மார்க்கோ போலோ ஸ்டிராங், பிளாக் ரைஸ் ஸ்டிராங், கோல்டன் ஈகிள் லெகர், கோல்டன் ஈகிள் டீலக்ஸ் ரூ.65ல் இருந்து ரூ.70 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
கோல்ட், பிரிட்டிஷ் எம்பயர் ரு.95ல் இருந்து ரூ.100 ஆனது. கிங்பிஷர் ஸ்டிராங், புல்லட் ஜிங்காரோ ரூ.75ல் இருந்து ரூ.80 ஆனது.
கிங்பிஷர் லெகர், சேண்ட் பைப்பர் ரூ.70ல் இருந்து ரூ.80 ஆனது.
எஸ்என்ஜே டென் தவுசன், ஹை ஓல்டேஜ் ரூ.80ல் இருந்து ரூ.90 ஆனது.
டாஸ்மாக் கடைகளில் பீர் விலை ரூ.5 முதல் ரூ.10 வரை இன்று காலை முதல் உயர்ந்தது.
இதனால் ரூ.300 கோடி கூடுதல் லாபம் கிடைக்கும். டாஸ்மாக் கடைகளில் திடீரென விலை உயர்த்தியதால் குடிமகன்கள் அதிர்ச்சி அடைந்தனர். தமிழ்நாடு முழுவதும் 6,804 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இங்கு 30 ஆயிரத்துக்கும் அதிகமான ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். கடந்த 3 மாதங்களில் மட்டும் 108 கடைகள் கூடுதலாக திறக்கப்பட்டன.
ஆனால், கோடை காலத்தில் பீர்கள் தட்டுப்பாடு, டாஸ்மாக் கடைகளில் குளிர்ச்சியில்லாத பீர் வினியோகிக்கின்றனர், அதிக விலைக்கு விற்கின்றனர் என்று குடிமகன்கள் புகார் கூறுகின்றனர்.
இதையடுத்து, கடந்த 11ம் தேதி தமிழ்நாடு முழுவதும் உள்ள மதுக்கடைகளில் எந்தெந்த ரகங்களில் எத்தனை பாட்டில்கள் உள்ளன என்று கடை வாரியாக கணக்கெடுக்கும் பணி நடந்தது. இப்பணி முடிந்ததும் ஒவ்வொரு மதுக் கடையில் இருந்தும் டாஸ்மாக் பிராந்திய அலுவலகங்களுக்கு ஸ்டாக் நிலவரம் தெரிவிக்கப்பட்டது.
பீர் தற்போது குறைந்தபட்சம் ரூ.65ல் இருந்து ரூ.95க்கு விற்கப்படுகிறது. விலை உயர்த்துவது தொடர்பாக டாஸ்மாக் நிர்வாக இயக்குனர் சவுண்டையா தலைமையில் நேற்றுமுன்தினம் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, இன்று காலை முதல் பீர் விலைஉயர்த்தப்பட்டது.
குறைந்தபட்சம் ரூ.5 முதல் ரூ.10 வரை விலைகள் உயர்த்தப்பட்டுள்ளன. இதனால் காலையில் பீர் வாங்க சென்றவர்கள் விலையை கேட்டு அதிர்ச்சி அடைந்தனர்.
கடந்த ஆண்டு 285 லட்சம் சேஸ் பீர்பாட்டில்கள் விற்கப்பட்டன. இந்த ஆண்டு 384 லட்சம் சேஸ் பீர் பாட்டில்கள் விற்கும் என்று டாஸ்மாக் எதிர்பார்க்கிறது. இந்த விலை ஏற்றத்தால் இந்த நிதியாண்டில் டாஸ்மாக் பீர் விற்பனையில் மட்டும் கூடுதலாக ரூ.300 கோடி லாபம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment