HAI FRIENDS PLEASE CLICK THE ADD.

Wednesday 27 June 2012

உடல் எடையை குறைக்க தக்காளி பழம் மகிமை......

                        தக்காளியை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை அதிகரிக்காமல் இருக்கும் என்று சமீபத்தில்  மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

                      

                   நாம் அன்றாடம் உணவில் சேர்த்துக் கொள்ளும் தக்காளிப் பழத்தின் மருத்துவக் குணங்களைப் பற்றி இங்கே அறிந்து கொள்வோம். தக்காளியைப் பொதுவாக, சமைக்காமல் பச்சையாகச் சாப்பிடுவதால் இதன் முழுப்பலனையும் பெற முடிகிறது. 

                    அப்படிச் சாப்பிடுவது உடலுக்குப் பலம் தருகிறது. இன்னும் சொல்லப்போனால், உடல் பலவீனமாக இருக்கிறவர்களுக்கு அது டானிக் போன்றது.
                  இதில் வைட்டமின் ஏ- சுமார் 91 மில்லி கிராம் உள்ளது. தவிர வைட்டமின் பி-1, பி-2, 17 மில்லி கிராமும், வைட்டமின் சி- 9 மில்லி கிராமும், சுண்ணாம்புச்சத்து 2 மில்லி கிராமும் அடங்கி உள்ளன.

                
 

              இவை தவிர, நமது உடலில் ரத்த உற்பத்திக்குப் பயன்படுவதோடு மட்டுமின்றி, ரத்தத்தைச் சுத்திகாரிப்பதற்கும், சீரான ரத்த ஓட்டத்திற்கும் இது பயன்படுகிறது.

                   தக்காளியை எந்த விதத்தில் சாப்பிட்டாலும் அதன் சத்துக்கள் அனைத்தும் குறையாமல் நமக்குக் கிடைக்கும். குறிப்பாக இதை காலையிலும், மாலையிலும் சூப் செய்து சாப்பிட்டு வந்தால் தோல் நோய்கள் வராது என்பதை விட, தோலைப் பளபளப்பாக வைத்திருக்கும் தன்மை இதற்கு உண்டு.
   
             தக்காளியை சாப்பிடும் முன்பு சத்தம் செய்ய மறக்காதீர்கள். தக்காளியில் அதிக அளவு வைட்டமின் சி உள்ளது. தக்காளியைத் தொடர்ந்து சாப்பிடுவது இதயத்துக்கு நல்லது.

             உடலில் கொழுப்பு சேராமலும் தடுக்கும். தற்போது தக்காளியை தினமும் உணவில் சேர்த்துக் கொள்வதால் உடல் எடை அதிகரிக்காமல் பார்த்துக்கொள்ள  முடியும் என்று இங்கிலாந்து ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். பசியைத் தூண்டும் ஹார்மோன்களின் செயல் பாடுகளை தக்காளி கட்டுப்படுத்துகிறது.

               இதனால் அதிக அளவு சாப்பிடுவது தடுக்கப்பட்டு, உடல் எடை அதிகரிக்காமல் கட்டுக்குள் இருக்கிறது. சராசரி எடை கொண்ட 18 வயது முதல் 35 வயதுக்கு உள்பட்ட பெண்கள் இதற்கான ஆய்வில் ஈடுபடுத்தப்பட்டனர். 
    
              அவர்களில் ஒரு பிரிவினருக்கு  சாண்ட்விச்சுடன் கேரட் வழங்கப்பட்டது.
இதில் தக்காளி சாப்பிட்டு வந்தவர்கள் குறைவாகவே சாப்பிட்டனர். தக்காளி சாப்பிடுவது பசி உணர்வைக் கட்டுபாட்டுக்குள் வைக்கிறது என்று தெரிய வந்துள்

No comments:

Post a Comment