திருமண இணையத்தளங்களில் கவர்ச்சிகரமான விளம்பரம் தந்து 22 பெண்களிடம் மோசடி செய்த இளைஞர் ஒருவரை ஹைதராபாத் பொலிஸார் கைது செய்தனர்.
ரவிகிஷோர் என்ற இளைஞர், பிரபலமான திருமண இணையத்தளங்களில் தன்னைப் பற்றிய மிகைப்படுத்தப்பட்ட பொய்யான தகவல்களைக் கூறி திருமண விளம்பரம் செய்தார்.
இதனை நம்பிய 54 பெண்கள் இவரிடம் தொடர்பு கொண்டு விபரங்களைக் கேட்டுள்ளனர் . அவர்களில் தன்னிடம் சிக்கிய 22 பெண்களிடம் இருந்து இவர் ரூபா 12 இலட்சம் வரை பெற்று ஏமாற்றியுள்ளார்.
இவ்வாறு பெற்ற பணத்தை உல்லாசமாக இருப்பதற்கும் விலையுயர்ந்த பொருட்கள் வாங்குவதற்கும் உல்லாச விடுதிகள் செல்வதற்கும் செலவழித்துள்ளார்.இவ்வாறு ஏமாந்த பெண்களில் ஒரு பெண் ஜூன் 7 ஆம் திகதி ரவி கிஷோர் குறித்து கொடுத்த புகாரின் அடிப்படையில் சைபர் கிரைம் பொலிஸார் விசாரணை மேற்கொண்டனர். பெரும் முயற்சிக்குப் பின்னர் ரவி கிஷோரை ஜூன் 11 அன்று கைது செய்தனர்.
இவ்வளவுக்கும் காரணம் அவர் கொடுத்த கவர்ச்சிகரமான தகவலை நம்பி அந்தப் பெண்கள் ஏமாந்ததுதான் என்கின்றனர் பொலிஸார். ரவி கிஷோர் தான் மும்பை ஐ.ஐ.டி.யில் படித்து பட்டம் பெற்றவர் என்றும் கொலம்பியா பல்கலையில் எம்.எஸ்.படித்ததாகவும் தற்போது ஹைதராபாத் மைக்ரோசொப்ட் கம்பனியில் மூத்த பதவியில் வேலை செய்வதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
இவற்றை எல்லாம் ஒவ்வொன்றாக ஆராய்ந்த பொலிஸார் இறுதியில் ரவி கிஷோர் அந்தத் திருமண இணையத் தளத்தில் தெரிவித்திருந்த தகவல்கள் எல்லாமே பொய் என்று கண்டுபிடித்தனர்.இது குறித்து தகவல் வெளியிட்ட சைபர் கிரைம் பொலிஸார், திருமண இணையத்தளங்களில் பெண் அல்லது ஆண் குறித்து தகவல்களைத் தேடுபவர்கள் முதலில் தீர விசாரித்துக் கொள்ள வேண்டும் என்கின்றனர்.
மேலும் ஆண்களைக் கவர்ந்திழுக்க கவர்ச்சிகரமாகத் தோற்மளிக்கும் பெண்கள் தகவல்களைக் கொடுத்து பொய்யான தகவல்களையும் சில இணையத் தளங்கள் கொடுக்கின்றன. இவற்றின் மூலம் ஆண்களிடம் இருந்து பணம் பறிக்கும் போக்கு உள்ளது. பெரும்பாலான பெண்கள் இணையத்தள அரட்டை, செட்டிங், தகவல் பரிமாற்றறம் என்று பொழுது போக்கும் நிலையில் சில திருமண இணையத்தளங்கள் இதனைத் தங்கள் வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்டு விடுகின்றன.
என÷ வ இத்தகைய திருமண இணையத்தள தகவல்கள் குறித்து மிகவும் எச்சரிக்கையாக அணுக வேண்டும். யாரேனும் பணம் தொடர்பாக பேசினாலோ, உடல் ரீதியான மோசமான பேச்சுகள் மூலம் தொடர்பு கொண்டாலோ விழிப்புடன் இருக்குமாறு சைபர் கிரைம் பொலிஸார் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளனர்.
No comments:
Post a Comment