ஏழை தந்தையின் கனவை நிறைவேற்ற போலீஸ் அதிகாரியாகிறார் நந்தா. ஆனால் அவர் நினைத்தது போல நேர்மையாக பணியாற்ற முடியவில்லை. வளைந்து கொடுக்காவிட்டால் வாழ முடியாத சூழ்நிலை. மக்களை ஆட்டிப்படைக்கும் அரசியல்வாதிகள், அவர்களுக்கு பல்லக்கு தூக்கும் காவல் துறை அதிகாரிகள் என்ற வட்டத்துக்குள் நந்தாவால் பணியாற்ற முடியவில்லை. அரசியல்வாதி அழகம்பெருமாள் நகர்த்தும் காயில் வீழ்த்தப்படுகிறார் நந்தா. கடைசியில் வேலையை ராஜினாமா செய்துவிட்டு திரும்பும்போது அழகம்பெருமாளின் அவமானப்பேச்சு தாங்காமல் அவரை ரோட்டில் இழுத்துபோட்டு அடிக்கிறார். அழகம்பெருமாளின் ஆட்கள் நந்தாவை அடித்து துவைத்து அரைகுறை உயிரோடு போட்டுவிட்டுச் செல்கிறார்கள். ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்படும் நந்தா, உயிர் பிழைத்தாரா? மீண்டும் பணியில் சேர்ந்தாரா? நேர்மையான அதிகாரியாக அவரால் வெற்றி பெற முடிந்ததா? என்பது மீதி கதை. ‘வைஜயந்தி ஐ.பி.எஸ்’ மாதிரி ‘முத்துக்குமார் ஐ.பி.எஸ்’ என்று தலைப்பு வைத்திருந்தால் பொருத்தமாக இருந்திருக்கும்.
No comments:
Post a Comment