HAI FRIENDS PLEASE CLICK THE ADD.

Monday, 21 May 2012

ஜெயலலிதாயுடன் அத்வானி டெலிபோனில் பேசியது இது....

  
                      ஜனாதிபதி பிரதீபா பட்டீலின் பதவி காலம் ஜூலை மாதத்துடன் முடிவடைய இருப்பதால் புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வதில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. 

                மத்தியில் ஆளும் காங்கிரஸ் கூட்டணி சார்பிலோ, முக்கிய எதிர்க்கட்சியான பாரதீய ஜனதா சார்பிலோ ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை இன்னும் முடிவு செய்யவில்லை. 

               இரு கட்சிகளுக்குமே ஜனாதிபதி தேர்தலில் தனிப்பட்ட மெஜாரிட்டி இல்லை. கம்யூனிஸ்டுகள், சமாஜ்வாடி, அ.தி.மு.க., தெலுங்கு தேசம், அகாலி தளம், பிஜு ஜனதா தளம் போன்ற கட்சிகள் ஆதரவுடன்தான் காங்கிரஸ் வேட்பாளரோ அல்லது பாரதீய ஜனதா வேட்பாளரோ வெற்றி பெற முடியும்.

               காங்கிரஸ் சார்பில் நிதி மந்திரி பிரணாப் முகர்ஜி, துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரி உள்ளிட்ட சிலரது பெயர்களை பரிசீலித்து வருகிறது. இது தொடர்பாக தி.மு.க., திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் கருத்தை கேட்டறிந்து வருகிறது. 

              பாரதீய ஜனதா அப்துல்கலாமை மீண்டும் ஜனாதிபதியாக்கலாம் என்ற முடிவில் இருந்தது. ஆனால் அப்துல்கலாம் தன்னை ஒருமனதாக தேர்ந்து எடுக்க வேண்டும். போட்டியிருந்தால் வேண்டாம் என்று கூறி விட்டார். 


             அப்துல்கலாம் ஒரு முறை ஜனாதிபதியாக இருந்து விட்டதால் அவருக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்க பாரதீய ஜனதாவில் ஒரு பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் பாரதீய ஜனதாவும் வேட்பாளரை தேர்வு செய்ய முடியாமல் இருந்து வருகிறது. 

             இந்த நிலையில் பாராளுமன்ற முன்னாள் சபாநாயகர் பி.ஏ.சங்மா ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முன் வந்துள்ளார். இவர் சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவராக இருக்கிறார். வடகிழக்கு மாநிலமான மேகாலயாவில் முதல்-மந்திரி பதவி வகித்தவர்-மலைவாழ் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்.
   
          அவர் கடந்த 15-ந்தேதி சென்னை வந்து முதல்- அமைச்சர் ஜெயலலிதாவை சந்தித்து ஜனாதிபதி தேர்தலில் தனக்கு அ.தி.மு.க. ஆதரவு அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அவரது வேண்டுகோளை முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஏற்றுக் கொண்டார். 


labels:பாரதீய ஜனதா, 

No comments:

Post a Comment