செய்து கொள்வது நல்லது. மற்ற ராசியினருக்கு கெடு பலன் குறையும் என்று கூறப்படுகிறது.
தமிழகத்திலேயே முதன்மை வாய்ந்த குரு பரிகார தலமாக திருவாரூர் மாவட்டம் ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோவில் விளங்கி வருகிறது. இங்கு குருபகவான் தனி சன்னதியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இக்கோவிலில் குருபெயர்ச்சி விழாவையொட்டி கடந்த 7-ந்தேதி முதல் 14-ந்தேதி வரை முதல் கட்ட லட்சார்ச்சனை நடந்தது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு குருபகவானை தரிசனம் செய்தனர். இதைத்தொடர்ந்து 2-வது கட்டமாக வருகிற 23-ந்தேதி முதல் ஜுன்13-ந்தேதி வரை லட்சார்ச்சனை நடைபெறும்.
இன்று (வியாழன்) மாலை குருபெயர்ச்சி விழா நடக்கிறது. இதையொட்டி குருபகவானுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாரதனை நடைபெற்று வருகிறது. இன்று மாலை நடைபெறும்
குருபெயர்ச்சியில் பங்கேற்று குருபகவானை தரிசிக்க பக்தர்கள் குவிந்தனர். பக்தர்கள் வசதிக்காக சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டுள்ளது. அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. தஞ்சை மாவட்டம் திட்டை வசிஷ்டேஸ்வரர் கோவிலில் குருபகவான் தனி சன்னதியில் தனி விமானத்துடன் ராஜகுருவாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இக்கோவிலிலும் இன்று மாலை குருபெயர்ச்சி விழா நடக்கிறது.
labels:குருபெயர்ச்சி,
No comments:
Post a Comment