இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின், ராஜ்யசபா எம்.பி.,யாக நேற்று பதவியேற்றுக் கொண்டார். ராஜ்யசபா தலைவர் ஹமீது அன்சாரியின் அலுவலக அறையில் இந்த பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சத்தீஸ்கர் முன்னாள் எம்.பி., பிரதீப்பும் கலந்து கொண்டார்.
இவர் 2005ம் ஆண்டு ஊழல் வழக்கிற்காக பதவி நீக்கம் செய்யப்பட்டவர் ஆவார். ஊழல் குற்றத்திற்காக பதவிநீக்கம் செய்யப்பட்ட முன்னாள் எம்.பி., ஒருவர் ராஜ்யசபா தலைவரின் அறைக்குள் அனுமதியின்றி எவ்வாறு வந்தார் என்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் பிரதீப், ச்சின் பதவியேற்ற பிறகு அன்சாரியுடன் எடுத்துக் கொண்ட போட்டோவிலும் உடன் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பிரதீப்பை யாரும் அழைக்கவில்லை என ராஜ்யசபா செயலாளரும் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment