பழம்பெரும் நடிகர் காகா ராதா கிருஷ்ணன், நேற்று இரவு மாரடைப்பால் இறந்தார். தமிழ்த் திரையுலகில்,
சந்திரகிரி படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான ராதாகிருஷ்ணன்,86, மங்கையர்கரசி, மனோகரா, மாயி, தேவர் மகன் உட்பட, 600க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
சென்னை தி.நகரில் வசித்து வந்த காகா ராதாகிருஷ்ணனுக்கு, கடந்த சில தினங்களுக்கு முன், உடல் நலம் பாதிக்கப்பட்டு, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, வீடு திரும்பி இருந்தார்.
இந்நிலையில், நேற்று இரவு, 10.30 மணிக்கு, திடீரென மாரடைப்பால் இறந்தார். இவரது இறுதிச் சடங்கு, இன்று மாலை, 4.00 மணிக்கு நடக்கிறது.

ORU NALLA KALINGANAN IZNTHU VITTOM
ReplyDelete