HAI FRIENDS PLEASE CLICK THE ADD.

Thursday, 14 June 2012

நி...த்தியானந்தா மீண்டும் போலீசாரால் கைது ....

                             ஜாமீனில் விடுதலையான நித்தியானந்தா மீண்டும் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து, அவரை மைசூர் சிறையில் அடைக்குமாறு ராமநகரம் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீராமரெட்டி உத்தரவிட்டுள்ளார். 


             இதன்படி நித்தியானந்தாவை 10 நாள் நீதிமன்ற காவலில் வைத்து விசாரணை நடத்தப்படும். 

              பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் நித்தியானந்தா நடந்துக் கொண்டதால், அவர் மீது கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போலீசார் விளக்கம் அளித்துள்ளனர். மேலும், 



             மீண்டும் கைது செய்யப்பட்டுள்ள நித்தியை ராமநகரம் மாவட்ட ஆட்சியர் முன் ஆஜர்படுத்தினர். முன்னதாக, செய்தியாளர்களை தாக்கிய வழக்கில் ராமநகரம் அமர்வு நீதிமன்றம்,


             நித்தியானந்தாவிற்கு இன்று ஜாமீன் வழங்கியது. ஜாமீன் வழங்கிய சிறிது நேரத்திலேயே, நித்தியானந்தா மீண்டும் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


சீடர்கள் அதிர்ச்சி... இளைய ஆதினம் பொறுப்பிலிருந்து நித்தி நீக்கம்?

             ஜாமீனில் வெளிவந்த சிறிது நேரத்திலேயே நித்தியானந்தா மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளதால், அவரத சீடர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 



             இந்நிலையில் ‘‘நித்யானந்தாவை இளைய ஆதீனம் பதவியில் இருந்து நீக்குவது தொடர்பான விஷயத்தில் அவசரம் காட்ட முடியாது. அதுதொடர்பாக ஒரு மீட்டிங்கில் முக்கியமாக ஆலோசித்து கொண்டு இருக்கிறேன். அந்த மீட்டிங் முடிந்த பிறகு எனது முடிவை சொல்கிறேன்’’ என்று மதுரையில் இன்று மூத்த ஆதீனம் அருணகிரிநாதர் கூறினார்.

No comments:

Post a Comment