அன்னாஹசாரே ஊழலுக்கு எதிராக போராடி வருகிறார். பாபா ராம்தேவ் முறைகேடாக வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் இந்தியர்களின் கறுப்புபணத்தை மீண்டும் இந்தியாவிற்கு கொண்டுவர போராட்டம் நடத்தி வருகின்றார்.
இந்நிலையில் இன்று இவர்கள் இணைவரும் இணைந்து டெல்லி ராம்லீலா மைதானத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தில் களமிறங்கியிருப்பது ஆளும் காங்கிரசுக்கு தலைவலியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
பிரதமர் மன்மோகன்சிங் மீது ஊழல் புகார்:
நிலக்கரி தொடர்பாக மன்மோகன் முறைகேடு செய்திருக்கிறார் என அன்னாகுழு கூறிவருகின்றது. இதுதொடர்பாக இப்போராட்டத்தில் பேச்சுவார்த்தை நடைபெறும் என்று டெல்லியிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்குமுன்பு, கடந்த ஆண்டு ஜுன் மாதம் இதே ராம்லீலா மைதானத்தில் உண்ணாவிரதப் போராட்டம் இருந்த போது பொலிஸார் தடியடி நடத்தி விரட்டினார்கள்.
இதில் ஏராளமானோர் காயமடைந்ததும் ஒரு பெண் பலியானதும் குறிப்பிடத்தக்கது.
இன்று காலை 8 மணிக்கு தொடங்கிய உண்ணா விரதப்பேராட்டம் மாலை 6 மணிக்கு முடியும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
No comments:
Post a Comment