HAI FRIENDS PLEASE CLICK THE ADD.

Wednesday 20 June 2012

இராமேஸ்வரம் கடலில் தொடர்ந்து சூறாவளி.......



                                  இராமேஸ்வரத்தில் தொடர்ந்து வீசி வரும் சூறாவளியினால் கடலில் கொந்தளிப்பு ஏற்பட்டு வருவதால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல புதன்கிழமையுடன் தடை விதிக்கப்படலாம் என மீன் துறையினர் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனர்.

                                  வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி இருப்பதால் தமிழகக் கடலோரப் பகுதிகளில் சூறாவளியுடன் மழை பெய்யக் கூடும்என சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்திருந்தது. 
                            அதன் படி கடந்த 17 ஆம் திகதி முதல் வங்கக் கடலில் மணிக்கு 50 கி.மீ. வேகத்தில் சூறாவளி வீசியதால் கடலில் கொந்தளிப்பு ஏற்பட்டு இராட்சத அலைகள் எழுந்தன.
இச்சூழ்நிலையில் கடலில் மீன்பிடிப்பது சிரமம் என்பதால் கடந்த 18 ஆம் திகதி இராமேஸ்வரம், பாம்பன், மண்டபம் பகுதி மீனவர்கள் கடலுக்குச் செல்ல மீன் துறை தடை விதித்தது.
 
                         தொடர்ந்து, செவ்வாய்க்கிழமையும் வங்கக் கடலில் மணிக்கு 50 கி.மீ. வேகத்தில் சூறாவளி வீசியது. இதனால், கடலில் கொந்தளிப்பு ஏற்பட்டு சுமார் 6 முதல் 8 அடி உயரத்துக்கு இராட்சத அலைகள் எழுந்தன. இந்த நிலை புதன்கிழமையும் நீடித்தால் இராமேஸ்வரம், மண்டபம், பாம்பன் விசைப்படகு மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்ல அனுமதி டோக்கன் வழங்காமல்  தடை விதிக்கப்படலாம் என மீன்துறையினர் தெரிவித்தனர். 
                      இதுபோன்ற சூறாவளி, கடல் கொந்தளிப்பால் எழும்பும் இராட்சத அலைகள் போன்ற நிகழ்வுகள்  சுனாமிக்கு பிறகுதான் அதிகமக ஏற்பட்டு உள்ளதாகவும் இந்த சூழ்நிலையில் மீனவர்கள் மீன் பிடிக்கச் சென்றால் விபரீதம் ஏற்படும் எனவும் இராமேஸ்வரம் மீனவர்கள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment