ஜெகன்மோகனை 5 நாள் சி.பி.ஐ. காவலில் வைத்து விசாரிக்க ஆந்திர ஐகோர்ட்டு நேற்று அனுமதி வழங்கியது. 3-ந்தேதி (இன்று) முதல் 7-ந்தேதி வரை காலை 10.30 மணி முதல் மாலை 5 மணி வரை விசாரணை நடத்தலாம் என்று நீதிபதி சந்திரகுமார் உத்தரவிட்டு இருந்தார்.
அதன்படி ஜெகன்மோகனிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் இன்று விசாரணையை தொடங்கினார்கள். ஐதராபாத் சிறையில் இருக்கும் அவரை சி.பி.ஐ. அதிகாரிகள் பலத்த பாதுகாப்புடன் அங்கிருந்து 300 மீட்டர் தொலைவில் உள்ள ஜெயில் டி.ஜி.பி. அலுவலகத்துக்கு காலை 10.40 மணிக்கு அழைத்து சென்றனர்.
காலை 10.55 மணி அளவில் அவரிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணையை தொடங்கினார்கள். கோர்ட்டு உத்தரவுப்படி 2 வக்கீல்கள் விசாரணையின் போது உடன் இருந்தனர். மாலை 5 மணி வரை அவரிடம் விசாரணை நடைபெறும்.
No comments:
Post a Comment