வரதட்சணை கேட்டு மனைவி படுகொலை செய்யப்பட்டதற்கு தண்டனை குறைந்தது ஆயுள் தண்டனைதான். அதற்கும் குறைந்த தண்டனை வழங்க முடியாது என்று சுப்ரீம்கோர்ட்டு பரபரப்பான தீர்ப்பு வழங்கியுள்ளது.
உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ரூர்கீ என்ற இடத்தை சேர்ந்தவர் முகேஷ் பாத்நகர். இவர் தன்னுடைய மனைவி ரிணுவிடம் டெலிவிஷன் கூலர் உள்பட பல்வேறு விலை உயர்ந்த பொருட்களை பெற்றோர்களிடம் சென்று வாங்கி வரக்கோரி கொடுமைப்படுத்தி வந்தாராம்.
பெற்றோர்கள் வீட்டில் சிரமம்பட்டதால் முகேஷ் கேட்கும் பொருட்களை கொஞ்சம் கொஞ்சமாக வாங்கி வருவதாக ரிணுவிடம் கூறியுள்ளார். இல்லை நீ உடனே வாங்கி வர வேண்டும் என்று ரிணுவை கொடுப்படுத்தியுள்ளார்.
இதனால் பிரச்சினை முற்றவே சம்பவத்தன்று ரிணுவை தீ வைத்து எரித்து கொலை செய்துவிட்டார். இதுதொடர்பான வழக்கில் கீழ் கோர்ட்டானது முகேஷ் ரினுவின் மாமியார கைலோஷா என்ற கைலாஷ்வதி,ராஜேஸ் பாத்நகர் ஆகியோர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பு அளித்தது.
இந்த தண்டனையை எதிர்த்து சுப்ரீம்கோர்ட்டில் முகேஷ் சார்பாக அப்பீல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் முகேஷ் கூறியிருப்பதாவது:- ஆயுள் தண்டனை பெற்றுள்ள நானும் என் சகோதரர் ராஜேஷ் பாத்நகரும் குறைந்த வயதுடையவர்கள், எங்கள் தாயார் வயதானவர்.
மேலும் இந்த சம்பவமானது கடந்த 1996-ம் ஆண்டு நடைபெற்றது. இதையெல்லாம் கருத்தில் கொண்டு எங்களுக்கு தண்டனயை குறைக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கு சுப்ரீம்கோர்ட்டில் நீதிபதிகள் ஸ்வதந்தர் குமார், ரஞ்சன் கோகாய் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த படுகொலை கொடூரமாக நடந்துள்ளது. வரதட்சணைக்காக ஒரு இளம் பெண் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
கொலை செய்யப்பட்டவிதம் கொடூரமாக இருக்கிறது. அதனால் இந்தமாதிரியான வரதட்சணை மரணத்திற்கு ஆயுள்தண்டனைதான் குறைந்தது. ஆயுள் தண்டனைக்கும் குறைவாக தண்டனை வழங்க முடியாது என்று நீதிபதிகள் தீர்ப்பு அளித்தனர். இந்திய கிரிமினல் குற்றவியல் சட்டப்பிரிவு 304 பி-ன்படி இந்த படுகொலை நிரூபிக்கப்பட்டுள்ளது.
வரதட்ணைக்காக இந்த படுகொலை நடந்துள்ளது. குறிப்பாக தொலைக்காட்சி பெட்டி, ஏர்கூலருக்காக இந்த படுகொலை நடந்துள்ளது.மேலும் குற்றவாளியானவர் கோர்ட்டில் இந்த சாவு விபத்து என்று பொய் கூறியுள்ளார்.
அதனால் குற்றவாளிக்கு சாதகமாக இந்த கோர்ட்டு தன்னுடைய சுய அதிகாரத்தை பயன்படுத்தாது என்று நீதிபதி குமார் எழுதியுள்ள தீர்ப்பில் கூறியுள்ளார்.
சமையல் செய்யும்போது கியாஸ் ஸ்டவ் வெடித்துதான் ரிணு உயிரிழந்தார் என்றும் அவரை காப்பாற்ற முயன்ற எனக்கு உடலில் காயங்கள் ஏற்பட்டன என்று முகேஷ் கூறும் காரணங்களையும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் முகேஷ் உடலில் காயம் பட்டதற்கான தழும்பு எதுவும் இல்லை என்றும் நீதிபதிகள் தங்களுடைய தீர்ப்பில் கூறியுள்ளனர்.
No comments:
Post a Comment