சென்னை அரசு மருத்துவமனைகளில்பயிற்சி மருத்துவர்கள் மேற்கொண்டுவரும் வேலை நிறுத்தப்போராட்டத்தால்,நோயாளிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 2ஆம் தேதி நோயாளியை பார்க்க வந்தவழக்கறிஞர்கள் சிலர், பயிற்சிமருத்துவர்களை தாக்கியதை தொடர்ந்து அரசுடாக்டர்கள், பயிற்சி டாக்டர்கள், முதுநிலைபயிற்சி மருத்துவர்கள் போராட்டத்தில்ஈடுபட்டனர்.
இந்த நிலையில் அரசு மருத்துவர்களுக்கு ஆதரவாக பயிற்சி மருத்துவர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.நூற்றுக்கும் மேற்பட்ட பயிற்சி மருத்துவர்கள் போராட்டத்தில் கலந்துகொண்டுள்ளதால் நோயாளிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தினமும் 10 ஆயிரத்திற்கும் மேலான புறநோயாளிகள் அரசு பொதுமருத்துவமனையில் சிகச்சை பெற்று செல்கிறார்கள். 4000 பேர் உள்ளேதங்கியும் சிகிச்சை பெறுகிறார்கள். இவர்களுக்கு அரசு டாக்டர்கள் மட்டும்இன்று சிகிச்சை அளித்தனர்.
இந்த போராட்டம் காரணமாக தொடர் சிகிச்சை பெற்று வரும்நோயாளிகளில் சிலர் திருப்பி அனுப்பப்படுவதாக கூறப்படுகிறது. எனினும்மருத்துவமனையில் பணிபுரியும் சுமார் 2 ஆயிரம் அரசு மருத்துவர்கள்வழக்கம்போல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
பல்வேறு துறை டாக்டர்கள், மூத்த மருத்துவர்கள் போராட்டத்தில்பங்கேற்கவில்லை. புறநோயாளிகளுக்கான சிகிச்சை பிரிவு வழக்கம்போலசெயல்பட்டன. அங்கு அரசு டாக்டர்கள் மட்டும் பணியில் ஈடுபட்டனர்.பயிற்சி டாக்டர்கள் இல்லாததால் சிகிச்சை அளிப்பதில் தாமதமும் சிரமமும்ஏற்பட்டன.
இதேபோல ஸ்டான்லி அரசு மருத்துவமனையிலும், கீழ்ப்பாக்கம் அரசுமருத்துவமனையிலும் பயிற்சி டாக்டர்கள் வேலைநிறுத்தத்தில்ஈடுபட்டுள்ளதால் நோயாளிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து ஸ்டான்லி மருத்துவமனை டீன் கீதாலட்சுமி கூறுகையில்,பயிற்சி டாக்டர்கள் போராட்டத்தால் நோயாளிகளுக்கு எந்த பாதிப்பும்இல்லை. அரசு டாக்டர்கள் அனைத்து துறைகளிலும் வழக்கம்போல்சிகிச்சை அளித்தனர் என்றார்.
பயிற்சி மருத்துவர்கள் போராட்டத்தால் எவ்வித பாதிப்பும் இன்றி மருத்துவமனைவழக்கம்போல் இயங்குவதாக அரசு பொது மருத்துவமனை முதல்வர் கனகசபைதெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் அரசு மருத்துவர்களுக்கு ஆதரவாக பயிற்சி மருத்துவர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.நூற்றுக்கும் மேற்பட்ட பயிற்சி மருத்துவர்கள் போராட்டத்தில் கலந்துகொண்டுள்ளதால் நோயாளிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தினமும் 10 ஆயிரத்திற்கும் மேலான புறநோயாளிகள் அரசு பொதுமருத்துவமனையில் சிகச்சை பெற்று செல்கிறார்கள். 4000 பேர் உள்ளேதங்கியும் சிகிச்சை பெறுகிறார்கள். இவர்களுக்கு அரசு டாக்டர்கள் மட்டும்இன்று சிகிச்சை அளித்தனர்.
இந்த போராட்டம் காரணமாக தொடர் சிகிச்சை பெற்று வரும்நோயாளிகளில் சிலர் திருப்பி அனுப்பப்படுவதாக கூறப்படுகிறது. எனினும்மருத்துவமனையில் பணிபுரியும் சுமார் 2 ஆயிரம் அரசு மருத்துவர்கள்வழக்கம்போல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதேபோல ஸ்டான்லி அரசு மருத்துவமனையிலும், கீழ்ப்பாக்கம் அரசுமருத்துவமனையிலும் பயிற்சி டாக்டர்கள் வேலைநிறுத்தத்தில்ஈடுபட்டுள்ளதால் நோயாளிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து ஸ்டான்லி மருத்துவமனை டீன் கீதாலட்சுமி கூறுகையில்,பயிற்சி டாக்டர்கள் போராட்டத்தால் நோயாளிகளுக்கு எந்த பாதிப்பும்இல்லை. அரசு டாக்டர்கள் அனைத்து துறைகளிலும் வழக்கம்போல்சிகிச்சை அளித்தனர் என்றார்.
பயிற்சி மருத்துவர்கள் போராட்டத்தால் எவ்வித பாதிப்பும் இன்றி மருத்துவமனைவழக்கம்போல் இயங்குவதாக அரசு பொது மருத்துவமனை முதல்வர் கனகசபைதெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment