HAI FRIENDS PLEASE CLICK THE ADD.

Sunday, 30 October 2011

தீவிரவாதிகளுடன் தொடர்பு சவுதி அரேபிய பெண் ஒருவர் தண்டனை

அல் கய்தா தீவிரவாதிகளுக்கு உதவிய பெண்ணுக்கு சவுதி அரேபிய நீதிமன்றம் 15 ஆண்டு சிறை தண்டனை விதித்தது.
அல் கய்தா தீவிரவாதிகளுடன் தொடர்பு வைத்திருந்த சவுதி அரேபிய பெண் ஒருவர் (பெயர் வெளியிடப்படவில்லை) கடந்த ஜூலை மாதம் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 2 கைத்துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன. அந்த பெண் பற்றிய விவரங்கள் வெளியிடப்படவில்லை. ஆனால், கடந்த ஆகஸ்ட் மாதம் ஓகாஸ் என்ற பத்திரிகை, Ôஅல் கய்தா லேடிÕ என்று குறிப்பிட்டு கைது செய்யப்பட்ட பெண்ணுக்கு 45 வயதிருக்கும் என்ற தகவலை மட்டும் வெளியிட்டது.
இதற்கிடையில் அந்த பெண்ணிடம் நடத்திய விசாரணையில் அவர் அல் கய்தா தீவிரவாதிகள் தங்குவதற்கு இடம் அளித்தது, நிதி திரட்டி அல் கய்தா தீவிரவாதிகளுக்கு அனுப்பியது, ஆயுதங்கள் வைத்திருந்தது, சவுதியில் தீவிரவாத செயல்களை தூண்டியது தெரியவந்தது. 
அந்த பெண் மீதான விசாரணை கடந்த ஜூலை 31ம் தேதி தொடங்கியது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், தீவிரவாதிகளுக்கு உதவிய பெண்ணுக்கு 15 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. தீவிரவாத தடுப்பு நீதிமன்றத்தால் சவுதியில் பெண் ஒருவர் தண்டனை பெறுவது இதுவே முதல் முறை.

No comments:

Post a Comment