HAI FRIENDS PLEASE CLICK THE ADD.

Thursday, 14 June 2012

டெல்லி அரசியலில் மாற்றம்...... பிரணாபா, அப்துல் கலாமா?.....சவால் விடும் மமதா!

            காங்கிரஸ் கூட்டணி தங்களது ஜனாதிபதி வேட்பாளராக பிரணாப் முகர்ஜியை அறிவித்தால், திரிணாமூல் காங்கிரஸ் அப்துல் கலாமை தங்கள் வேட்பாளராக அறிவிக்கும் என்று திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி. குனல் கோஷ் தெரிவித்துள்ளார்.

           சோனியாவுடன் இன்று நடைபெற்ற அவசர ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு பிரணாப் முகர்ஜி அல்லதுஹமித் அன்சாரி ஆகியோரை காங்கிரஸ் ஜனாதிபதி பதவிக்கு பரிந்துரை செய்யும் என்று மமதா பேனர்ஜி அறிவித்தது தவறு என்றும் காங்கிரஸ் கட்சி கண்டனம் வெளீயிட்டது.

        
 ஆனால் சோனியாவின் சம்மதத்துடந்தான் மமதா அறிவிப்பை வெளியிட்டதாக தற்போது திரிணாமூல் கூறியுள்ளது.
 
          "காங்கிரஸ் கட்சி பிரணாப் முகர்ஜி அல்லது ஹமித் அன்சாரியை ஜனாதிபதி வேட்பாளாராக அறிவித்தால் நாங்கள் மற்றும் சமாஜ்வாடி அதனை எதிர்த்து அப்துல் கலாமை நிறுத்தும்" என்று குனால் கோஷ் தெரிவித்துள்ளார்.

          ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளர்களுக்கு எதிராக திரிணாமூல், சமாஜ்வாடி கட்சிகள் பிரதமர் மன்மோகன் சிங், அல்லது அப்துல் கலாம் அல்லது சோம்நாத் சாட்டர்ஜி ஆகியோர் பெயர்களை பரிந்துரை செய்தது.

        ஆனால் திரிணாமூல், சமாஜ்வாடி வேட்பாளர் பரிந்துரைகளை காங்கிரஸ் கட்சி நிர்தாட்சண்யமாக நிராகரித்தது.

        இதற்கிடையே மமதா பெயர்களை வெளியிட்டத்துதான் காங்கிரஸ் நிராகரிப்புக்கு காரணம் என்று கூறப்பட்டது. ஆனால் இது குறித்து திரிணாமூல் காங்கிரஸ் கூறுகையில்:

        "நேற்று மமதா பேனர்ஜி, சோனியாகாந்தியைச் சந்திக்க சென்றிருந்தார். உரையாடல் முடிந்தவுடன் மமதா சோனியாவிடம் பெயர்களை வெளியிடலாமா என்று அனுமதி கேட்டார். வெளியே செய்தியாளர்கள் நிற்கிறார்கள் என்று கூறிய மமதாவுக்கு பெயர்களை வெளியிட சோனியாதான் அனுமதி கொடுத்தார். இதுதான் நடந்தது.
 

    ஆனால் தற்போது காங்கிரஸ் கூறுகிறது மமதா பெயர்களை வெளியிட்டுருக்க கூடாது என்று. காங்கிரஸ் கட்சியின் குற்றச்சாட்டுகளில் உண்மையில்லை. மமதா கூறியது அனைத்தும் சோனியா காந்திக்கு நன்றாகத் தெரிந்ததே" என்று கூறியுள்ளது.

      ஜனாதிபதி வேட்பாளர் விவகாரத்தில் ஏற்பட்டுள்ள இந்த கூட்டணிச் சிக்கலால் டெல்லி அரசியலில் மாற்றம் ஏற்படுமா என்று அனைவரும் இந்த மோதலை கூர்ந்து கவனித்து வருகின்றனர்.

No comments:

Post a Comment