HAI FRIENDS PLEASE CLICK THE ADD.

Wednesday, 26 October 2011

மார்பக புற்றுநோய் வராமல் தடுப்பது

குழந்தையின்மை, டென்ஷன், தவறான உணவு முறை, ரசாயன உரம் உள்ள உணவுப் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பெண்களை தாக்கும் மார்பகப் புற்றுநோயை ஆரம்பத்தில் கண்டறிந்தால் அதை தடுத்து உயிரை பாதுகாக்கலாம் என்கிறார் டாக்டர் வீ.மு.சசிக்குமார். பெண்களைப் பொறுத்தவரை 40 வயதில் இருந்து மார்பகப் புற்றுநோய் தாக்க வாய்ப்புகள் உள்ளது. இதனால் 35 வயது முதல் பெண்கள் மார்பகப் புற்றுநோய் கண்டறியும் பரிசோதனை செய்து கொள்ள வேண்டியது அவசியம். இந்த வயதில் பெண்களின் மார்பகத்தில் திடீர் சுருக்கம் அல்லது வீக்கம், காம்பில் நீர்வடிதல் மற்றும் ரத்தக்கசிவு ஏற்படும் பட்சத்தில் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

மார்பகத்தில் சதைக் கோளங்கள் போன்ற வளர்ச்சியின் காரணமாக மார்பகம் பெரிதாக இருப்பது போன்ற உணர்வு ஏற்படும். இதில் 80 சதவீதக் கட்டிகள் கேன்சர் கட்டிகள் இல்லை என்பதும் உண்மை. இருப்பினும் அறிகுறிகள் ஏதும் தோன்றினால் பெண்கள் கேன்சருக்கான வாய்ப்பு உள்ளதா என்பதை பரிசோதிக்க வேண்டும்.மார்பகத்தில் கட்டிகள் ஏதும் இருக்கிறதா என்பதை பெண்கள் சுயபரிசோதனை மூலம் தெரிந்து கொள்ள முடியும். அழுத்தினால் கட்டிகள் இருப்பது போன்று தோன்றினாலோ, கட்டிகளில் வலி இருப்பது போல உணர்ந்தாலோ, வலி இல்லாவிட்டாலோ உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது. 

No comments:

Post a Comment