முன்னாள் சபாநாயகரும் தேசியவாத காங்கிரஸ் தலைவர்களில் ஒருவருமான பி.ஏ.சங்மா ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகிறார். தேசியவாத காங்கிரஸ் கட்சி மத்தியில் காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு ஆதரவு அளித்து வருகிறது. சங்மா மகள் அகதா சங்மா மத்திய மந்திரி பதவி வகித்து வருகிறார்.
சங்மாவின் மகள் அகதா சங்மா மத்திய மந்திரி சபையில் நகர்ப்புற வளர்ச்சித்துறை மந்திரியாக பதவி வகித்து வருகிறார். இவர் கடந்த பாராளுமன்ற தேர்தலில் மேகாலயா மாநிலத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அப்போது அவருக்கு வயது 29. இதனால் இந்தியாவின் மிக இளவயது எம்.பி.யானார்.
தேசியவாத காங்கிரஸ் மத்திய மந்திரிசபையில் அங்கம் வகித்ததால் அகதா சங்மா மத்திய மந்திரியானார். தற்போது தந்தை சங்மா ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதுடன் கட்சியில் இருந்தும் ராஜினாமா செய்துவிட்டார்.
எனவே அகதா சங்மா மத்திய மந்திரிசபையில் நீடிக்க விரும்பவில்லை. மந்திரி பதவியை ராஜினாமா செய்து விட்டு தந்தைக்கு ஆதரவு தெரிவிக்க முடிவு செய்து உள்ளார்.
விரைவில் அவர் ராஜினாமா செய்வார் என்று கூறப்படுகிறது.
No comments:
Post a Comment