ஜுன் 8 - 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் கைதாகி ஜாமீனில் விடுதலை ஆகியிருக்கும் தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஆ.ராசாவை, மு.க.ஸ்டாலின் மற்றும் கனிமொழி ஆகியோர் நேற்று டெல்லியில் சந்தித்துப் பேசினர்.
இவ்வழக்கு தொடர்பாக சி.பி.ஐ. கோர்ட்டில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் ராசா தவிர கனிமொழி உட்பட அனைவரும் ஜாமீனில் விடுதலை ஆகிவிட்ட நிலையில் கடைசியாக ஆ.ராசாவுக்கு சி.பி.ஐ. நீதிமன்றம் நிபந்தனையுடன் கூடிய ஜாமீனை வழங்கியது.
இதையடுத்து டெல்லியிலேயே தங்கியிருக்கும் ஆ.ராசாவை, மு.க. ஸ்டாலின் டெல்லியில் சந்தித்து பேசினார். அவருடன் அவரது மனைவி துர்கா ஸ்டாலின், மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகன், கனிமொழி, டி.ஆர். பாலு, தயாநிதிமாறன் ஆகியோரும் இருந்தனர்.
No comments:
Post a Comment