ஆப்ரிக்க நாடான கானாவில் நேற்றிரவு சரக்கு விமானம் ஒன்று தரையிறங்கும் போது அருகில் உள்ள கட்டிடத்தில் மோதி விபத்திற்குள்ளானதில் 10 பேர் பலியாயினர்.
கானா, தலைநகர் அக்காரா நகரில் உள்ள கோட்டாகா சர்வதேச விமான நிலையத்தில் நேற்றிரவு நைஜீரியா நாட்டிற்கு சொந்தமான “அலையட்டு ஏர்” எனும் போயிங் 727 சரக்கு விமானம் தரையிறங்கியது.
அப்போது ஒடுதளத்தை விட்டு சற்று விலகியதால் அருகே இருந்த கட்டிடத்தின் மீது மோதியது. இதைத்தொடரந்து பயணிகளை கொண்டு செல்வதற்காக வந்த பேருந்து மீதும் மோதி விபத்திற்குள்ளானது.
இதில் விமானத்தில் வால்பகுதி முற்றிலும் சேதமடைந்ததுடன் 10 பேர் பலியாயினர். விமானிகள் காயமடைந்தனர்.
No comments:
Post a Comment