தூத்துக்குடியில் ஆசைக்கு இணங்காத இளம்பெண்ணை கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
தூத்துக்குடி தபால் தந்தி காலனி 8வது தெருவைச் சேர்ந்தவர் ராமசுப்பிரமணியன். அங்குள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். அவரது மனைவி வித்யாலெட்சுமி.
அவர்களது தெருவின் பின்புறம் வசிக்கும் பால்ராஜ் மகன் பால் ஜெயபிரதீப். டிப்ளமோ படித்துள்ள அவர் விஜயலெட்சுமியின் அழகில் மயங்கி அவரை அடைய பலமுறை முயற்சி செய்தார்.
இந்நிலையில் கடந்த 23-5-2011 அன்று இரவு ராமசுப்பிரமணியன் வெளியே சென்ற நேரத்தில் அவரது வீட்டிற்குள் புகுந்த ஜெயபிரதீப் வித்யாலெட்சுமியை பலாத்காரம் செய்ய முயன்றார்.
அவரது ஆசைக்கு இணங்க மறுத்த வித்யாலெட்சுமி போராடவே ஜெயபிரதீப் ஆத்திரத்தில் கத்தியை எடுத்து அவரை சரமாரியாகக் குத்திக் கொலை செய்தார்.
இது குறித்து சிப்காட் போலீசார் விசாரணை நடத்தி பால் ஜெயபிரதீப்பை கைது செய்தனர்.
இந்த வழக்கு தூத்துக்குடி விரைவு நீதிமன்றம் எண் 2ல் நடந்து வந்தது. நீதிபதி கிருஷ்ணவள்ளி வழக்கை விசாரித்து பால் ஜெயபிரதீப்புக்கு ஆயுள் தண்டனையும், ரூ.1,500 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
No comments:
Post a Comment