HAI FRIENDS PLEASE CLICK THE ADD.

Wednesday 6 June 2012

ஜனநாயக கடமையாற்ற வேண்டிய பொறுப்பு எனக்கு உள்ளது.....ஆ.ராசா ...சென்னைக்கும் நீலகிரிக்கும்....


        ஆ. ராசா சென்னைக்கு சென்று வர சி.பி.ஐ. கோர்ட்டு அனுமதி     2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு வழக்கில் ஆ.ராசாவை சி.பி.ஐ. போலீசார் கைது செய்தனர். அவர் ஒன்றரை ஆண்டுகளாக டெல்லி திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்தார்.  
 
             இந்த நிலையில் கடந்த 15-ந் தேதி ஆ.ராசாவை சி.பி.ஐ. கோர்ட்டு நிபந்தனை ஜாமீனில் விடுதலை செய்தது. ஆ.ராசா டெல்லியிலேயே தங்கி இருக்க வேண்டும். கோர்ட்டு அனுமதி பெறாமல் தமிழ்நாட்டுக்கோ, மத்திய தொலைத்தொடர்புத்துறை அலுவலகத்துக்கோ செல்லக் கூடாது என்று நிபந்தனை விதிக்கப்பட்டது.  
 
           இந்த நிலையில் ஜாமீன் நிபந்தனைகளை தளர்த்த கோரி ஆ.ராசா டெல்லி சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். மனுவில் அவர் கூறி இருப்ப தாவது:-  
 
            நீலகிரி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் என்ற முறையில் அங்கு ஜனநாயக கடமையாற்ற வேண்டிய பொறுப்பு எனக்கு உள்ளது. தி.மு.க.வின் கொள்கை பரப்பு செயலாளர் பதவியிலும் இருப்பதால் கட்சிப் பணியாற்ற வேண்டும்.   சி.பி.ஐ. கோர்ட்டுக்கு ஜூன் 11-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை கோடை விடுமுறை. அதனால் தினமும் விசாரணை இருக்காது. எனவே இந்த காலகட்டத்தில் நான் சென்னைக்கும், நீலகிரிக்கும் சென்றுவர அனுமதிக்க வேண்டும்.
 
          இந்த மனு நீதிபதி ஓ.பி.சைனி முன்பு  இன்று விசாரணைக்கு வந்தது. ஆ.ராசாவின் வாதத்தை ஏற்றுக் கொள்வதாகவும், அவர் சென்னைக்கும் நீலகிரிக்கும் செல்ல அனுமதி அளிப்பதாகவும் நீதிபதி ஓ. சைனி உத்தரவிட்டார்.

labels:நீதிபதி, ஓ.பி.சைனி,ஜாமீன், 
 

No comments:

Post a Comment