மத்திய அரசின் பாட புத்தகத்தில் தமிழர்களை புண்படுத்தும் விதத்தில் கார்ட்டூன் இடம்பெற்றதற்கு முதல்வர் ஜெயலலிதா கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து முதல்வர் ஜெயலலிதா இன்று வெளியிட்ட அறிக்கை: 1965ம் ஆண்டுக்கு பிறகு இந்தி மொழி மட்டுமே இந்தியாவின் ஆட்சி மொழி என்பதற்கு செயல்வடிவம் கொடுக்கும் அப்போதைய மத்திய அரசின் முயற்சியை எதிர்த்து திராவிட இயக்கம் மிகப் பெரிய போராட்டத்தினை நடத்தியது.
இந்தப் போராட்டத்தை அடுத்து, ஆங்கிலம், இந்தி ஆகிய இரண்டு மொழிகளுமே தொடர்ந்து மத்திய அரசின் ஆட்சி மொழிகளாக இருக்கும் என உறுதிமொழி
அளிக்கப்பட்டது.
தமிழகத்தில் ஆட்சி மாற்றத்திற்கு ஒரு காரணமாக அமைந்தது இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம். இதை கொச்சைப்படுத்தும் வகையில், மத்திய அரசின் தேசிய
கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள 12ம் வகுப்பிற்கான அரசியல் அறிவியல் பாடப் புத்தகத்தில், ‘திராவிட இயக்கம்' என்ற தலைப்பின் கீழ் கேலிச் சித்திரம் இடம்பெற்றுள்ளது. இது மட்டுமில்லாமல், இந்தி திணிப்பு போராட்டத்தினை முன்னின்று நடத்திய தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் மொழிப்போர் தியாகிகளை அவமதிக்கும் வகையிலும் இது அமைந்துள்ளது.
தமிழக மக்களின் உணர்வுகளை புண்படுத்தும் வகையில் இந்த கேலிச் சித்திரம் வெளியிடப்பட்டுள்ளது மிகவும் வருத்தத்திற்குரியது. இதற்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பாட புத்தகத்திலிருந்து இந்த கேலிச் சித்திரத்தை உடனடியாக நீக்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார்.

No comments:
Post a Comment