மும்பையில் நேற்று முன்தினம் நடந்த ஐ.பி.எல். கிரிக்கெட் லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி சாய்த்தது.
ஆட்டம் முடிந்ததும், கொல்கத்தா அணியின் உரிமையாளரான நடிகர் ஷாருக்கான் தனது குழந்தைகளுடன் அடையாள அட்டை இல்லாமல் மைதானத்துக்குள் நுழைந்தார். அவரை பாதுகாவலர்கள் தடுத்து நிறுத்தினர்.
இதனால் பாதுகாவலர்களுடன் அவர் வாக்குவாதம் செய்து கைகலப்பிலும் ஈடுபட்டார். அப்போது அவர் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. போலீசார் தலையிட்டு, ஷாருக்கானை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.
நான் மைதானத்துக்குள் எனது குழந்தைகளை அழைத்துச் செல்லவே வந்தேன். சம்பவம் நடந்த போது நான் போதையில் இருந்ததாக கூறுவது தவறு.
மும்பை கிரிக்கெட் சங்க பாதுகாவலர்கள் என்னிடம் மிகுந்த கோபத்துடன் நடந்து கொண்டனர். எனது குழந்தைகளை பாதுகாவலர்கள் தள்ளியதால் நான் ஆத்திரம் அடைந்தேன். கோபத்தில் சில வார்த்தைகளை பேசினேன்.
நான் ஒரே ஆள் ஆனால் அங்கு பாதுகாவலர்கள் உள்பட 25 நிர்வாகிகள் இருந்தனர். அவர்கள் முரட்டுத்தனமாக நடந்து கொண்டனர். அவர்கள்தான் என்னிடம் மன்னிப்பு கேட்கவேண்டும்.
நான் மன்னிப்பு கேட்க மாட்டேன். தடை குறித்து எனக்கு தெரியாது. எனக்கு தடை விதித்தாலும் கவலைப்படபோவதில்லை. மும்பை கிரிக்கெட் சங்க தலைவரை சந்தித்து பேச உள்ளேன். சங்க நிர்வாகிகள் நடந்து கொண்ட விதம் அவர்கள் பேசிய தகாத வார்த்தைகள் குறித்து புகார் செய்வேன்.
labels:ஐ.பி.எல். கிரிக்கெட்,போலீசார்,
No comments:
Post a Comment