HAI FRIENDS PLEASE CLICK THE ADD.

Tuesday, 19 June 2012

குடியரசுத் தலைவருக்கான தேர்தலாலும் தமிழக மக்களுக்குப் பயன் இல்லை.

                 காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை நெல் சாகுபடிக்கு ஜூன் 12-ம் தேதி மேட்டூரில் இருந்து தண்ணீர் திறந்து விடவேண்டும்.

                  ஆனால் தண்ணீர் திறந்துவிடுவதற்கு போதிய தண்ணீர் இல்லை. கர்நாடகம் காவிரியில் தண்ணீர் விட மறுப்பதே இதற்குக் காரணம். 40 ஆண்டுகளுக்கு மேலாக இந்தப் பிரச்னை நீடித்து வருகிறது.
              முல்லைப் பெரியாறு அணையில் உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகும்கூட நீர் மட்டத்தை 136 அடியில் இருந்து 142 அடியாக உயர்த்த முடியவில்லை. இந்தப் பிரச்னை 20 ஆண்டுகளுக்கும் மேலாக தீரவில்லை.
                     வட மாவட்ட மக்களின் குடிநீருக்கும்,விவசாயத்துக்கும் பயன்படும் பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு தடுப்பணை கட்ட முயலுகிறது. அதையும் தடுப்பார் யாரும் இல்லை.

நெய்யாற்றின் இடதுகரைக் கால்வாய் மூலம் கன்னியாகுமரி மாவட்டம் பயன் பெற்று வருகிறது. கேரள அரசு அண்மைக் காலமாக இதிலும் தண்ணீர் விட மறுத்து வருகிறது.


                                    இவ்வாறாக பல வகையிலும் தமிழகம் பாதிப்புக்கு ஆளாகிறது.
மாநிலங்களுக்கு இடையேயான பிரச்னையைத் தீர்ப்பதற்குத்தான் மத்திய அரசு இருக்கிறது. ஆனால் தமிழகத்தின் பிரச்னைகளை மத்திய அரசு தீர்க்கவில்லை என்பதுதான் வரலாறு.
இந்தியாவில் ஆட்சி மொழியாக தமிழும் இடம்பெற வேண்டும் என்று தமிழகத்தைச் சேர்ந்த தலைவர்கள் எவ்வளவோ முயன்றும் இன்னும் இடம் பெறவில்லை.


                          இவ்வாறு தமிழர்களும், தமிழும் கடந்த காலங்களில் இந்திய அரசால் புறக்கணிக்கப்பட்டதோடு, தமிழர்கள் வாழ்வையும் உரிமையையும்கூட இழந்து வருகின்றனர்.
இதன் உச்சகட்டமாக இலங்கையில் உள்ள தமிழர்களின் இனப் படுகொலைக்கும் இந்திய அரசு உடந்தையாக இருந்துள்ளது. தமிழினப் படுகொலை நடந்தபோது அதைத் தட்டிக் கேட்க இந்திய அரசு முன் வரவில்லை.


                         இதன் காரணமாக 2009-ல் நடைபெற்ற மக்களவைத் தேர்தலைப் புறக்கணிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன். ஆனால் யாரும் செவி சாய்க்கவில்லை. இப்போது நடைபெறும் குடியரசுத் தலைவருக்கான தேர்தலாலும் தமிழக மக்களுக்குப் பயன் இல்லை. 


                     ஒவ்வொரு தேர்தலிலும் தமிழ்நாட்டு மக்கள் ஏமாற்றப்படுகின்றனரே தவிர, அவர்களது குறையைக் களைய மத்தியில் உள்ளவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கூட்டணிக் கட்சிகளாலும் எதுவும் செய்ய இயலவில்லை. எனவே குடியரசுத் தலைவர் தேர்தலில் கலந்து கொள்ளாமல் இருப்பதே தமிழ்நாட்டுக்கு செய்யும் நன்மையாகும். 


                              இதனால் தேதிமுக தேர்தலைப் புறக்கணிக்கிறது என்று அவர் கூறியுள்ளார்.
வாக்குகள் எவ்வளவு? தமிழக சட்டப் பேரவையில் தேமுதிக உறுப்பினர்கள் எண்ணிக்கை 29 ஆகும். ஒரு சட்டப் பேரவை உறுப்பினரின் வாக்கு மதிப்பு 176 ஆகும். தேமுதிகவின் மொத்த உறுப்பினர்களின் மொத்த வாக்குகளின் மதிப்பு 5,104 ஆகும்.

No comments:

Post a Comment