கர்நாடக மாநிலம் பட்கல் என்ற இடத்தை சேர்ந்தவர்கள் நவுமான் முகமது மீரான் (வயது 52), முகமது நவுசிக் (29). சம்பவத்தன்று இவர்கள் 2 பேரும் துபாயில் இருந்து கோழிக்கோடு நெடுமாஞ்சேரி விமான நிலையத்தில் வந்து இறங்கினார்கள்.
அவர்கள் 2 பேரையும் பரிசோதித்த விமான நிலைய அதிகாரிகளுக்கு அவர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டது. இதனால் உடல் பரிசோதனை கூடத்திற்கு அவர்களை அழைத்து சென்றனர். அங்கு 2 பேரையும் முழுமையாக பரிசோதனை செய்தனர். அப்போது 2 பேரும் அணிந்திருந்த ஷுவுக்குள் தங்கம் பதுக்கி வைத்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
18 முதல் 22 காரட் கொண்ட 4 ஆயிரத்து 855 கிராம் தங்கம் அவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்டது. இதன் மதிப்பு ரூ.1 கோடியே 6 லட்சத்து 19 ஆயிரத்து 154 ஆகும். இதைத்தொடர்ந்து 2 பேரிடமும் விமான நிலைய போலீசார் மற்றும் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் 2 பேரும் அடிக்கடி அரபு நாடுகளுக்கு சென்று வருவதும், நூதன முறையில் தங்கத்தை கடத்தி வருவதும் தெரிய வந்தது.
இதையடுத்து நவுமான் முகமது மீரான், முகமது நவுசிக்கையும் கைது செய்த போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்திய பின்பு கோழிக்கோடு ஜெயிலில் அடைத்தனர்.
No comments:
Post a Comment