HAI FRIENDS PLEASE CLICK THE ADD.

Tuesday 5 June 2012

மனமுடைந்த காயத்ரி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.


              எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் ஏராளமான மாணவ- மாணவிகள் அதிக மார்க் எடுத்து சாதனை படைத்துள்ளனர். தங்குவதற்கு வீடு கூட இல்லாத நிலையில் சாலையோரமாகவே தங்கி படித்த மாணவிகளும் சாதித்துக் காட்டியுள்ளனர். அதே நேரத்தில் குறைவான மார்க் எடுத்ததால் 2 மாணவிகள் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர்.
 
              போடி நாயக்கனூர் சண்முக சுந்தரபுரத்தைச் சேர்ந்த முனுசாமி என்பவரது மகள் விஜி, எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் வெற்றி பெற்று 303 மார்க் எடுத்திருந்தார். அதிக மார்க் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் இருந்த அவர் நேற்று இரவு அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு மயங்கி விழுந்தார். உடனடியாக போடி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக இறந்தார்.
 
              இதேபோல திண்டுக்கல் கிழக்கு கோவிந்தாபுரத்தைச் சேர்ந்த மாணவி காயத்ரி 230 மார்க் எடுத்து தேர்ச்சி அடைந்தார். குறைவான மதிப்பெண்களே கிடைத்ததால் மனமுடைந்த காயத்ரி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
 
           மதுரையை அடுத்துள்ள சமயநல்லூரைச் சேர்ந்த சவுந்தர்யா, உமைச்சிகுளத்தை சேர்ந்த பிரபாதேவி, வைரவ நத்தத்தை சேர்ந்த வளர்மதி, சோழவந்தான் முதலியார் பேட்டையைச் சேர்ந்த ஜெய மீனாட்சி, பூவந்தியைச் சேர்ந்த ப்ரியா ஆகிய 5 மாணவிகளும் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் தோல்வி அடைந்ததால் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றனர்.
 
          இவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். திருச்சி தீனதேவதானம் பகுதியைச் சேர்ந்த அரவிந்த் என்ற மாணவன் தேர்வு முடிவுகள் வெளியாகும் முன்பே, தோல்வி பயத்தில் நேற்று முன்தினம் தீக்குளித்தான். ஆஸ்பத்திரியில் அவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

No comments:

Post a Comment